SKIP TO MAIN CONTENT

ஆஸ்திரேலியாவில் அதிகளவானோருக்கு வைக்கப்படும் பெயர்கள் எவை தெரியுமா?

Five babies one looking in different direction
Five babies one looking in different direction Credit: Moodboard

2 min read

Published

By Renuka

Source: SBS


Skip to article content

ஆஸ்திரேலிய மக்கள் புதிதாக பிறக்கும் தமது பிள்ளைகளுக்கு சூட்டும் பெயர்களில் மிகவும் பிரபலமானவை எவை என்ற விவரங்களை ஆராய்ச்சி நிறுவனமான McCrindle வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பெயர்கள் அடங்கிய பட்டியலில் நீண்ட காலமாக முன்னிலையில் உள்ள பெயர்கள் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திரங்களின் பெயர்களின் கலவையானது முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளன.

இதன்படி 2022ம் ஆண்டு பிறந்த பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு Charlotte என்ற பெயர் அதிகளவில் சூட்டப்பட்டுள்ளது. அடுத்தடுத்த இடங்களில் Amelia, Isla, Olivia ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.

அதேநேரம் ஆண்குழந்தைகளுக்கான பெயர்களில் Oliver தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னிலை வகிக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் Noah, Leo, William ஆகிய பெயர்கள் காணப்படுகின்றன.

ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் சூட்டப்பட்ட பெயர்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள பெயர்களின் பட்டியல் கீழே உள்ளது.

Most popular girl names

1. Charlotte - 1,394

2. Amelia - 1,374

3. Isla - 1,355

4. Olivia - 1,271

5. Mia - 1,178

6. Ava - 1,097

7. Matilda - 1,054

8. Ella - 1,030

9. Grace - 1,002

10. Willow - 993

Most popular boy names

1. Oliver - 2,276

2. Noah - 1,896

3. Leo - 1,506

4. William - 1,368

5. Henry - 1,360

6. Jack - 1,323

7. Theodore - 1,313

8. Hudson - 1,231

9. Charlie - 1,230

10. Luca - 1,131

இதேவேளை நாட்டில் பிரபலமான முதல் 100 பெயர்களின் பட்டியலில் முதல்முறையாக Remy, Roman, Alfie, Reuben, Koa, Louie,Tommy, Eliana, Thea, Margot, Maisie, Gracie ஆகிய 12 பெயர்கள் இணைந்துள்ளன.

அதேபோன்று ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பொதுவான பெயர்களான Charlie, Riley, Jordan, Jesse, Casey, Morgan, Jamie, Taylor ஆகியவை ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாகிவிட்ட அதேநேரம் இப்பெயர்களும் முதல் 100 பெயர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now