ஆஸ்திரேலியாவின் தனித்துவமான காலநிலையைப் புரிந்துகொள்ளுதல்!

Lake Eildon was built in the 1950's to provide irriga

Lake Eildon was built in the 1950's to provide irrigation water for the Goulburn Valley Credit: Construction Photography/Avalon/Getty Images

காலநிலை மாற்றம், காட்டுத்தீ மற்றும் வறட்சி உள்ளிட்டவை ஆஸ்திரேலியாவின் பல்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை அச்சுறுத்துகின்ற பின்னணியில், அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமாகும். இதுதொடர்பில் Phil Tucak ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்


ஆஸ்திரேலியாவானது வெவ்வேறு காலநிலை மண்டலங்கள், மழைப்பொழிவு, வெப்பநிலை மற்றும் வானிலை முறைகளில் கணிசமான மாறுபாடுகளைக் கொண்ட வறண்ட கண்டமாகும்.

வடக்கிலிருந்து தெற்கு வரை, வெப்பமண்டல சூறாவளிகள், வெள்ளம், வெப்ப அலைகள் மற்றும் வறட்சி ஆகியவை உட்பட பல தீவிர வானிலைகளை ஆஸ்திரேலியா அனுபவிக்கிறது.

ஆஸ்திரேலியாவின் காலநிலை அதன் பல்வேறு சுற்றுச்சூழல் கட்டமைப்புகளை வடிவமைக்கிறது. காலநிலை மாற்றம், காட்டுத்தீ மற்றும் வறட்சி ஆகியவை இக் கட்டமைப்புகளை மேலும் அச்சுறுத்துகின்ற பின்னணியில் அவற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமாகும்.
The stark landscape of the Monaro Tablelands which is one of 19 ecosystems collapsing in Australia - Image Greening Australia.JPG
The stark landscape of the Monaro Tablelands which is one of 19 ecosystems collapsing in Australia - Image Greening Australia. Credit: Annette Ruzicka
ஆஸ்திரேலியா ஒரு பெரிய நாடு என்பதால் நீங்கள் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, நிலப்பரப்பு, தட்பவெப்ப நிலைகள் மற்றும் வானிலை ஆகியவற்றில் கணிசமான மாறுபாடு உள்ளது.

"நான் வெயிலில் எரிந்த இந்த நாட்டை நேசிக்கிறேன், பரந்த சமவெளிகள், மலைத்தொடர்கள், வறட்சி மற்றும் வெள்ளத்தைக் கொண்டுவரும் மழை ஆகியவற்றைக் கொண்ட நாடு இது" என்பதாக ஆஸ்திரேலியக் கவிஞர் Dorothea Mackellar 1900-களின் முற்பகுதியில், எழுதிய புகழ்பெற்ற My Country என்ற கவிதை இந்த பரந்த பழுப்பு நிலத்தின் அழகை விவரிக்கிறது.

ஆஸ்திரேலியா பற்றிய இந்த வர்ணனை இன்றுவரை உண்மையாகவே இருக்கிறது.

மழை, வெள்ளம், வரட்சி காட்டுத்தீ என ஆஸ்திரேலியர்கள் அனுபவிக்கக்கூடிய சில தீவிர வானிலை நிகழ்வுகளை சுட்டிக்காட்டும் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த Catherine Ganter, காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணிகளே ஆஸ்திரேலியா அனுபவிக்கக்கூடிய பலதரப்பட்ட வானிலைகளுக்குக் காரணம் எனவும் அவர் சொல்கிறார்.
Australian climate zones based on temperature and humidity - credit BOM.png
Australian climate zones based on temperature and humidity - credit BOM.png
பூமியில் ஆஸ்திரேலியா ஆறாவது பெரிய நாடு. ஏழரை மில்லியன் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கொண்டிருந்தாலும், உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்து சதவீதத்தை மட்டுமே ஆஸ்திரேலியா கொண்டுள்ளது. அத்துடன் வித்தியாசமான காலநிலை மண்டலங்களையும் ஆஸ்திரேலியா கொண்டுள்ளது.

இந்த காலநிலை மண்டலங்களை வெப்பநிலை மற்றும் ஈரப்பதம், தாவரங்கள் மற்றும் பருவகால மழைப்பொழிவு ஆகியவற்றின் மாறுபாடுகளால் வகைப்படுத்தலாம். ஆஸ்திரேலியாவின் வானிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன.

