Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE starting June 12 2026

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: ஏன் இரண்டுபடக்கூடாது!

Dr Themozhi, and competing International Tamil Research Conferences

Dr Themozhi, and competing International Tamil Research Conferences

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு. தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research - IATR), இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.

கடந்த வருடம் பதினோராவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சிங்கப்பூரில் நடத்துவதற்காகத் திட்டமிடப் பட்டது. ஆனால், அம் மாநாடு அங்கு நடத்தப்படாமல் இரண்டு போட்டி மாநாடுகள், அதே ஆண்டில் சூலை 7 முதல் 9 வரை இந்தியாவின் சென்னையிலும், சூலை 21 முதல் 23 வரை மலேசியாவின் கோலாலம்பூரிலும் நடைபெற்றன.

இது குறித்து ஒரு திறந்த மடலை எழுதியுள்ள, தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளரும் தமிழ் மொழி மற்றும் தமிழர் வாழ்வியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவருமான முனைவர் தேமொழி அவர்களுடன் உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now