ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப துறையில் வேலைவாய்ப்பை பெறுவது எப்படி?

WIP_ICT_stock_pop.jpg

What challenges do skilled migrants face when seeking ICT jobs in Australia?

ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) துறையில் பணியாற்றும் திறமை அடிப்படையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை தேடல், உள்ளூர் அனுபவம் பெறல் மற்றும் நெட்வொர்க்கிங் செய்து தொழில்துறையில் முன்னேறுவது தொடர்பில் சந்திக்கும் சவால்களை எவ்வாறு கடந்து செல்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வோம்.


இந்தக் கட்டுரை, ஆஸ்திரேலியாவில் அர்த்தமுள்ள தொழில்களைக் கட்டியெழுப்பும் திறமையான புலம்பெயர்ந்தோரின் பயணங்களை ஆராயும் 'Australia Explained '- இன் 'Work in Progress' தொடரிலிருந்து நடைமுறை குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறது. ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இதன் அனைத்து அத்தியாயங்களையும் கேளுங்கள்.

இந்த அத்தியாயத்தில் விஷாலின் கதையை கேட்கவுள்ளோம். அவர் ஆஸ்திரேலியாவின் ICT வேலை சந்தையில் தன்னை நிலைநிறுத்துவதற்கான சவால்களை எப்படி கடந்தார் என்பதையும், திறமை அடிப்படையில் குடியேறிய தொழிலாளர்கள் எவ்வாறு தடைகளை எதிர்கொண்டு, நெட்வொர்க்கிங் செய்து, தங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றியடையலாம் என்பதற்கான நிபுணர்களின் ஆலோசனைகளையும் பார்க்கலாம்.

ஏன் ஆஸ்திரேலியாவின் ICT துறை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அதிகமாக நம்புகிறது?

ஆஸ்திரேலியாவின் தகவல் தொடர்பு தொழில்நுட்ப(ICT) துறையில் புலம்பெயர்ந்தோர் ஒரு உந்து சக்தியாக உள்ளனர். மென்பொருள் மற்றும் செயலிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் மூன்றில் இரண்டு பேர் குடியேற்றவாசிகள். அதில், இந்தியாவில் பிறந்தவர்கள் முன்னணியில் நிற்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் ICT துறை புலம்பெயர்ந்தோரை நம்பியுள்ளபோதிலும் இந்தியாவில் பிறந்த விஷால் போன்ற தகுதிவாய்ந்த data analyst நிபுணர் கூட தனது முதல் வேலையைத் தொடங்குவதற்கு முன்பு 80 க்கும் மேற்பட்ட CVகளை அனுப்பவேண்டியிருந்தது.
Vishal Mittal at Canberra University during his Masters in Data Science.jpeg
Vishal Mittal at Canberra University during his Masters in Data Science.

ஆஸ்திரேலியாவில் ICT துறையின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்?

AI மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப, ஆஸ்திரேலியாவிற்கு 2030 ஆம் ஆண்டுக்குள் மில்லியன் கணக்கான தொழில்நுட்ப தொழிலாளர்கள் தேவைப்படுவார்கள்.

இது வாய்ப்புக்களையும் அவசர தேவையையும் ஒரே நேரத்தில் பிரதிபலிக்கின்றது என்கிறார் Australian Computer Societyயில் (சுருக்கமாக, ACSயில்) Migration Pathways என்ற அமைப்பின், இயக்குனர் Betsy Gregg.
உண்மையில், இன்று நாம் எதிர்கொள்ளும் திறன் பற்றாக்குறை எதிர்காலத்தில் நமக்கு தேவைப்படப்போகும் திறன் பற்றாக்குறை அல்ல என்பதையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
Betsy Gregg

ஆஸ்திரேலியாவில் ICT வேலைகளைத் தேடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?

திறமையான புலம்பெயர்ந்தோர் பலர் - வலுவான கல்விப் பின்னணியைக் கொண்டவர்கள் கூட - எதிர்பாராத தடைகளை எதிர்கொள்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் திறன் கொண்ட புலம்பெயர்ந்தோரில் 56 சதவீதம் பேர் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாகவும், 46 சதவீதம் பேர் முதுகலைப் பட்டம் பெற்றவர்களாகவும் இருந்தாலும், சிலர் தங்கள் துறையில் வேலை கிடைக்க இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள்.
Jiaranai Keatnuxsuo, an AI architect based in Perth.jpg
Jiaranai Keatnuxsuo, an AI architect based in Perth.
உதாரணமாக, விஷால் மிட்டல் இந்தியாவின் குஜராத்தில் ஒரு காலத்தில் வெற்றிகரமான மென்பொருள் பொறியாளராக இருந்தார். ஒரு திடமான வேலை மற்றும் நிலையான வாழ்க்கையுடன் இருந்த அவர் அங்கிருந்து வெளியேறுவதற்கு எந்த காரணமும் இருக்கவில்லை.

ஆனால், தனது வாழ்க்கையில் முன்னேற விரும்பிய விஷாலுக்கு தொழில் முன்னேற்றம், உலகத் தரம் வாய்ந்த கல்வி மற்றும் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை ஆஸ்திரேலியா உறுதியளித்தது.

கான்பெரா பல்கலைக்கழகத்தில் இரண்டு வருட முதுகலை தரவு அறிவியல் படிப்பதற்காக, இந்தியாவில் தனது அதிக சம்பளம் பெறும் வேலையை விஷால் விட்டு விட்டார். Covid பெருந்தொற்று காரணமாக, சர்வதேச எல்லைகளை மூடப்பட்டிருந்தமையால் முதல் 18 மாதங்களும் அவர் தொலை தூரத்திலிருந்து கல்வி கற்றார். இறுதியாக 2022 ஆம் ஆண்டில், அவர் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தார்.

இந்த நகர்வால் அவரது சூழல் மட்டுமல்ல, வாழ்க்கைத் தரமும் உடல்நலமும் முன்னேறியது.

உயர் பட்டங்களைப் பெற்றிருந்தாலும், விஷாலுக்கு ஒரு பகுதிநேர வேலை கூட கிடைக்கவில்லை. “நீங்கள் அதிக தகுதியுடையவர்” என்று அவருக்கு கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை, விஷால் சுமார் 80 விண்ணப்பங்களை அனுப்பினார். இருந்தாலும் இரண்டு நேர்காணல்களுக்கு மட்டுமே அவர் அழைக்கப்பட்டார். முதலாவது நேர்காணல் ஒரு வீடியோ நேர்காணல் என்பதால் அது அவரை பதட்டமடைய வைத்தது.

"கமராவை ஆன் செய்தவுடன் நான் பதட்டப்பட ஆரம்பித்தேன். கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்ட போது, என்னால் பதிலளிக்க முடியவில்லை. எனது வாயிலிருந்து வார்த்தைகளே வரவில்லை" என்று விஷால் நினைவுகூர்கிறார்.
Ayesha Umar, National Executive Committee Member of the Career Development Association Australia (CDAA).jpg
Ayesha Umar, National Executive Committee Member of the Career Development Association Australia (CDAA).

ICT தொழில்நிபுணர்கள் ஆஸ்திரேலியாவில் வெற்றியடைய என்ன மாதிரியான வேலை தேடல் உத்திகள் உதவலாம்?

பாகிஸ்தானைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், Career Development Association Australia என்ற அமைப்பில் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆயிஷா உமர், இந்தச் சவாலை நன்கு புரிந்துகொள்கிறார்.

