SKIP TO MAIN CONTENT

படகுப் பயணங்களைத் தடுக்க இலங்கைக்கு விமானமொன்றைப் பரிசளித்த ஆஸ்திரேலியா!

Operation Pacific Assist 2015
Beechcraft KA350 Credit: Sergeant Hamish Paterson/ Royal Australian Air Force

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலிய விமானப்படை பயன்படுத்திய விமானமொன்றை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு பரிசாக வழங்கியுள்ளது.

Beechcraft KA350 என்ற விமானத்தை வழங்குவதற்கான ஒப்புதலை உள்துறை அமைச்சர் Clare O’Neil கொடுத்திருந்த நிலையில், அவரது கையொப்பத்துடனான கடிதத்தை, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையர் Paul Stephens அண்மையில் கையளித்துள்ளார்.

Beechcraft KA350 King Air ஒரு நவீன இரட்டை எஞ்சின் turboprop விமானமாகும்.

ஆஸ்திரேலியாவின் இந்தப் பரிசு இலங்கையின் கடல்சார் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தும் எனவும், இது நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் இருநாடுகளும் இணைந்து செயற்படுவதற்கான முனைப்பின் மேலும் ஒரு நிரூபணம் எனவும் Paul Stephens தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவுக்கான சட்டவிரோத படகுப் பயணங்களைத் தடுப்பதில் இலங்கைக்கு பல வழிகளிலும் ஆஸ்திரேலிய அரசு உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now