SKIP TO MAIN CONTENT

சிட்னியிலிருந்து லண்டனுக்கு இரண்டே மணிநேரத்தில் செல்லலாம்

ஏறக்குறைய 24 மணி நேரம் எடுக்கக்கூடிய Sydney - London விமான பயணத்தை இரண்டே மணி நேரத்தில் சென்றடையும் நாள் அடுத்த பத்தாண்டுகளில் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

Virgin Galactic SpaceShipTwo
Virgin Galactic SpaceShipTwo Credit: Al Seib/Los Angeles Times via Getty Imag

4 min read

Published

Updated

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

தற்போது சிட்னியிலிருந்து நேரடி விமானசேவை லண்டனுக்கு இல்லை. சிங்கப்பூரில் அல்லது கோலாலம்பூரில் அல்லது பேங்கொக் போன்ற நகரங்களில் transit அல்லது இடையில் நின்று பின்னர் பயணத்தை தொடரும் முறையிலேயே விமானங்கள் லண்டனுக்குச் செல்கின்றன. Direct flight அல்லது நேரடி விமான சேவை அறிமுகமாகும் பட்சத்தில்கூட சிட்னி -லண்டன் பயணத்திற்கு ஏறக்குறைய 24 மணி நேரம் ஆகும். Perth யிலிருந்து London நகருக்கு நேரடி விமான சேவை அல்லது direct flight உண்டு. இதற்குகூட பதினேழரை மணிநேரம் இப்போது எடுக்கிறது.

 ஆகவே ஏறக்குறைய 24 மணி நேரம் எடுக்கக்கூடிய Sydney - London விமான பயணத்தை இரண்டே மணி நேரத்தில் சென்றடையும் நாள் அடுத்த பத்தாண்டுகளில் நிகழும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இதற்காக புதிய தொழில் நுட்பம் ஏதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தொழில்நுட்பம் இதற்கு பயன்படுத்தப்படும். விண்வெளிக்குச்சென்றுவர இந்த வசதி இப்போது பயன்படுத்தப்படுகிறது. Space X, Blue origin மற்றும் Virgin galactic போன்ற நிறுவனங்கள் இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வர்த்தக அடிப்படையில் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச்செல்கிறார்கள்.

Photo undated of Virgin Galactic Spaceship Cabin Interior. British billionaire Richard Branson plans to travel to space as early as July 11 aboard a Virgin Galactic spacecraft, his company said in a statement
Photo undated of Virgin Galactic Spaceship Cabin Interior. Source: ABACA / PA/ABACA

விண்வெளிக்குச்செல்லும் rocket களை மீண்டும் பயன்படுத்த முன்பெல்லாம் முடியவில்லை. ராக்கெட்டில் செல்பவர்கள் rocket இலிருந்து பிரியும் கலத்தின் மூலமாகவே கடற்பகுதிக்கு வந்து சேர்வார்கள். ஆனால் இப்போது பூமியிலிருந்து புறப்படும் rocket கள் பத்திரமாக பூமியில் நிலப்பகுதியில் குறிப்பிட்ட நிலையத்தில் தரையிறங்குகின்றன. இந்த rocket powered flightsகளை மீண்டும் பயன்படுத்தவும் முடியும். இந்த விண்வெளிப்பயணங்களுக்காக வசதியுள்ளவர்கள் சுமார் 6 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் வரை கட்டணமாகச் செலுத்துகிறார்கள். விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் இந்த rocket powered flights பயன்படுத்தப்படுகின்றன.

இதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு செல்லக்கூடிய பயணிகளுக்கான வர்த்தக ரீதியான rocket powered விமானங்களை -commercial flights இயக்கமுடியும் என்று இங்கிலாந்திலுள்ள CAA - Civil Aviation Authority யின் முன்னெடுப்பில் RAF இன் அனுசரணையுடன் King’s College of London யில் நடந்துள்ள ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக சிட்னியிலிருந்து லண்டனுக்கு 2 மணி நேரத்தில் போய்ச்சேரலாம் என்று சொல்லப்படுகிறது.

பொதுவாக இப்போது பயணிகள் வர்த்தக விமானங்கள் சுமார் 40,000 அடி உயரத்தில் பறக்கின்றன. பயணிகளுக்கான வரத்தக விமானங்கள் எரிபொருள் சிக்கனம் கருதி சுமார் 40000 அடி அல்லது அதைவிட சற்று உயரத்திலும் பறக்கின்றன. ஆனால் இந்த புதிய rocket powered விமானங்கள் 40,000 அடி உயரத்தைவிட பல மடங்கு உயரம் செல்லும். குறிப்பாகச் சொல்வதானால் செங்குத்தாக கிளம்பி சுமார் 60 மைல் அல்லது 96 கி. மீட்டர் உயரத்திலுள்ள sub orbital துணைச்சுற்றுப்பாதை என்ற விண்வெளிப்பகுதிக்குச்சென்று அங்கிருந்து அதேவிதமான செங்குத்தான கோட்டில் குறிப்பிட்ட நகரத்தில் தரையிறங்கும். இதன் வேகம் மணிக்கு 3540 கிலோமீட்டர் வேகம் அல்லது 2200 mph (3540 km/h) என்று சொல்லப்படுகிறது. இப்போதுள்ள வர்த்தக விமானங்களைப்போல குறிப்பிட்ட உயரம் சென்று நேர்கோட்டில் புதிய நவீன விமானம் பயணிக்காது.

Virgin Galactic
Source: SBS / SBS News

செங்குத்தாக கிளம்பி சுமார் 60 மைல் அல்லது 96 கி. மீட்டர் உயரத்திலுள்ள sub orbital துணைச்சுற்றுப்பாதை என்ற விண்வெளிப்பகுதிக்குச்சென்று அங்கிருந்து அதேவிதமான செங்குத்தான கோட்டில் குறிப்பிட்ட நகரத்தில் தரையிறங்கும் விமானங்களால் பயணிகளுக்கு பல சவால்கள் ஏற்படலாம். இருந்தபோதும் பயணிகளுக்கான பாதுகாப்புக்கு பங்கமில்லாத வகையில் இதை இயக்கமுடியும் என்பது உறுதியான பின்னரே இப்படியான விமானங்கள் வர்த்தக அடிப்படையில் பயன்பாட்டுக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.

பூமியில் gravity என்ற புவியீர்ப்பு விசை இருக்கிறது. இது உயரே செல்லச்செல்ல புவியீர்ப்பு விசை குறைவடையும். இந்த புவியீர்ப்புவிசை G என்ற அலகால் (unit) கணிக்கப்படுகிறது. பூமியைச்சுற்றியுள்ள புவியீர்ப்பு விசையின் அளவு சுமார் 1G ஆகும். இந்த 1G க்குள் இப்போதுள்ள பயணிகள் விமானங்கள் இயல்பாகப் பறக்கும். ஆனால் புவியீர்ப்பு விசையைத்தாண்டினால் இந்த விமானங்களால் பறக்கமுடியாது. ஆகவே பல மடங்கு உயரத்தில் பறக்கும் rocket powered விமானங்கள் மேலே எழும்போது அதன் புவியீரப்பு விசை 4 மடங்காக அதாவது 4G ஆக அதிகரிக்கப்படவேண்டும் என்றும் இறங்கும்போது 6 மடங்காக அதிகரிக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

இப்படி புவியீர்ப்பு விசை அதிகரிக்கப்படும் போது, மனிதர்க்கு சில உடல்ரீதியான தொந்தரவுகள் ஏற்படலாம். நெஞ்சில் பாரம் ஏற்றியது போன்ற உணர்வு மற்றும் சுவாசிப்பதில் சிரமம் என்பன ஏற்படலாம். சிலருக்கு hearts rhythm - இதயலயம் பாதிக்கப்படுவதோடு, மூளைக்குச்செல்லும் குருதியோட்டம் பாதிக்கப்படலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Virgin Galactic Test Flights
Virgin Galactic Test Flights Credit: Virgin Galactic/Getty Images

இது தொடர்பான சோதனையில் 32 முதல் 80 வயதான 24 பயணிகள் பங்கெடுத்தனர். 30 நொடி நிகழ்ந்த பரிசோதனை ஓட்டத்தில் ஒரு பயணி ஒரு சில விநாடிகளுக்கு உணர்விழந்ததாகவும் சிலரது புறப்பார்வை - peripheral vision பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டாலும் இந்த பாதிப்புகள் நீடித்து நிற்பவையல்ல என்றும் நிலையான பாதிப்பு ஏற்படாது என்றும் ITV தொலைக்காட்சி நிலைய அறிக்கை சொல்கிறது. முதிய பயணிகளுக்கு பாதிப்பு மிகக் குறைவாகவே ஏற்பட்டதாகவும் இதற்குக் காரணம் அவரகளது இரத்தக்குழாய்களின் சுவர்கள் கெட்டியாக இருப்பதும் அவர்களது மூளைக்குச்செல்லும் குருதியின் அளவு ஏற்கனவே குறைவாக இருப்பதும் காரணங்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எப்போது வரும்? என்ற கேள்வி எல்லோருக்கும் பிறக்கும். அதிகம் காத்திருக்க வேண்டாம். குறைந்தது பத்துவருடங்களுக்குள் இது சாத்தியம் என்று சொல்லப்படுகிறது. பாதுகாப்பு உறுதிசெய்யப்படுவதற்கும் commercial viability என்ற வர்த்தக ரீதியான சாத்தியம் என்பன தீர்மானிக்கப்படுவதற்கும் இவ்வளவு காலம் எடுக்கும் என்கிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now