SKIP TO MAIN CONTENT

சட்டத்திற்கு புறம்பான உணவுப்பொருளைக் கொண்டுவந்தால் சிறைத்தண்டனை கிடைக்கலாம் - அமைச்சர் எச்சரிக்கை

வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ஆமை மற்றும் தவளை இறைச்சி உட்பட கிட்டத்தட்ட 40 தொன் தடைசெய்யப்பட்ட ஆபத்துள்ள உணவு வகைகள் ஆஸ்திரேலிய உயிரியல் பாதுகாப்பு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

image (5).jpg
Credit: Department of Agriculture, Fisheries and Forestry

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

கடந்த பிப்ரவரி மாத பிற்பகுதியில் சிட்னியிலுள்ள warehouse ஒன்றிலிருந்து குறித்த உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்ததாகவும், இவை எங்கிருந்து எப்படி ஆஸ்திரேலியாவுக்குள் வந்து சேர்ந்தன என்பது குறித்து விசாரணை நடத்திவருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொருட்கள் மூலம் ஆபத்தான சில நோய்கள் ஆஸ்திரேலிய விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு பரவியிருக்கக்கூடிய பெரும் ஆபத்து காணப்பட்டதாக 2GB வானொலியிடம் தெரிவித்த விவசாய அமைச்சர் Murray Watt, ஆஸ்திரேலிய வரலாற்றில் இதுவரை இல்லாதளவுக்கு மிகப்பெரிய அளவில் இத்தகைய தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறினார்.

இப்பொருட்களில் ஆமை இறைச்சி, தவளை இறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, இறால், கோழி இறைச்சி, வாத்து இறைச்சி, இஞ்சி, சோளம், வெள்ளைப்பூடு உள்ளிட்ட மேலும் பல ஆபத்தான விலங்கு மற்றும் தாவர வகைகள் அடங்குவதாக அமைச்சர் Murray Watt குறிப்பிட்டார்.

இக்குற்றச்செயலைப் புரிந்தவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அமைச்சர் கூறினார்.

இதுதவிர ஆஸ்திரேலியாவின் உயிரியல் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதற்கான அபராதம், நிறுவனங்களுக்கு $6,875,000 அல்லது தனிநபர்களுக்கு $1,375,000 ஆக உள்ளது.

பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள விவசாய சொத்துக்கள் மற்றும் தொழில்களை நோய்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கவென, ஆஸ்திரேலியாவில் கடுமையான உயிரியல் பாதுகாப்பு சட்டங்கள் நடைமுறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now