ஆஸ்திரேலியாவில் உற்பத்தியாகும் Hass avocado பழங்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் வெற்றிகரமாக இறுதிசெய்யப்பட்டுள்ளமையை இருநாடுகளும் வரவேற்றுள்ளன.
நாட்டில் அதிகப்படியான Hass avocado உற்பத்தி, இத்தொழில்துறையை தொடர்ந்து பாதிக்கின்ற பின்னணியில், இந்த ஒப்பந்தம் avocado உற்பத்தியாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என விவரிக்கப்படுகிறது.
இந்திய மக்கள் தொகையில் 1 சதவீதம் பேர் ஆஸ்திரேலிய Hass avocado பழங்களை வாங்கினால், 15 மில்லியன் பழங்கள் விற்பனையாகியிருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஹாங்காங்கில் உள்ள தற்போதைய ஏற்றுமதி சந்தைகளைப் போலல்லாமல், இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மக்கள் தொகை, ஆஸ்திரேலியாவின் avocado தொழில்துறையில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என Avocados Australia தலைமை நிர்வாகி John Tyas தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, இந்தியாவிற்கு பத்து தொகுதி Hass avocado பழங்களை சோதனை அடிப்படையில் அனுப்பும்பட்சத்தில், இருநாடுகளுக்கிடையிலான இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
இப்போது avocado தொழில்துறையானது அதிகளவு பழங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதால், இந்த இலக்கை எட்டுவது மிகச் சுலபம் என John Tyas தெரிவித்தார்.
இதேவேளை இந்தியாவுடன் குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்காக John Tyas அரசைப் பாராட்டினார்.
"அனைத்து ஆஸ்திரேலிய Hass avocado உற்பத்தியாளர்களும் பயன்படுத்தக்கூடிய, வணிக ரீதியாக சாத்தியமான நெறிமுறையை அடைய, இத்தொழில்துறையுடன் ஆஸ்திரேலிய அரசு மிகவும் கடினமாகவும் நெருக்கமாகவும் உழைத்துள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
