உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகிறதென்றால் அல்லது புதிதாக தாயானவராக இருந்தால், 'baby blues' பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் - குழந்தை பெற்ற பிறகு புதிய தாய்மார்களில் ஐவரில் நால்வர் அனுபவிக்கும் சவாலான உணர்வுகளே இதுவாகும்.
இருப்பினும், பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வு-Postnatal depression இதிலிருந்து வேறுபட்டது. இதுவும் பெற்றோரை பாதிக்கலாம் மற்றும் அதன் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் கால அளவு மாறுபடும்.
புதிய தாய்மார்கள் குழந்தை பிறந்தவுடன் 'baby blues' என்று அழைக்கப்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் விரும்பத்தகாத உணர்வுகள் மற்றும் மனநிலை, பதட்டம், கண்ணீர் மற்றும் தூங்குவதில் சிரமம் ஆகியவற்றை அனுபவிக்கலாம்.
இது சவாலானதாக இருந்தாலும், இந்த உணர்வுகள் பொதுவாக மருத்துவ சிகிச்சையின்றி விரைவாக கடந்து செல்கின்றன.
இருப்பினும், உங்கள் அறிகுறிகள் தொடர்ந்தால் அல்லது உங்களுக்கும் உங்கள் புதிய குழந்தைக்கும் இடையிலான உறவில் இது சிக்கலை ஏற்படுத்தினால் நீங்கள் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை அனுபவிக்கக்கூடும்.

கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பின் perinatal depression ஒருவருக்கு ஏற்படலாம் என்று மருத்துவ உளவியலாளரும் Perinatal Anxiety & Depression Australia (PANDA) தலைமை நிறைவேற்று அதிகாரியுமான Julie Borninkhof கூறுகிறார்.
வாழ்க்கையின் வேறு எந்த நிலையிலும் மனச்சோர்வு உள்ள ஒருவரின் அனுபவத்தை ஒத்த அறிகுறிகளே இதன்போதும் காணப்படும் என அவர் விளக்குகிறார்.
இதற்கு முன்பு மனச்சோர்வை அனுபவித்த பெண்களுக்கு perinatal depression ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இது தவிர மரபணு ரீதியாக குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களும் கூடுதலான ஆபத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்கிறார் Julie Borninkhof.
தனது கர்ப்ப காலம் உற்சாகமும், ஆயத்த உணர்வும் நிறைந்ததாக இருந்ததாகவும் ஆனால், தன் மகன் பிறந்த உடனேயே தனது ஆயத்த உணர்வு பயமாக மாறியதாகவும் தற்காலிக 'baby blues'-க்கு அப்பால், சவாலான உணர்வுகள் வாரக்கணக்கில் நீடித்ததாகவும் மூன்று வயது அசாயின் தாயான Sarah Bari நினைவுகூர்கிறார்.

தனது குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்தபோது தனக்கு perinatal depression இருப்பது கண்டறியப்பட்டதாக கூறும் Sarah Bari, ஆஸ்திரேலியாவில் எந்தவொரு குறிப்பிட்ட இனம் அல்லது கலாச்சாரம் என்றில்லாமல் பலர் மத்தியில் perinatal depression ஐப் பற்றிப் பேசுவதற்கு தயக்கம் உள்ளது என்கிறார்.
இதேவேளை perinatal depression பெண்களை மட்டுமே பாதிக்கிறது என்பது ஒரு கட்டுக்கதை எனவும் இது ஆண்களையும் பாதிக்கும் எனவும் சொல்கிறார் லைஃப்லைனின் Executive Director of Service Delivery Jakqui Barnfield.
பத்து ஆண்களில் ஒருவர் perinatal depression-ஐ அனுபவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பெண்களில் இது அதிகமாக இருந்தாலும், இதற்கான தூண்டுதல்கள் ஒரே மாதிரியானவை என Dr Jakqui Barnfield
கூறுகிறார்.
பிரசவத்திற்குப் பிந்தைய postnatal depression-ஐ யார் அனுபவிக்கிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், தம்பதிகள் தமக்கிடையில் நல்ல பேச்சுத்தொடர்பைப் பேணுவது முக்கியமாகும்.

Postnatal depression-க்கு சிகிச்சைகள் உள்ளன. உங்கள் மருத்துவர் உங்கள் தேவைகளை மதிப்பிட்டு உங்களுக்கு பொருத்தமான சிகிச்சையை பரிந்துரைப்பார்.
தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சையானது தனது மனநிலையில் உறுதியான முன்னேற்றத்தைக் கொண்டு வந்ததாக Sarah Bari சொல்கிறார்.
புதிதாக பெற்றோரானவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் மன ஆரோக்கியத்தை கண்காணிப்பது முக்கியம் என வலியுறுத்தும் Perinatal Anxiety & Depression Australia -PANDA தலைமை நிறைவேற்று அதிகாரி Julie Borninkhof, perinatal depression ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கான தயார்நிலையுடன் அவர்கள் இருக்க வேண்டுமெனவும் அது ஏற்பட்டால் உடனடியாக உதவியை நாடுவது முக்கியம் என்றும் வலியுறுத்துகிறார்.

கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை அனுபவிப்பவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் பின்வரும் உதவிகள் கிடைக்கின்றன
- For help with perinatal anxiety and depression, call PANDA (Perinatal Anxiety & Depression Australia) on 1300 726 306 or visit panda.org.au for resources translated into 40 languages.
- For information and free individual psychological counselling sessions (a maximum of 10 sessions) for expectant and new parents, delivered face-to-face from various locations in NSW, QLD and VIC, or telehealth sessions, visit the Gidget Foundation.
- For LGBTIQ+ support with mental health, contact QLife on 1800 184 527 or visit qlife.org.au.
- For 24/7 crisis support, call Lifeline on 13 11 14.
- For telephone and online counselling services specific to men, call Mensline on 1300 78 99 78 or visit mensline.org.au.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.








