மறதி நோயை கட்டுப்படுத்தும் புதிய மருந்து தயார்!

மறதி நோய் எனப்படும் Dementia அல்லது Alzheimers நோய்க்கு புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

An illustration of brain synapses.

A new Alzheimer's drug could be game-changing for some Source: AAP / AP

Alzheimer என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்நோய் முற்றும் வேகத்தை அல்லது progression ஐ அல்லது தாக்கத்தைக் குறைக்கக்கூடிய புதிய மருந்து இது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மருந்து சிறந்த பலனைத்தருவதாகவும், trial அல்லது பரிசோதனை முடிவு இந்த மருந்தின் வீரியத்தை உறுதி செய்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Dimentia தொடர்பான சிகிச்சை பற்றி அக்கறைகொண்டுள்ள நிபுணர்கள் மத்தியில் அது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் மறுத்து உற்பத்தி செய்யும் நிறுவனம் - pharmaceutical company Eli Lilly தயாரித்துள்ள இந்த antibody medicine என்று அழைக்கப்படும் எதிர்புரத வகையைச்சேர்ந்த donanemab என்ற மருந்து மிக சிறப்பான மருந்து என்று பார்க்கப்படுகிறது. இது ஆரம்பநிலையிலுள்ள Alzheimer நோயாளிகளின் மூளையில் beta amyloid என்றபுரதம் தேங்கி நிற்பதைத் தடுப்பதோடு தேங்கிநிற்கும் புரதத்தைக் களையவும் உதவுகிறது. இந்த beta amyloid என்ற புரதம் தான், மூளையில் plague போன்ற படிமமாகப் படர்ந்து மூளையின் அப்பகுதியைச் செயலிழக்கச்செய்வதால் alzheimers நோய் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.

American Medical Association வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, Clinical trial என்ற ஆய்வுகளில் கிடைக்கப்பெற்ற தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மூளையில் தேங்கும் beta amyloid என்ற புரத்த்தின் 90 சதவீத்த்தை donanemab என்ற மருந்து அகற்றிவிடுவதாகச் சொல்லப்படுகிறது.

A man points to multicoloured brain scans.
A scientist examines scans of an Alzheimers-affected brain. Source: AAP / DAVID A. WHITE / BIOGEN / HANDOUT/EPA

Beta amyloid என்ற toxic protein- நச்சுப் புரதத்தை ஆரம்ப நிலையிலேயே இந்த புதிய மருந்து அகற்றுவதால் -slows down the rate of cognitive decline அறிவாற்றல் சிதையும் வேகத்தை இம்மருந்து குறைக்கிறது என்றுஆரய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

இந்த மருந்து Alzheimers என்ற மறதி நோயைக் குணப்படுத்தும் மருந்தல்ல. ஆனால் கட்டுப்படுத்தும்மருந்து. Alzheimers நோயாளிகள் பிறர் உதவியுன்றி நீண்டகாலம் சுதந்திரமாக வாழ இந்த மருந்து உதவும் என்று பார்க்கப்படுகிறது. Dementia என்ற நோயின் ஒரு பிரிவான Alzheimersஎன்ற மறதி நோய் ஏற்படாமல் தடுக்கவும் இம்மருந்து ஒரு கட்டத்தில் உதவக்கூடும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

Donanemab என்ற மருந்து dementia வுக்கு சிகிச்சையளிக்கக் கண்டுபிடிக்ப்பட்டுள்ள மிக அற்புதமான மருந்து என்று Dementia Australia என்ற அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி Maree McCabe கூறுகிறார். மேலும் dementia என்ற நோய் காரணமாக ஆஸ்திரேலியாவில் வருடாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிலெடுத்தால் இதயநோயால் இறப்பவர்களுக்கு அடுத்தபடியாக இந்நோயால் இறப்பவர்களே அதிகம் என்றும் McCabe கூறுகிறார். பெண்களைப்பொறுத்தளவில் dementia நோய் காரணமாகவே பெரும்பான்மையினர் இறப்பதாகவும் McCabe சொல்கிறார்.

Alzheimer நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் உள்ள ஒருவருக்கு அல்லது mild cognitive impairment -இலேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களுக்கு, இந்தபுதிய மருந்து பெரும் நம்பிக்கையளிப்பதாகவும் McCabe கூறியிருக்கிறார்.

