ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த விமானநிலையம் எது தெரியுமா?

உலகின் மிகச்சிறந்த விமான நிலையங்கள் குறித்த தரவரிசைப் பட்டியலை Skytrax நிறுவனம் வெளியிட்டுள்ளது.

12496025_1257213007638991_5739676042153699543_o.jpg

Melbourne Airport Credit: Facebook

உலக அளவில் சிறந்த விமானநிலையங்கள் எவை எனத் தேர்ந்தெடுத்து, வருடந்தோறும் விருது வழங்கும் Skytrax நிறுவனத்தின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் மிகச்சிறந்த விமான நிலையமாக, மெல்பன் சர்வதேச விமானநிலையம் உள்ளது.

Skytrax புதனன்று வெளியிட்ட உலகளாவிய தரவரிசைப்பட்டியலில் மெல்பன் விமாநிலையம் 19வது இடத்தைப் பிடித்துள்ளது.

மெல்பன் மாத்திரமே, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் முழுவதுமுள்ள விமானநிலையங்களில், முதல் 20 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ள ஒரே விமான நிலையமாகும்.

2022 இல் தரவரிசைப்பட்டியலில், மெல்பன் 26வது இடத்தைப் பிடித்திருந்தது.

இப்பட்டியலில் பிரிஸ்பேன் விமான நிலையம் 23வது இடத்தையும், சிட்னி விமான நிலையம் 49வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதேவேளை உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை சிங்கப்பூரின் Changi விமானநிலையம் பெற்றுள்ளது.

கடந்த வருடம் மூன்றாவது இடத்திலிருந்த Changi விமான நிலையம், இவ்வருடம் முதலிடத்தைத் தட்டிச்சென்றுள்ளது.

கடந்த வருடம் முதலிடத்தைப் பெற்ற Doha Hamad விமான நிலையம், இவ்வாண்டு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

மூன்றாமிடத்தில் Tokyo Haneda விமானநிலையமும், நான்காமிடத்தில் Seoul Incheon விமானநிலையமும், ஐந்தாமிடத்தில் Paris CDG விமானநிலையமும் உள்ளன.

இவை உட்பட முதல் 20 இடங்களைப் பெற்றுள்ள விமான நிலையங்களின் விவரங்கள் வருமாறு:
1. Singapore Changi Airport
2. Hamad International Airport
3. Tokyo International Airport (Haneda)
4. Incheon International Airport
5. Paris Charles de Gaulle Airport
6. Istanbul Airport
7. Munich Airport
8. Zurich Airport
9. Narita International Airport
10. Madrid-Barajas Airport
11. Vienna International Airport
12. Helsinki-Vantaa Airport
13. Rome Fiumicino Airport
14. Copenhagen Airport
15. Kansai International Airport
16. Chubu Centrair International Airport
17. Dubai International Airport
18. Seattle-Tacoma International Airport
19. Melbourne Airport
20. Vancouver International Airport
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share

Published

Source: SBS

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த விமானநிலையம் எது தெரியுமா? | SBS Tamil