SKIP TO MAIN CONTENT

தெற்கு ஆஸ்திரேலியாவில் காவல்துறையினர் மீது கத்திக்குத்து! நபர் ஒருவர் சுட்டுக்கொலை!!

தெற்கு ஆஸ்திரேலியாவின் மத்திய வடக்கில் உள்ள Crystal Brookஇல் இடம்பெற்ற அதிக ஆபத்துள்ள சம்பவத்துடன் தொடர்புடையதாக, இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்தியால் குத்தப்பட்டதாகவும், தாக்குதலாளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

AAP
Two police officers have reportedly been stabbed and an offender shot dead in an incident in South Australia's mid-north. Source: AAP / AAP

1 min read

Published

Updated

Source: SBS


Skip to article content

தெற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய வடக்கில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கத்தியால் குத்தப்பட்டதாகவும், தாக்குதலாளி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Crystal Brookஇல் நடந்த அதிக ஆபத்துள்ள சம்பவம் தொடர்பில் பதில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், துணை மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அடிலெய்டில் இருந்து வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு, மருத்துவ உதவி வழங்கும் ஹெலிகாப்டரும் புதன்கிழமை நண்பகலுக்கு முன்னதாக அனுப்பப்பட்டது.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டதாகவும், அவர் Royal Adelaide மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இரண்டாவது அதிகாரிக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஆணையர் Grant Stevensஇடம் பேசியதாக தெற்கு ஆஸ்திரேலிய Premier Peter Malinauskas கூறினார்.

காயமடைந்த இரண்டு அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பில் தான் கரிசனை கொண்டுள்ளதாக கூறிய Peter Malinauskas, காவல்துறையினர் ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம்வைத்து எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் எனவும், அதற்காக நாங்கள் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now