சமூக வலைத்தளங்களின் வழியாக மேற்படி குற்றங்களை இழைத்துக்கொண்டிருப்பதாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய பொலீஸார் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், கடந்த 2020 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் மெல்பனில் வைத்துக் கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட இளைஞனுக்கு இன்று புதன்கிழமை விக்டோரிய நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டு மாணவர் விசாவில் கல்வி கற்பதற்காக வந்த, இலங்கையின் கண்டியைச் சேர்ந்த ரண்பதி அமரசிங்க என்ற 24 வயது இளைஞனே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் ஆவார்.
பதினொரு வயது சிறுமிகள் முதல் பலரிடம் சமூக வலைத்தளங்களின் உட்பெட்டிகளில் இரகசியமாகப் பேசி, அவர்களை மயக்கி நிர்வாணப் புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டார் என்றும், அந்தச் சிறுமிகள் மேலதிகமாகப் புகைப்படங்களை அனுப்ப மறுத்தபோது, அவர்களது பெற்றோர் மற்றும் ஆண் நண்பர்களிடம் அந்தப் படங்களை அனுப்பப்போவதாக மிரட்டினார் என்றும், பல சம்பவங்கள் இவருக்கு எதிரான வழக்கில் ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டது.
அமெரிக்காவிலுள்ள சிறுமியுடன் பேசத் தொடங்கி, அவரிடம் பெற்றுக்கொண்ட நிர்வாணப் படங்களுக்கு மேலதிகமாகப் படங்களை அனுப்புவதற்கு அவர் மறுத்த காரணத்திற்காக, ஏற்கனவே பெற்றுக்கொண்ட படங்களை பாலியல் தளமொன்றில் பதிவேற்றினார் என்றும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பிட்ட அமெரிக்கச் சிறுமி அமெரிக்கப் பொலீஸில் முறைப்பாடு செய்திருந்தார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சுமார் இருபது மாதங்களாகக் கொடிய பாலியல் குற்றங்களைச் செய்து அப்பாவிச் சிறுமிகள் பலரது வாழ்வை நாசமாக்கியதற்காக இந்தத் தண்டனையை வழங்குவதாக தீர்ப்பை வழங்கிய நீதிபதி இன்றைய அமர்வில் குறிப்பிட்டிருக்கிறார்.
தண்டனைக்காலம் முடிவடைந்ததும் அல்லது பரோலில் விடுதலையானதும் ரண்பதி அமரசிங்க இலங்கைக்கு நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
