ஏன் பொங்கலுக்குக் கூட தமிழ் அமைப்புகள் ஒன்றுபடுவதில்லை?

Source: SBS Tamil
பொங்கல் விழா மதம் கடந்து, சாதி கடந்து, பிரதேசம் கடந்து அனைவரும் தமிழர்கள் என்ற மொழி இன அடையாளத்துடன் நடத்தப்படவேண்டிய விழா. ஆனால் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் பல தமிழ் அமைப்புகள் இணைந்து கொண்டாடினாலும் மெல்பன், சிட்னி போன்ற பெரும் நகரங்களில் மட்டும் தமிழ் அமைப்புகள் அனைத்தும் இணைந்து கொண்டாடுவதில்லை. குறிப்பாக சிட்னியில் ஒவ்வொரு அமைப்பும் அவர்களுக்கு வசதியாக பொங்கல் விழாக்களை ஆங்காங்கே நடத்திக்கொண்டுள்ளன. ஏன் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து மாபெரும் பொங்கல் விழா என்று ஒரேயொரு விழாவாக பொங்கலை நடத்துவதில்லை? வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள். சிறப்பு விருந்தினர்கள்: மெல்பன் பெருநகரின் கேசி தமிழ் மன்றத்தின் சிவசுதன் மற்றும் சிட்னியில் வாழும் சமூக ஆர்வலர் வெங்கடேஷ் மகாதேவன் ஆகியோர். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
Share