SKIP TO MAIN CONTENT

பெர்த்-இந்தியா நேரடி விமான சேவை: மேற்கு ஆஸ்திரேலிய அரசு நடவடிக்கை!

இந்திய நகரங்களுக்கும் பெர்த்துக்கும் இடையே நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்து, மேற்கு ஆஸ்திரேலிய அரசு இந்திய விமான நிறுவனங்களுடன் கலந்துரையாடி வருகிறது.

Media Tour Conducted To Inspect Preparedness At Chhatrapati Shivaji Maharaj International Airport
MUMBAI, INDIA MAY 28: Planes parked at The Chhatrapati Shivaji Maharaj International Airport, on May 28, 2020 in Mumbai, India. * Credit: Hindustan Times via Getty Images

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

வணிகம் மற்றும் விடுமுறை தொடர்பில் மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையில், இந்தியா நான்காமிடத்தில் உள்ளதாக கூறுகின்ற அம்மாநில அரசு, இந்தியாவின் முக்கிய மாநலங்களிலிருந்து பெர்த்திற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்குமாறு இந்திய விமான நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் கணிசமான இந்தியர்கள் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள துணை premier Roger Cookஇன் செய்தித் தொடர்பாளர், மேற்கு ஆஸ்திரேலிய அரசு இந்தியாவுடன் நீண்ட கால உறவை உருவாக்க விரும்புவதாக SBS ஹிந்தியிடம் தெரிவித்தார்.

2022 இல் சர்வதேச எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதிலிருந்து, துணை premier Roger Cook இரண்டு முறை இந்தியாவிற்கு சென்றுள்ளதாகவும், இது மேற்கு ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் இந்திய நகரங்களிலிருந்து பெர்த்திற்கு நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சு நடத்தப்பட்டுவருவதாகவும், ஆனால் இது எப்போது நடக்கும் என்பதற்கான காலக்கெடு எதுவும் தெரியாது எனவும் துணை premier Roger Cookஇன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

கடந்த மாதம் CAPA India Aviation Summit 2023இல் கலந்துகொண்டபோது, துணை premier Roger Cook இந்தவிடயம் தொடர்பில் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தார்.

உச்சிமாநாட்டின் போது துணை premier Roger Cook, ஏர் இந்தியா, Vistara மற்றும் IndiGo தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்ததுடன், 15 முக்கிய சுற்றுலா விநியோக பங்காளிகளையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now