மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்யும்போது என்னென்ன பொருட்களை எடுத்துச் செல்ல முடியாது?

Young Asian traveller man enjoying selling fruites at traditional street market, Khonkaen city, Thailand

Fresh fruit and vegetables are often prohibited from being taken over state borders. Credit: Six_Characters/Getty Images

நீங்கள் சாலைவழியாக அல்லது ரயிலில் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய திட்டமிட்டால், சில பழங்கள், காய்கறிகள், தாவரங்கள் மற்றும் பிற பொருட்களை சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு எடுத்துச்செல்ல முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எல்லைகளைத் தாண்டி அவற்றைக் கொண்டு வந்ததற்காக உங்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படலாம்.


வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு வரும்போது உங்களுடன் என்னென்ன பொருட்களைக் கொண்டு வரலாம் மற்றும் கொண்டு வரக்கூடாது என்பதற்கான விதிகள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆனால் ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையே பொருட்களை கொண்டுசெல்வதில் கடுமையான விதிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?

இந்தக் கட்டுரை ஆஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு இடையேயான quarantine மற்றும் உயிரியல் பாதுகாப்பு விதிகள்(biosecurity rules) மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளை கடக்கும் முன் மனதில் கொள்ள வேண்டியவை பற்றிய தகவல்களை வழங்குகிறது.

வெளிநாடுகளில் இருந்து வரும் பூச்சிகள் மற்றும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கவென ஆஸ்திரேலியா கடுமையான உயிரியல் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதேபோன்று சில மாநிலங்களும் தங்கள் அதிகார வரம்புகளுக்குள் என்ன உணவு, காய்கறிகள், பழங்கள் மற்றும் தாவரங்களை கொண்டு வரலாம் என்பதில் சில கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளன.
AAP
Australian states and territories have strict rules about the movement of goods between states or within states. Source: AAP
ஆஸ்திரேலிய விவசாய சந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை
Australian Interstate Quarantine வழிகாட்டுதல்களின்படி, பூச்சிகள், நோய்கள் மற்றும் களைகள் ஆஸ்திரேலியாவின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பொருட்களை கொண்டுசெல்வதன் மூலம் பரவுகிறது, அவற்றுள் பின்வருவன அடங்குகின்றன:
  • தாவரங்கள் அல்லது தாவர பொருட்கள்
  • பழங்கள் மற்றும் காய்கறிகள்
  • விலங்குகள் அல்லது விலங்கு பொருட்கள்
  • மண்
  • விவசாய இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்கள்
இந்நிலையில் உயிரியல் பாதுகாப்பு அபாயங்களைத் தடுப்பதும், நிர்வகிப்பதும் அனைவரின் கடமை எனவும், அதனால் தான் விக்டோரியாவிற்கு வரும் பயணிகள் அம்மாநிலத்தின் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை அறிந்து கொண்டு தங்கள் பங்கைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் Biosecurity Victoria நிர்வாக இயக்குனர் Katherine Clift, SBS குஜராத்தியிடம் தெரிவித்தார்.

விக்டோரியாவில், 20.2 பில்லியன் டாலர் மதிப்புள்ள விவசாயத் தொழில் உள்ளதால், மாநிலங்களுக்கு இடையே பயணிப்பவர்கள் தாவரங்கள், தாவரப் பொருட்கள், பயன்படுத்தப்பட்ட packaging, விவசாய உபகரணங்கள் மற்றும் மண் தொடர்பிலான கட்டுப்பாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் தெரிவித்தார்.

விக்டோரியாவிற்குள் சில தாவரங்கள், தாவர பொருட்கள் மற்றும் விவசாய இயந்திரங்களைக் கொண்டுவருவதற்கும் கட்டுப்பாடுகள் உள்ளன.

ஆஸ்திரேலியாவின் மற்றொரு பகுதியிலிருந்து விக்டோரிய மாநிலத்திற்குள் நுழையும் பயணிகளுக்கென விக்டோரியாவில் சோதனைச் சாவடி இல்லை. என்றபோதிலும் தாவரங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டுவரும்போது விக்டோரியாவின் எல்லை நுழைவு நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறோம் என Katherine Clift கூறினார்.
Australian fruit fly quarantine area warning road sign
An Australian fruit fly quarantine area warning road sign. Source: iStockphoto / mastersky/Getty Images/iStockphoto
ஆஸ்திரேலியாவில் உள்ள சில மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் தங்கள் விவசாயத் தொழில்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய தடைசெய்யப்பட்ட பொருட்கள் தமது அதிகார வரம்புகளுக்குள் கொண்டு செல்லப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த சோதனைச் சாவடிகளைக் கொண்டுள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Eucla மற்றும் Kununurra ஆகிய இரண்டு சாலை சோதனைச் சாவடிகளும் 24 மணிநேரமும், வருடத்தின் 365 நாட்களும் இயங்குவதாகவும், மாநிலத்திற்குள் நுழையும் கார்கள், caravans மற்றும் trailers உட்பட அனைத்து வாகனங்களும் பரிசோதிக்கப்படுகின்றன எனவும், மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் பொருட்கள் அனுமதிக்கப்படுவதில்லை எனவும் அம்மாநில Department of Primary Industries and Regional Development-இன் Quarantine Manager Louise Smith தெரிவித்தார்.

