Jury சேவை என்பது என்ன? இதற்கு யாரெல்லாம் அழைக்கப்படலாம்?

A lawyer and jury

Lawyer and jury Credit: Image Source/Getty Images

Jury- நீதிமன்றத்தில் ஒரு குற்றம்பற்றிய உண்மைகளைக் கேட்டறிந்து ஒருவர் குற்றவாளியா நிரபராதியா என்பதை முடிவுசெய்யும் பொதுமக்கள் சார்ந்த குழுவில் பணியாற்றுவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டால் என்ன செய்வது என்பது தொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.


ஆஸ்திரேலிய சட்ட அமைப்பில் ஜூரி என்பது முக்கிய அங்கம் வகிக்கின்றது. தேவையேற்படும்போது, ஒரு ஆஸ்திரேலிய குடிமகனாக ஜூரி சேவையில் பங்கேற்பது உங்களது கடமையாகும். அவ்வாறு பணியாற்றுவதற்கு நீங்கள் அழைக்கப்பட்டு உரிய காரணங்களின்றி நீங்கள் அந்தப் பணியைச் செய்யாதுவிட்டால் அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

ஜூரி சேவையானது சமூக உறுப்பினர்களை நீதி நிர்வாக செயற்பாட்டில் பங்கு வகிக்க அனுமதிக்கிறது.

உதாரணமாக ஒருவர் மீது கடுமையான குற்றம் சுமத்தப்பட்டால், அந்த நபர் குற்றவாளியா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் பணியில் 12 சாதாரண உறுப்பினர்கள் அடங்கிய ஜுரி ஈடுபடுத்தப்படும்.
Jury Summons
Jury duty summons Source: Getty / P_Wei/Getty Images
கொலை, பாலியல் வன்முறை, ஆயுதமுனையில் நடத்தப்பட்ட கொள்ளை போன்ற தீவிரமான சில வகை வழக்குகளில் ஜுரி பயன்படுத்தப்படுகிறது.

ஜுரியில் பணிபுரிவதற்கான பெயர்கள் ஆஸ்திரேலிய வாக்காளர் பட்டியலில் இருந்து எழுந்தமானமாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதன் பின்னர் ஜுரியில் கடமையாற்றுவது தொடர்பில் உங்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்படும்.

வழக்கமாக, ஒரு ஜுரியில் 12 உறுப்பினர்கள் பணிபுரிவர் என்றபோதிலும் சில சமயங்களில் இந்த எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அதேநேரம் இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடக்கூடும்.

இவ்வாறு ஜுரியில் கடமையாற்றுவதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சில சூழ்நிலைகளில், உதராணமாக சிறு குழந்தைகளையுடைய ஒற்றைப் பெற்றோர், முதியோர் பராமரிப்பாளர்கள், சிறு வணிகர்கள், வழக்கறிஞர்கள், கேட்டல் குறைபாடு உள்ளவர்கள் அல்லது உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களாக இருக்கும்பட்சத்தில், தம்மால் இக்கடமையில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தால் அப்படியானவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.
Law Courts in Australia
Law Courts in Australia Source: Getty / Frogman1484/Getty Images
அதேபோல ஜுரி அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டவர் விசாரணை முழுவதிலும் பங்கேற்க வேண்டும். அவ்வாறு முழுமையாக பங்கேற்க முடியாது என்று நினைத்தால் அதை முதலிலேயே அறிவிக்க வேண்டும்.

ஜூரியில் அங்கம்வகிப்பவர்கள் குறித்த வழக்கைப் பற்றி யாரிடமும் பேச வேண்டாம் எனவும் இணையத்தில் தகவல்களைப் பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுவார்கள்.

பொதுவாக ஏழு முதல் 12 நாட்களுக்குள் நடக்கும் விசாரணைகளில் ஜூரி பங்கேற்கும். இருப்பினும் தீவிரவாதம் தொடர்பான சில வழக்கு விசாரணைகள் பல மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு மேல் செல்லலாம். நீண்டகால விசாரணைகளில் பங்கேற்பது தொடர்பில் ஜூரியில் அங்கம் வகிப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் முன்கூட்டியே கேட்கப்படும்
The Jury SBS.jpg
The Jury: Death on the Staircase on SBS and SBS On Demand Source: SBS / SBS
இதேவேளை ஜுரியின் தீர்ப்பு ஏகமனதாக இருக்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில் 11-1 என்ற அடிப்படையில் அதில் அங்கம் வகிப்பவர்களின் முடிவு அமைந்தாலும் அத்தீர்ப்பு குறித்த ஜுரியின் நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படும்.

ஜுரியில் பணிபுரிவதற்கு தேர்வானவருக்கு அவர் எத்தனை நாட்கள் கடமையில் ஈடுபடுகிறாரோ அத்தனை நாட்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
The Jury: Death on the Staircase airs weekly from Wednesday 6 November at 8.30pm on SBS with each episode then available to stream free on SBS On Demand.

Subscribe to or follow the Australia Explained podcast for more valuable information and tips about settling into your new life in Australia.   

Do you have any questions or topic ideas? Send us an email to australiaexplained@sbs.com.au 
SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand