Highlights
- இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
- இக்குழுவை மாலைதீவு அல்லது இலங்கைக்கு அழைத்துவந்து அங்கு சில நாட்களுக்கு தங்கவைத்து பின்னர் ஆஸ்திரேலியா அழைத்து வர திட்டமிடப்படுவதாக Cricket Australia தெரிவித்துள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டாலும், இங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என குறிப்படப்படுகிறது.
கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அடங்கிய குழுவினரை, மாலைதீவு அல்லது இலங்கைக்கு அழைத்துவந்து அங்கு சில நாட்களுக்கு தங்கவைத்து பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவது குறித்து ஆலோசித்து வருவதாக Cricket Australia தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான பயணத்தடை மே 15ம் திகதி நீக்கப்பட்டால் அதன் பின்னர் இவர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா வருவதற்கு 14 நாட்களுக்கு முன்னரான காலப்பகுதியில் இந்தியாவில் இருந்தவர்களுக்கே இப்பயணத்தடை பொருந்தும் என்பதால், இந்தியாவுக்கான பயணத்தடை நீடிக்கப்பட்டாலும், 14 நாட்கள் என்ற காலப்பகுதியைக் கடந்த பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியும் என குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் இடம்பெற்று வந்த ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்குபற்றுவதற்காக சென்றிருந்த சுமார் 38 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழு தற்போது அங்கு சிக்கியுள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கும் கோவிட் தாக்கியதை அடுத்து, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்கு சிக்குண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழுவை இந்தியாவிலிருந்து விசேட விமானம் மூலம் மாலைதீவு அல்லது இலங்கைக்கு அழைத்துவந்து, அங்குள்ள ஹோட்டல்களில் சில நாட்களுக்கு தங்கவைத்துவிட்டு, பின்னர் ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவது குறித்து ஆலோசித்துவருவதாக Cricket Australia தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவரப்பட்டாலும், இங்கு அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் Michael Hussey தொடர்ந்தும் இந்தியாவில் தனிமைப்படுத்தப்பட்டு, கோவிட் நடைமுறைகளை பின்பற்றிய பின்னரே அழைத்துவரப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Australian Cricketers Mike Hussey and David Warner (right) are stranded in India. Source: AAP
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share



