கழிவுப்பொருட்களை மீள்சுழற்சியின் மூலம் மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் பொருட்களை உற்பத்திசெய்வதற்கான விஞ்ஞானப் பொறிமுறையொன்றைக் கண்டுபிடித்த, இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்ணுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் விருது - 2022 NSW Australian of the Year - அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை, சிட்னி லூனா பார்க்கில் இடம்பெற்ற நிகழ்வில் துறைசார் விஞ்ஞானியும், பல சாதனைகளை செய்தவருமான Veena Sahajwalla அவர்களுக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது.
மும்பாயில் பிறந்து கனடா - வான்குவரில் துறைசார் கற்கைநெறியை நிறைவுசெய்துகொண்டு,
தனது கணவரோடு ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த Veena Sahajwalla, Sustainable Materials Research and Technology எனப்படுகின்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டுமுதல் பேராசிரியராக கடமையாற்றும் இவர், 1989 ஆம் ஆண்டிலிருந்து இந்தத் துறைசார் ஆராய்ச்சிகளிலும் புதிய கண்டுபிடிப்புக்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.