ஆரம்பகட்டத்திலேயே இந்நோயின் அறிகுறிகளைக் கண்டுபிடித்துவிட்டால் உதவியையும் சிகிச்சையையும் உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

A sign outside a building that reads "Lily Corporate Centre".
FILE - A sign for Eli Lilly & Co. sits outside their corporate headquarters in Indianapolis on April 26, 2017. New research shows another experimental Alzheimer's drug can modestly slow patients' inevitable worsening. Patients given monthly infusions of Eli Lilly and Co.'s donanemab declined about four to seven months more slowly than those given dummy infusions in a large study. (AP Photo/Darron Cummings, File) Source: AAP, AP / Darron Cummings

இந்த மருந்தின் பூரண பலனைப்பெற dementia பற்றிய awareness விழிப்புணர்வு மற்றும் understanding புரிதல் ஏற்படவேண்டும் என்பதோடு, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தடையின்றி தகவல்களையும் உதவிகளையும் ஆரம்பநிலையிலேயே பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் donanemab என்ற இந்த மருந்தைப் பயன்படுத்த TGA Therapeutical Goods Administration அங்கீகாரமளிக்கவேண்டும். எல்லா மருந்துகளைப்போலவே இந்த மருந்துகளும் side effects என்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இந்த பக்கவிளைவுகள் பற்றி முழுமையான ஆய்வுகளை நலத்துறையிலுள்ள நிபுணர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க் கப்டுகிறது.

இந்த மருந்தை பயன்படுத்தும் முன்பு, ஒருவருக்கு Alzheimers நோய் இருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும். சதாரண இரத்தப்பரிசோதனை ஒன்றின் மூலமாகவோ அல்லது simple brain scan ஒன்றின் மூலமாகவோ ஆரம்பநிலை Alzheimer நோயின் தாக்கத்தைத் துல்லியமாக தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் இன்றைய மருத்துவ தொழில்நுட்பம் வளரச்சியடைந்துள்ளது.

ஒருவர் Alzheimer நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அவரது செயல் பாடுகளை, நினைவாற்றலை வைத்தே முன்பு அனுமானிக்கவேண்டியிருந்தது. ஆனால் scan தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இதை வெகுவாக மாற்றியிருக்கின்றன என்று இந்தத் துறையிலுள்ளவர்கள் சொல்கிறார்கள்.

Alzheimer's disease affecting the hippocampus, illustration
Illustration showing Alzheimer's disease affecting the hippocampus. Alzheimer's is a neurodegenerative disease that causes the loss of brain tissue. This leads to the progressive and irreversible loss of mental functions and in particular of memory. Alzheimer's disease is caused by neuron and synapse degeneration and the formation of protein plaques in the brain. It is the most common cause of dementia in humans. Credit: PATRICK LANDMANN/SCIENCE PHOTO L/Getty Images/Science Photo Libra

Alzheimer போன்ற மறதி சார்ந்த நோய்களின் தொகுதி dementia என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவரகளது ஞாபகசக்தி memory , நினைவுத்திறன் thinking என்பன பாதிக்கப்படுவதோடு உடல் அவயவங்களைப் பயன்படுத்தி செயல்படுந்திறனும் பாதிக்கப்படுகிறது. Dementia அல்லது Alzheimers நோய் மூப்பின் காரணமாக ஏற்படுகிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால்

Dementia என்பது மூப்பின் காரணமாக ஏற்படும் நோயல்ல என்றும் மூப்பின் காரணமாக சில விடயங்களை சிலர் மறக்க க்கூடும் என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். உதாரணமாக கார் சாவியை எங்கே வைத்தோம் என்பதை மறந்துபோவது; உரையாடலில் சரியான வார்த்தை ஒன்றைத்தேடிப்பிடிக்க முடியாதிருப்பது; தெரந்தவர்களின் பெயரை மறந்து போவது; அண்மையில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றை மறந்து போவது என்பன மூப்பின் காரணமாக ஏற்படும் மறதியாகும். இது alzheimers இன் அறிகுறியாகாது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

Dementia வின் பாதிப்பை பின்வரும் காரணிகள் அதிகரிக்கக் கூடும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்:

  •  உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
  • அளவுக்குஅதிகமான உடற்பருமன் உள்ளவர்கள்
  • புகைத்தல் பழக்கம் உள்ளவர்கள்
  • அளவுக்கு அதிகமான மது அருந்துபவர்கள்
  • உடற் செயற்பாடுகளில் ஈடுபடாதவர்கள்- physically inactive.
  • சமூகத்தோடு இணையாமல் தனித்திருப்பவர்கள்- socially isolated
  • மனச்சோர்வு depression உள்ளவர்கள்

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


3 min read

Published

By R.Sathiyanathan

Source: SBS



Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now