SKIP TO MAIN CONTENT

விமான விபத்தில் பலியான ஆஸ்திரேலிய தமிழர்: இறுதி நிகழ்வு இன்று!

பிலிப்பீன்ஸ் நாட்டில் இடம்பெற்ற விமானவிபத்தில் ஆஸ்திரேலியாவாழ் தமிழரான கார்த்தி சந்தானம் அவர்கள் கொல்லப்பட்டிருந்தநிலையில், அவரது இறுதிநிகழ்வு இன்று அடிலெயிட் நகரில் நடைபெற்றது.

image (2).jpg
Rescue crews in the Philippines climb the volcano to the crash site. Inset:Karthi Santhanam Credit: Philippine Information Agency & Facebook

1 min read

Published

Source: SBS


Skip to article content

பிலின்பீன்ஸைத் தளமாகக்கொண்ட Energy Development Corporation (EDC) நிறுவனத்தில் தொழிநுட்ப ஆலோசகர்களாக கடமையாற்றிய ஆஸ்திரேலியர்களான முத்துகார்த்திகேயன் சந்தானம் (கார்த்தி) மற்றும் Simon Chipperfield ஆகியோர், கடந்த பெப்ரவரி மாதம் 18ம் திகதி விமான விபத்தில் சிக்கியிருந்தனர்.

அன்றையதினம் Bicol சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம், Simon Chipperfield, விமானி மற்றும் விமானப்பணியாளர் ஆகியோருடன் புறப்பட்ட இலகுரக விமானம், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு மணிலாவில் தரையிறங்க வேண்டியிருந்தபோதிலும், கட்டுப்பாட்டு கோபுரத்துடனான தொடர்பை இழந்திருந்தது.

இதையடுத்து விமானத்தைத் தேடும்பணிகள் ஆரம்பிக்கப்பட்டபோது, குறித்த விமானம் Mount Mayon எரிமலைப்பகுதியில் விபத்திற்குள்ளானமை கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதில் பயணம் செய்த நால்வரும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த கார்த்தி சந்தானம் அவர்களின் இறுதிநிகழ்வு அடிலெய்டில் The Heysen, Centennial Park எனுமிடத்தில் இன்று நடைபெற்றது.

தமிழகத்தைச் சேர்ந்த கார்த்தி சந்தானம் அவர்கள் தனது குடும்பத்துடன் அடிலெயிட் நகரில் பல ஆண்டுகள் வாழ்ந்துவந்த அதேநேரம், அவர் சமூகத்தவர்களால் நன்கு நேசிக்கப்பட்டவராக காணப்பட்டதாகவும், அவரும் சமூகத்திற்கு பல உதவிகள் புரிந்ததாகவும் அவரது நண்பர்கள் SBS தமிழிடம் தெரிவித்தனர்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in  

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now