இந்தியாவிலிருந்து மேலும் 150 பேர் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டனர்!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கோவிட் பேரவலத்திற்குள் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கையின்கீழ், மற்றுமொரு தொகுதி ஆஸ்திரேலியர்கள் சிறப்பு விமானம் மூலம் டார்வினை வந்தடைந்துள்ளனர்.

 The second repatriation flight from India has landed in Darwin

Supplied Image by RAAF - Passengers disembarking a Qantas repatriation flight from India at RAAF Base Darwin in the Northern Territory. Source: Royal Australian Air Force

Highlights

  • இந்தியாவில் சிக்கியிருந்த ஆஸ்திரேலியர்களில் 150 பேரை ஏற்றிக்கொண்டு Qantas-QF112 விமானம் ஆஸ்திரேலியா வந்தடைந்தது.
  • இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியர்களை அழைத்துவரும் சிறப்பு திட்டத்தின்கீழ் டார்வினை வந்தடைந்த மூன்றாவது விமானம் இதுவாகும்.
  • இந்தியாவிலிருந்து மேலும் பல ஆஸ்திரேலியர்கள் ஜுன் 4ம் திகதிக்கு முன்னர் ஆஸ்திரேலியா வருவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சிக்கியுள்ள ஆஸ்திரேலியர்கள் கட்டம் கட்டமாக அழைத்துவரப்படும்நிலையில் இன்று மற்றுமொரு விமானம் மூலம் சுமார் 150 பயணிகள் டார்வின் RAAF base-ஐ வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் Howard Springs தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்துள்ளது.

ஏற்கனவே கடந்த மே 15ம் திகதி 80 பேரும் மே 23ம் திகதி 165 பேரும் சிறப்பு விமானங்கள் மூலம் டார்வினை வந்தடைந்திருந்த நிலையில் இவர்களில் இருவருக்கு மாத்திரம் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தப்பின்னணியில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியர்களை அழைத்துவரும் சிறப்பு திட்டத்தின்கீழ் டார்வினை வந்தடைந்த மூன்றாவது விமானம் இதுவாகும்.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா திரும்புவதற்கென சுமார் 11 ஆயிரம் பேர் DFAT-இல் பதிவுசெய்துவிட்டு காத்திருப்பதாகவும் இவர்களில் சுமார் ஆயிரம் பேர் எளிதில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்தில் உள்ளவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வருவதற்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து இவர்களை கட்டம்கட்டமாக ஆஸ்திரேலியா அழைத்துவரும் நடவடிக்கையினை அரசு மேற்கொண்டுள்ளது.

அரசின் இந்தப்பணியில்  நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களும் உதவிவருகின்றன.

ஆஸ்திரேலியாவுக்கான சிறப்பு விமானத்தில் பயணிப்பவர்கள் இரு தடவைகள் கோவிட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டபின்னரே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேவேளை அடுத்துவரும் நாட்களில் இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் பல ஆஸ்திரேலியர்கள் அழைத்துவரப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.

உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.

ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.

அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

2 min read

Published

Updated

By Renuka


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now