SKIP TO MAIN CONTENT

இலங்கையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஆஸ்திரேலியப் பெண் உயிரிழப்பு!

18 bends road in sri lanka
High alpine and beautiful 18 bends road in sri lanka(Picture for representational purpose only) Source: iStockphoto / Chamara Lakshan/Getty Images/iStockphoto

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

இலங்கை கம்பளை - ஹேமத்தகம வீதியில் பலத்கமுவ பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில், 67 வயதுடைய ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹேமத்தகம நோக்கி பயணித்த வாகனம் 12 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தின் போது காரின் ஓட்டுநர், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது மகள் ஆகியோர் வாகனத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த மூவரும் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மரணமடைந்த பெண் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியப் பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓட்டுநர் தூக்கக்கலக்கத்தில் இருந்ததால் வாகனம் பள்ளத்தில் விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now