இதன்படி ACT பிராந்தியம் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில், 22ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 1ம் திகதி இரவு 11.59 மணி வரை வீதி விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.
அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.
வீதி விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.
குறிப்பாக வாகனம் ஓட்டும் போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பிடிபடும் ஓட்டுநர்களுக்கு $352 அபராதம் (பள்ளி zoneஇல் $469) மற்றும் 10 demerit points தண்டனை விதிக்கப்படும்.
இதேவேளை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தில் double-demerit points தண்டனை 22ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 7 வரை நடைமுறையில் இருக்கும்.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் குறிப்பிட்ட குற்றங்களை மீண்டும் மீண்டும் செய்பவர்கள்- குறிப்பாக ஒரே குற்றத்தை 12 மாதங்களுக்குள் மீண்டும் இழைத்தால் - இரண்டாவது அல்லது அதற்குப் பிந்தைய குற்றத்திற்கு double demerit தண்டனை பெறுவார்கள்.
இது கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்திற்கு மட்டுமன்றி ஆண்டின் எந்த நேரத்திற்கும் பொருந்தும்.
குயின்ஸ்லாந்தில் பண்டிகைக் காலத்திற்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
NT, விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் டஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
