SKIP TO MAIN CONTENT

விமானத்தில் ஏறும் முன் பயணிகளின் எடையை அளவிடவுள்ள Air New Zealand!

எதிர்வரும் வாரங்களில் தமது விமானங்களில் பயணம் செய்பவர்களின் எடையை அளவிடவுள்ளதாக Air New Zealand விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

AIR NZ
Credit: AIR NZ

2 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

நியூசிலாந்தின் தேசிய விமான நிறுவனமான Air New Zealand-இல் பயணம் செய்பவர்கள், தமது hand luggage-உடன் சேர்த்து அவர்களது எடையையும் அளக்குமாறு எதிர்வரும் வாரங்களில் கோரப்படவுள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை Air New Zealand விமான நிறுவனம் மேற்கொள்ளும் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமையவுள்ளது.

இதன்படி பயணிகள் விமானத்தில் ஏறும் முன், தங்கள் hand luggage- உடன் அவர்களது நிறையையும் அளப்பதற்குத் தயாரா என கேட்கப்படும்.

இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பயணிகள் அங்குள்ள எடை அளக்கும் இயந்திரத்தில் ஏறிநிற்குமாறு கோரப்படுவர். அதேபோன்று அவர்களது hand luggage-இன் நிறை தனியாகவும் அளக்கப்படும்.

இதன் தரவுகள் நேரடியாக கணக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படும் அதேநேரம் விமானநிலைய ஊழியர்களின் திரையில் அத்தரவினைப் பார்க்க முடியாது எனவும், வெளியிலுள்ள எவரும் பார்க்க முடியாதவாறு விமான நிறுவனம் இந்த தரவுகளை அநாமதேயமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நடவடிக்கை ஜூலை 2, 2023 வரை மேற்கொள்ளப்படும் என Air New Zealand விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Passenger weight survey என்று அழைக்கும் இந்த திட்டம், விமானங்களுக்கான சுமை மற்றும் விநியோகம் குறித்த தரவுகளை சேகரிப்பதற்கான ஒரு வழியாகும் என்று Air New Zealand விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

"விமானத்தில் செல்லும் சரக்குகள் முதல் விமானத்தில் உள்ள உணவுகள், பயணப்பைகள் வரை அனைத்தையும் நாங்கள் எடைபோடுகிறோம்" என்று Air New Zealand சுமை கட்டுப்பாட்டு மேம்பாட்டு நிபுணர் Alastair James ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

Air New Zealand விமானங்களில் ஏறும் முன் பயணிகளின் எடையை அளவிடுவது இது முதல் முறை அல்ல. உள்நாட்டு பயணிகள் 2021 இல் ஒரு கணக்கெடுப்பில் பங்கேற்றனர், ஆனால் கோவிட் பரவல் காரணமாக சர்வதேச பயணிகளுக்கான கணக்கெடுப்பு தாமதமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல்வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now