சுற்றுச்சூழலைப் பற்றிய நுணுக்கமான புரிதலைக் கொண்டுள்ள ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிமக்கள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் ஆஸ்திரேலியாவில் தமது இருப்பிடத்தின் அடிப்படையில் வெவ்வேறு பருவகால நாட்காட்டிகளை அங்கீகரித்துள்ளனர்.
Lake Keepit in New South Wales - Image Wallula-Pixabay.jpg
Lake Keepit in New South Wales - Image Wallula-Pixabay
வானிலை, வெப்பநிலை - மற்றும் முக்கியமாக, மழைப்பொழிவு ஆகியவற்றில் ஏற்படும் மாறுபாடுகள் ஆஸ்திரேலியாவின் வெவ்வேறு பகுதிகளின் தட்பவெப்ப நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார் Catherine Ganter

நீர் கையிருப்பு மற்றும் வறட்சி ஆகியன நாட்டின் விவசாயம், சமூகங்கள் மற்றும் ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.

உலகிலேயே மக்கள் வசிக்கும் கண்டங்களில் மிகவும் வறண்ட கண்டம் ஆஸ்திரேலியாவாகும். இருப்பினும் இதன் பல்லுயிர்வகைமை நீர் சமநிலையை நிர்வகிக்கும் வகையில் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார் Greening ஆஸ்திரேலியாவின் Director of Impact Dr Blair Parsons.
Seasonal rainfall zones of Australia - credit BOM.png
Seasonal rainfall zones of Australia - credit BOM.
பல பில்லியன் ஆண்டுகளாக உருவான பூர்வீக நிலப்பரப்புகளின் பன்முகத்தன்மையுடன் திகழும் ஆஸ்திரேலிய சுற்றுச் சூழல் தற்போது பலவிதமான அச்சுறுத்தல்களை அனுபவித்து வருகிறது என Dr Blair Parsons விளக்குகிறார். Great Barrier Reef-ஐ உதாரணமாகக் குறிப்பிடும் அவர் காலநிலை மாற்றம் குறித்து அவசர நடவடிக்கை எடுக்கத் தவறினால் 2100க்குள் அது அழிந்துவிடும் அபாயம் உள்ளது என்கிறார்.

Great Barrier Reef உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகும் மற்றும் பூமியின் மிகப்பெரிய பவளப்பாறை ஆகும்.

அசுத்தமான நீர் Great Barrier Reef-இன் முக்கிய அச்சுறுத்தலாக உள்ளது.

உலகின் பல்லுயிர்வகைமையில் ஆஸ்திரேலியா 10 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. இதில் பெரும்பாலானவை உலகில் வேறு எங்கும் இல்லாமல் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் தனித்துவமான உயிரினங்கள் ஆகும். இருப்பினும் இவற்றில் பல அழிவின் விளிம்பை நோக்கிச் சென்றுகொண்டிருப்பாக னுச டீடயசை Pயசளழளெ சுட்டிக்காட்டுகிறார்.
Coral on the Great Barrier Reef - Image Greening Australia.jpg
Coral on the Great Barrier Reef - Image Greening Australia
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்வதற்கு உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய அளவில் முயற்சி மற்றும் மாற்றம் தேவைப்படுகிறது.

ஆனால் தனிநபர்களாக நாமும் மாற்றங்களை உருவாக்குவதில் உதவலாம். உதாரணமாக நீரை கவனமாகப் பயன்படுத்துதல், வறட்சியைத் தாங்கும் விவசாய முறைகளை உருவாக்குதல் உள்ளிட்டவற்றை Dr Blair Parsons வலியுறுத்துகிறார்.

ஆஸ்திரேலியாவின் தீவிர வானிலை நிகழ்வுகள் மக்களுக்கும் நாட்டின் உட்கட்டமைப்பிற்கும் ஆபத்தை விளைவிக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன, எனவே தீவிர வானிலை நிகழ்வுகளை எதிர்கொள்ள முன்கூட்டியே தயாரா இருப்பது முக்கியம் என்கிறார் வானிலை ஆய்வு மையத்தைச் சேர்ந்த Catherine Ganter.
climate.jpg
Catherine Ganter is a senior climatologist at the Bureau of Meteorology - Image BOM. Dr Blair Parsons is the Director of Impact at Greening Australia - Image Greening Australia.
வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமோ அல்லது BOM Weather app-ஐ தரவிறக்குவதன் மூலமோ நீங்கள் சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்க முடியும், மேலும் உள்ளூர் அவசர சேவைப்பிரிவினரின் எந்த ஆலோசனையையும் பின்பற்றுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

    Share
    Follow SBS Tamil

    Download our apps
    SBS Audio
    SBS On Demand

    Listen to our podcasts
    Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
    Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
    Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

    Watch on SBS
    Tamil News

    Tamil News

    Watch in onDemand