வெறும் spam விண்ணப்பங்களை மட்டும் செய்யாமல் சந்தையை நன்கு படிக்குமாறு அவர் அறிவுரை சொல்கிறார்.
வேலைவாய்ப்பு விளம்பரத்தைப் பாருங்கள். அவர்கள் முதலாவதாகக் குறிப்பிட்டுள்ளது கட்டாயம். இரண்டாவது புள்ளி உங்கள் முதலாளியின் இரண்டாவது விருப்பமாகும். வேலை விளம்பரத்தில் கேட்கப்பட்டுள்ளவற்றுடன் உங்கள் தகுதியும் அனுபவமும் ஒத்துபோவதுபோன்ற வகையில் உங்கள் விண்ணப்பத்தை சீரமைப்பதில் கவனம் செலுத்துங்கள்
Ayesha Umar
வேலை தேடும் போது பல குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் ஒரு சவால், தொழில் மற்றும் வேலை விளம்பரங்களில் தரப்பட்டிருக்கும் தலைப்புகளைச் சுற்றியுள்ள சொற்களைப் புரிந்து கொள்வதாகும்.

வணிக ஆய்வாளர் என்பது எத்தகைய பாத்திரம்? ஒரு தரவு விஞ்ஞானி என்பவர் ஒரு பொறியாளரா? போன்றவை புதியவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

ACS ஆய்வுப் படி, ICT துறையில் உள்ள புலம்பெயர் நிபுணர்களில் சுமார் 30 சதவிகிதம் பேர் தங்களின் திறன் மட்டத்திற்கு கீழான பணியிலேயே ஆரம்பிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதற்குக் காரணம் திறமையில்லாமை அல்ல என்று கூறுகிறார் Betsy Gregg.
ஆஸ்திரேலிய வேலை தேடல் பாணி மிகவும் வித்தியாசமானது. புலம்பெயர்ந்தோர் எப்போதும் நேர்காணல் நிலை வரை செல்வதில்லை.
Betsy Gregg

ஏன் ICT துறையில் உள்ளூர் அனுபவத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது?

தகுதியும், நன்றாக தயார் செய்யப்பட்ட CV-யும் இருந்தபோதும், பெரும்பாலான புலம்பெயர் பின்னணி கொண்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் — உள்ளூர் அனுபவம் இல்லாதது.

ICT துறையில் உள்ள புலம்பெயர் பின்னணி கொண்ட நிபுணர்களில் 55 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோருக்கு இதுவே முக்கிய தடையாக உள்ளது.

வேலைவழங்குநர்கள் பல நேரங்களில் உள்ளூர் வேலை அனுபவத்தைக் கொண்டு மட்டுமே CV-களைத் தெரிவுசெய்கின்றனர், இதனால் நேர்முகத் தேர்வுக்கு கூட வர முடியாமல் பல திறமையான விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்திலேயே வெளியேற்றப்படுகிறார்கள்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவில் தங்கள் ICT திறன்களை எப்படி நெட்வொர்க்கிங் மூலம் வெளிப்படுத்தலாம்?

வழக்கமான வேலை தேடல் முறைக்கு மேலதிகமாக மாற்று நுழைவுப் பாதைகளை ஆராயுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது, GitHubஇல் திறந்த மூல திட்டங்களை உருவாக்குவது அல்லது நடைமுறை அனுபவத்தை நிரூபிக்க சமூகத்திற்குள் தன்னார்வத் தொண்டு செய்வது போன்றவற்றை Betsy பரிந்துரைக்கிறார்.

ஹாக்கத்தான்கள்(hackathons) மற்றொரு வலுவான உத்தி..

பெர்த் நகரத்தைச் சேர்ந்த AI ஆர்கிடெக்ட் Jiaranai Keatnuxsuo, ஹாக்கத்தான்கள் மூலம் உள்ளூர் நிபுணர்களுடன் இணைந்து நெட்வொர்க்கிங் செய்து, உண்மையான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை உருவாக்கும் வாய்ப்புகளை பெற்றார்.

