எச்சரிக்கை: மன உளைச்சலை ஏற்படுத்தும் உள்ளடக்கம்
யாஸ்மின்* தனது சொந்த நாட்டில் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து கொண்டார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, அவரது கணவர் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தார். யாஸ்மின் அவரைப் பின்தொடரத் திட்டமிட்டிருந்தார், ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதைக் கண்டுபிடித்தார்.
குழந்தை பிறந்த பிறகு ஆஸ்திரேலியா வந்த பிறகு அவரின் கணவரின் நடவடிக்கை அவருக்கு கவலையை உண்டாக்கியுள்ளது.
யாஸ்மினின் கணவர் அவர்களின் பணத்தைக் நிர்வகித்துள்ளார், தேவைக்கான பணத்தை பயன்படுத்த அனுமதிக்காமல் அவரின் கணவர் தடுத்துள்ளார். அவர்களுக்கு வரும் பெற்றோர் கொடுப்பனவுகளைச் யாஸ்மினியின் கணவர் எடுத்து செலவு செய்துள்ளார் மேலும் யாஸ்மின் வேலைக்கு செல்வதை அவர் ஊக்குவிக்கவில்லை. அப்படியிருந்த சூழலிலும் யாஸ்மின் வேலைக்குச் சேர்ந்தபோது, அவர் யாஸ்மினின் சம்பளத்தை எடுத்து வைத்துக்கொண்டுள்ளார்.
தங்கள் திருமணத்தை காப்பாற்றும் நம்பிக்கையில் யாஸ்மின் ஏழு ஆண்டுகள் தனது கணவருடன் இணைந்து வாழ்ந்துள்ளார். ஆனால் முறைகேடு உடல் ரீதியாக மாறியபோது அவருக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நண்பர்களின் ஆதரவுடன், யாஸ்மின் தனது கணவர் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.
இப்போது, யாஸ்மின் தனது கணவரிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் வங்கதேச புலம்பெயர்ந்த பெண்களுக்கு எதிரான நிதி முறைகேடு குறித்து விசாரணை செய்யும் ஆய்வு ஒன்றிற்கு டாக்டர் ஃபர்ஜானா மஹ்பூபா தலைமை தாங்குகிறார்.
சமூக மற்றும் கலாச்சார எதிர்பார்ப்புகளும் விசா தேவைகளும் பெண்கள் குடும்ப வன்முறையிலிருந்து வெளியேற முடியாத முக்கிய காரணங்களில் சில என்று அவர் குறிப்பிடுகிறார்.
யாஸ்மினைப் போலவே, வீட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட பலரும் காவல்துறையிடம் புகார் செய்ய தயங்குகிறார்கள்.
புலம்பெயர்ந்த பெண்களுக்கு குடும்ப வன்முறை வழக்கு மேலாண்மை ஆதரவை வழங்கும் ஒரு அமைப்பான Cultural Diversity Network அமைப்பின் நிறுவனர் டாக்டர் சப்ரின் ஃபரூக்கி.
குடும்ப வன்முறை குறித்த சமூக களங்கம் மற்றும் தவறான தகவல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு குடும்ப வன்முறை பற்றிய சமூகக் கல்வி மிக முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.
If you or someone you know is experiencing domestic violence, please call the national domestic, family and sexual violence hotline 1800 RESPECT on 1800 737 732.
*பெயர் மாற்றப்பட்டுள்ளது
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.