SBS Examines : ஆஸ்திரேலியாவில் ஆண் பெண் என்ற ரீதியில் அரசியல் சித்தாந்த பிளவு உள்ளதா?

Untitled design (3).png

Credit: AAP Photos/Getty Images

கடந்த ஆண்டு வெளிநாடுகளில் நடந்த தேர்தல்களில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் இடையே அரசியல் ரீதியாகப் பிளவு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலும் அவ்வாறான நிலையா? SBS Examines-இற்காக Alex Tarney மற்றும் Olivia Di Iorio இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.


அமெரிக்காவில், 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள் Donald Trump-இற்கு ஆதரவாக வாக்களித்தனர். 

40% பெண்களுடன் ஒப்பிடும்போது 56% இளம் ஆண்கள் அவருக்கு வாக்களித்தனர். 

மற்ற நாடுகளில் இளைஞர்கள் அரசியலின் பழமைவாத வலதுசாரிகள் பக்கம் சாய்வதாக கூறப்படுகிறது.

ஃபிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளராக பணியாற்றிவருகிறார் Intifar Chowdury.

35 ஆண்டுகால ஆஸ்திரேலிய தேர்தல் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல்வேறு தலைமுறைகளின் அரசியல் சித்தாந்தம் எவ்வாறு நகர்கின்றன என்பதை அவர் சமீபத்தில் ஆய்வு செய்துள்ளார். 

இளைஞர்கள் இளமையாக இருக்கும்போது முற்போக்கானவர்களாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் வயதாகும்போது பழமைவாதம் பக்கம் மாறுகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.

அரசியல் சித்தாந்தத்தில் பெண்கள் கூடுதலாக இடதுசாரிகளாக உள்ளனர் மற்றும் ஆண்கள் கூடுதலாக வலதுசாரியாக உள்ளனர் என்று Dr Chowdhury கூறுகிறார்.

Jordan McSwiney கன்பரா பல்கலைக்கழகத்தில் உள்ள திட்டமிட்ட ஜனநாயகம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் மையத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார்.

உலகளாவிய அளவில் ஆண்கள் வலதுசாரி பக்கம் நகர்வது ஒரு புதிய நிகழ்வு அல்ல என்று அவர் கூறுகிறார்.

சில வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது, தீவிர வலதுசாரி சித்தாந்தத்திற்கான ஆதரவு ஆஸ்திரேலியாவில் வேறுபட்டது காணப்படுவதாக அவர் கூறுகிறார்.


SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian 

எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now