“நீங்கள் தொழில்நுட்பப் பலத்தை மட்டும் கட்டியெழுப்பவில்லை, துறையுடன் நேரடி தொடர்புகளையும் உருவாக்குகிறீர்கள்,” என அவர் கூறுகிறார்.

உங்கள் வேலை மற்றும் திறன்களை ஆன்லைனில் காண்பிப்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.
ஒரு தொழில்நுட்ப blog-ஐ எழுதுங்கள். உங்கள் code-ஐப் பகிருங்கள். LinkedIn-இல் இணையுங்கள். ஆஸ்திரேலியர்கள் LinkedIn-இல் உள்ளனர். அவர்கள் உங்களை நினைவில் வைத்திருப்பார்கள்.
Jiaranai Keatnuxsuo
Betsy Gregg, Director of Migration Pathways at the Australian Computer Society.jpg
Betsy Gregg, Director of Migration Pathways at the Australian Computer Society. Credit: ALISON MCWHIRTER alison@alisonmc

ICT நிபுணர்கள் ஆஸ்திரேலிய வாழ்க்கை மற்றும் வேலை சூழலுடன் எப்படி ஒருங்கிணைந்து செயற்பட்டு முன்னேற்றமடையலாம்?

ஒருங்கிணைவு என்பது ஒரு வேலையில் சேர்வது மட்டுமல்ல — அது ஒரு கலாச்சாரத்தில் இணைவதையும் அர்த்தப்படுத்துகிறது

இந்நாட்டிற்கு வந்துள்ள குடியேற்றவாசியாக, தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில், ஆஸ்திரேலியாவில் ICT இல் ஒரு தொழிலை உருவாக்க விரும்புபவர்களுக்கு, Ayesha Umar மூன்று பரிந்துரைகளை முன் வைக்கிறார்.
  • உள்ளூராட்சி சபை (council)க்குச் சென்று பேசுங்கள்; அங்கே விசாரியுங்கள். 
  • தொழில்முறை சங்கங்களில் சேருங்கள். 
  • பணியிட எதிர்பார்ப்புகள் மற்றும் சமூக நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.
Betsy Gregg-உம் இதையே வலியுறுத்துகிறார் — குறிப்பாக பிராந்திய (regional) பகுதிகளுக்குச் செல்லும் முன், அப்பகுதி வேலை வாய்ப்பு நிலை, நெட்வொர்க்கிங் சூழல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும்.

விசா வாய்ப்புகள் அங்கு சிறந்ததாக இருந்தாலும், வேலை வாய்ப்புகள் குறைவாகவும், முன்னேற்றத்தின் வேகம் மெதுவாகவும் இருக்கலாம்.

இத்தனை சவால்களையும் மீறி, விஷால் மிட்டால் தற்போது கன்பராவில் ஒரு data analyst-ஆக பணியாற்றுகிறார்.

அவருக்கு அது கிடைக்க ஆறு மாத காலமும், 80 வேலை விண்ணப்பங்களும் தேவைப்பட்டது — ஆனால் தயாரிப்பு, நிலைத்த நம்பிக்கை, மற்றும் வளர்ச்சி மனப்பாங்கு அவரை வெற்றிக்கு கொண்டு சென்றது.
எந்த வேலையையும் சிறியதாக நினைக்காதீர்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள், உதவி கேளுங்கள், தொடர்ந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களால் முடியும்.
Vishal
பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான உதாரணமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் வெளியிடும் நேரத்தில் அவை துல்லியமானவை. மிகவும் புதுப்பித்த மற்றும் விரிவான தகவலுக்கு, தயவுசெய்து Australian Computer Society மற்றும் Department of Home Affairs ஐ நேரடியாக அணுகவும். தனிநபர்கள் தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆலோசனை பெற ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

SBS தமிழின் ஏனைய நிகழ்ச்சிகளைக் கேட்க எமது podcast பக்கத்திற்குச் செல்லுங்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
To hear more podcasts from SBS Tamil, subscribe to our podcast collection. Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand