ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த பரிசீலனை மையமாக செயற்பட்ட நவுறு தீவில் எஞ்சியுள்ள கடைசி தொகுதி புகலிடக்கோரிக்கைளும் இம்மாத இறுதிக்குள் அங்கிருந்து வெளியேறுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
நவுறுவில் எஞ்சியுள்ள சுமார் 12 பேரையும் ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை சமீப மாதங்களில், தொடர்ச்சியாக பல புகலிடக் கோரிக்கையாளர்கள் நவுறுவிலிருந்து ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு ஹோட்டல்களில் தடுத்துவைக்கப்பட்டுவருவதாகவும், இவர்கள் அனைவரும் விரைவில் bridging விசாக்கள் வழங்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படுவர் என எதிர்பார்ப்பதாகவும் அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் கடல் கடந்த பரிசீலனை நடைமுறையை ஆஸ்திரேலியா தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
