Macquarie அகராதி, Oxford அகராதி, Merriam-Webster அகராதி, மற்றும் ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டிற்கான சொற்களின் பட்டியல்களை ஆண்டுதோறும் வெளியிடுகின்றன.
அந்தவகையில் Macquarie அகராதி, அதன் வருடாந்தர சொல்லின் வெற்றியாளர் யார் என்ற விவரத்தை அண்மையில் வெளியிட்டுள்ளது.
Macquarie குழுவின் தெரிவாக 'Teal' என்ற சொல் வெற்றிபெற்றுள்ளது. 'Truth-telling' என்ற சொல் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 'bachelor’s handbag' என்ற சொல் மக்கள் தெரிவு பிரிவில் அதிக வாக்குகளை ஈர்த்துள்ளது.
இந்த ஆண்டின் வெற்றியாளரனான 'Teal' என்பது, பொதுவாக கருத்தியல் ரீதியாக மிதமான கருத்துக்களைக் கொண்ட ஒரு சுயாதீன அரசியல் வேட்பாளரைக் குறிக்கிறது. ஆனால் அந்த வேட்பாளர் வலுவான காலநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளை ஆதரிப்பவராகவும், அரசியல் ஒருமைப்பாட்டுக்கு முன்னுரிமை அளிப்பவராகவும் காணப்படுவார்.
உதாரணமாக ஆஸ்திரேலியாவின் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 'Teal வேட்பாளர்கள்' என்று வர்ணிக்கப்பட்ட சுயேட்சைகள் பலர் வெற்றி பெற்றிருந்தனர்.
நிறங்களில் Teal என்று கூறப்படுவது, பச்சையும் நீலமும் கலந்த நிறம் ஆகும். கிரீன்ஸ் கட்சியின் (பச்சை நிறம்) காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கையையும், லிபரல் கட்சியின் (நீல நிறம்) பொருளாதாரம் உள்ளிட்ட பல கொள்கைகளையும் கலந்து இந்த வேட்பாளர்கள் முன்வைத்ததால் இந்த வேட்பாளர்கள் Teal வேட்பாளர்கள் என்று வர்ணிக்கப்பட்டனர்.
அதேநேரம் மக்கள் தெரிவில் வெற்றிபெற்ற bachelor’s handbag' ஒரு சூப்பர்மார்க்கெட் take away roast கோழியை அர்த்தப்படுத்துகிறது.
இதை சாப்பிடுவதற்கு முன் எந்த தயாரிப்பும் தேவையில்லை என்பதுடன், பெரும்பாலும் ஒரு கைப்பிடியுடன் ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் வரும் இக்கோழி, பார்ப்பதற்கு ஒரு கைப்பையைப் போன்று காட்சியளிப்பதால் இந்தச் சொல் பிரபலமானது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
