Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

நரிக்குறவர் சமூகத்தின் விடியல் பெண் சீதா

Seetha Mahendiran

Seetha Mahendiran. Source: Seetha Mahendiran

தமிழ்நாட்டிலுள்ள நாடோடி பழங்குடியினரான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் சீதா மகேந்திரன். அவரது சமூகத்தில் உள்ள பலரைப் போலவே, 12 வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த சீதா அவர்கள், 1990ஆம் ஆண்டு அவரது கணவருடன் நரிக்குறவர் கல்வி மற்றும் நலன்புரி சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.

Published

Updated

By Kulasegaram Sanchayan

Source: SBS

Share this with family and friends

தமிழ்நாட்டிலுள்ள நாடோடி பழங்குடியினரான நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் சீதா மகேந்திரன். அவரது சமூகத்தில் உள்ள பலரைப் போலவே, 12 வயதில் அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. கல்வியின் மதிப்பை நன்கு உணர்ந்த சீதா அவர்கள், 1990ஆம் ஆண்டு அவரது கணவருடன் நரிக்குறவர் கல்வி மற்றும் நலன்புரி சங்கம் என்ற அமைப்பை நிறுவினார்.

நரிக்குறவர் சமூகத்திலுள்ள மற்றும் மேலும் ஐந்து சமூகங்களிலுள்ள பின்தங்கிய குழந்தைகளுக்கு, இந்த சங்கத்தினூடாக உணவு, தங்குமிடம் மற்றும் கல்வியை வழங்கி வருகிறார் சீதா அவர்கள்.  கல்வி, சுகாதாரம், மனித உரிமைகள் மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகிய நான்கு முக்கிய துறைகளை மையப்படுத்தி இவர் ஆரம்பித்த சங்கம் சேவை வழங்கி வருகிறது.

சீதா மகேந்திரன் அவர்களின் களப் பணிக்காக, அவள் விகடன் பத்திரிகை சமீபத்தில் அவருக்கு சேவை தேவதை சீதா என்ற பட்டம் வழங்கியுள்ளது.  அவரது வாழ்க்கை, அவரது ஆர்வம் மற்றும் இந்த நலன்புரி சங்கத்தினூடாக அவர் ஆற்றி வரும் பணிகள் குறித்து குலசேகரம் சஞ்சயனுடன் பேசுகிறார் சீதா மகேந்திரன். 

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.

டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now