Robodebt கடன் வசூலிப்பு திட்டத்தின் ஊடாக சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்களிடமிருந்து 720 மில்லியன் டொலர்கள் அறவிடப்பட்டிருந்ததுடன் பல்வேறு குழறுபடிகளும் இடம்பெற்றிருந்தன.
இதையடுத்து Robodebt நடவடிக்கை சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து அரசுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட class action-கூட்டு சட்டநடவடிக்கையைத் தொடர்ந்து, 1.2 பில்லியன் டொலர்களை தீர்வுத்தொகையாக வழங்குவதற்கு அரசு இணக்கம் தெரிவித்திருந்தது.
Robodebt class action எனப்படும் இந்த கூட்டு சட்ட நடவடிக்கையில் பங்கேற்றுள்ளவர்களுக்கு, அவர்களது கடன் வகைகளைப் பற்றிய தகவலுடன், தீர்வுத்தொகையைப் பெறுவதற்கு அவர்கள் தகுதியானவரா என்பது தொடர்பில் Services Australia கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
இவ்வாறு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் நீங்கள் தகுதிபெறும் கடன்கள் அனைத்தையும் Services Australia குறிப்பிடவில்லை என நீங்கள் நினைத்தால், அல்லது உங்கள் கடன்கள் தவறான பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக நீங்கள் நினைத்தால், இதுதொடர்பில் மீளாய்வு செய்யுமாறு கேட்கலாம். மீளாய்வைக் கோருவதற்கான இறுதித்திகதி 10 டிசம்பர் 2021 ஆகும்.
உங்களது Centrelink online கணக்கில் ‘Class action settlement query’-ஐ பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் இதைச் செய்யலாம்.
கூட்டு சட்ட நடவடிக்கையில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் தீர்வுத்தொகையைப் பெற மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
நீங்கள் தீர்வுத்தொகையைப் பெறுவதற்கு தகுதியுடையவராக இருந்தால், உங்களுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை, அதை வழங்குவதற்கு முன், 2022-ம் ஆண்டின் முதல்பாதியில் Services Australia மீண்டும் உங்களுக்குத் தெரிவிக்கும்.
பெரும்பாலான மக்கள் பெரிய தீர்வுத்தொகையைப் பெற மாட்டார்கள். பெரும்பாலான தீர்வுத்தொகை கொடுப்பனவுகள் $50 முதல் $300 வரை இருக்கும்.
நீங்கள் தற்போது Centrelink கொடுப்பனவு ஒன்றைப் பெற்றுவந்தால் அல்லது சமீபத்தில் உங்கள் Income Compliance debt பணத்தை திரும்பப் பெற்றிருந்தால், உங்களுக்கான தீர்வுத்தொகை அதே வங்கிக் கணக்கிற்குச் செல்லும்.
உங்களது வங்கிக்கணக்கு விவரங்களை மாற்ற விரும்பினால், myGov ஊடாக உங்கள் Centrelink online கணக்கைப் பயன்படுத்தி இதைச் செய்யலாம். உங்களது விவரங்களைப் புதுப்பிக்க 11 பிப்ரவரி 2022 வரை அவகாசம் உள்ளது.
உங்கள் மொழியில் மேலும் தகவலுக்கு, servicesaustralia.gov.au/classaction க்குச் செல்லவும். அல்லது 1800 171 846 என்ற எண்ணை அழைக்கலாம்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
