கிரிக்கெட்டில் இந்திய துணைக்கண்டம் எப்படி செல்வாக்கு செலுத்துகிறது?

Sri Lankan Captain Arjuna Ranatunga in heated discussion with umpires Ross Emerson and Anthony McQuillan

Sri Lankan Captain Arjuna Ranatunga in heated discussion with umpires after bowler Muttiah Muralitharan was called for chucking in a one-day match against England at Adelaide Oval. Ranatunga was given a six-month suspended sentence by the ICC over the incident. Credit: PA Images via Getty Images

ஆஸ்திரேலியாவில் உள்ள அதிகாரப்பூர்வ கிரிக்கெட் அமைப்புகளுக்கு இந்திய கிரிக்கெட்டை அங்கீகரிக்க பல ஆண்டுகள் ஆனது. கடந்த சில தசாப்தங்களில், துணைக் கண்டத்தில் இருந்து வரும் பணம், கிரிக்கெட் மைதானத்திலும் வெளியேயும் அதிகார சமநிலையை மாற்றியுள்ளது. Colours of Cricket இன் நான்காவது பாகம் இது குறித்து ஆராய்வதுடன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் துணைக் கண்ட அணிகள் மற்றும் ரசிகர்களின் அதிகரித்து வரும் செல்வாக்கையும் எடுத்துக்கூறுகிறது.


1928 இல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அமைக்கப்பட்டபோது, அவர்கள் ஆஸ்திரேலிய தேசிய அணியை சுற்றுப்பயணம் செய்யுமாறு கோரினர்.

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அதிகாரிகள் தங்கள் துணைக்கண்ட சகாக்களின் இந்த அழைப்பு தொடர்பில் அலட்சியமாக இருந்தனர்.

முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு 1947 இல், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தபோது நிகழ்ந்தது.

அதற்குப் பின் இரண்டு தசாப்தங்களாக இந்திய அணி மீண்டும் அழைக்கப்படவில்லை.

ஆனால் இப்போது 2022ஐப் பார்த்தால், இந்தியா மற்றும் பிற தெற்காசிய நாடுகளின் சுற்றுப்பயணங்களின் ஊடாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வருவாய் ஈட்டுகிறது.

இந்திய அணியின் சுற்றுப்பயணம் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு மிக முக்கியமான ஒன்று என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Colours of Cricket podcast-இன் இந்தப் பாகத்தில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ், இஜாஸ் அகமது, Lisa Sthalekar மற்றும் பலர் பங்கேற்றிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவில் விளையாடும் போது 1981ல் இந்திய அணியும், 1999ல் இலங்கை அணியும் சண்டையிட்டதையும், 1992ல் மெல்பனில் நடந்த ஐசிசி உலக கோப்பையை பாகிஸ்தானின் இம்ரான் கான் கைப்பற்றியமையையும் கேளுங்கள்.

Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.

சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.

SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.

இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radi App-இல் Colours of Cricket-ஐ பின்தொடருங்கள்.
Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan
Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Kaur Singh

Advisor: Patrick Skene

——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 
tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand
கிரிக்கெட்டில் இந்திய துணைக்கண்டம் எப்படி செல்வாக்கு செலுத்துகிறது? | SBS Tamil