பயணிகள் தங்களிடம் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்தால், முழுமையான ஆய்வுக்கு முன் அதனை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதேநேரம் பெர்த்தின் உள்நாட்டு மற்றும் பிராந்திய விமான நிலையங்களில் Department of Primary Industries and Regional Development சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளது.
A Fruit Fly exclusion zone sign near Yarrawonga in Australia.
A fruit fly exclusion zone sign near Yarrawonga in Australia. Credit: Ashley Cooper/Getty Images
2022/23 ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்த கிட்டத்தட்ட 650,000 விமானப் பயணிகள் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா- Northern Territory மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா-தெற்கு ஆஸ்திரேலியா சாலையில் பயணம்செய்த 160,000 வாகனங்கள் உட்பட விமானம், சாலை, ரயில், அஞ்சல் மற்றும் கடல் மார்க்கமான நுழைவுப் புள்ளிகளில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மறுபுறம், தெற்கு ஆஸ்திரேலியாவின் Department of Primary Industries and Regions பழங்களை அகற்றும் தொட்டிகள் மற்றும் mobile quarantine நிலையங்களை நிறுவியுள்ளது, அவை மாநிலத்திற்குள் எங்கும் எந்த நேரத்திலும் இயக்கப்படலாம்.

அனைத்து விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பழங்களை அப்புறப்படுத்தவென தனிமைப்படுத்தப்பட்ட தொட்டிகள் இருந்தாலும், Northern Territory எல்லைகளில் தனியான சோதனை நடைமுறைகள் இல்லை.

எறும்புகள், பழ ஈக்கள், scale insects மற்றும் thrips போன்ற பூச்சிகள் பரவுவதைத் தடுக்கவென Plant Health Act 2008 Northern Territoryஇல் நடைமுறையில் உள்ளது.

இதுஇவ்வாறிருக்க ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்கள் சில பூச்சிகள் மற்றும் நோய்களின் பரவல் தொடர்பாக உயிரியல் பாதுகாப்பு அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களை நிறுவியுள்ளன, மேலும் இந்த மண்டலங்களுக்குள்ளும் மற்றும் வெளியேயும் சில பொருட்களுக்கான தடை நடைமுறைப்படுத்தப்படலாம்.

தேனீக்கள், தேன் மற்றும் மகரந்தம் உள்ளிட்ட தேனீ சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் பயன்படுத்திய தேனீ வளர்ப்பு உபகரணங்களை உரிய அனுமதி பெறாமல் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு வருவது சட்டவிரோதமானது.

அதேநேரம் குயின்ஸ்லாந்திற்குள்ளும் சில தாவரங்கள், பழங்கள் மற்றும் தாவரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாக வாழை, திராட்சை செடிகள், மாம்பழங்கள் மற்றும் கரும்பு போன்றவற்றை எடுத்துச்செல்வதற்கு கட்டுப்பாடு உள்ளது.
Bananas-mangos-and-sugar-cane-sign.jpg
Queensland has a biosecurity zone for bananas, grape plants, mangoes, and sugarcane. Credit: Australia Interstate Quarantine
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய தலைநகர் பிராந்தியமும் citrus red mite biosecurity zones மற்றும் potato and rice biosecurity zones போன்ற உயிரியல் பாதுகாப்பு மண்டலங்களை செயல்படுத்தியுள்ளன.

நீங்கள் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய திட்டமிட்டால், ஒவ்வொரு மாநிலம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள biosecurity zones பற்றிய தகவலை இங்கே பார்க்கலாம்.

1800 084 881 என்ற எண்ணில் ஆஸ்திரேலிய இன்டர்ஸ்டேட் தனிமைப்படுத்தல் ஹாட்லைனைத் தொடர்புகொள்வதன் மூலமும் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச்செல்ல முடியாத பொருட்களின் பட்டியலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

அத்துடன் உங்களது பயணத்திற்குப் பொருந்தக்கூடிய ஏதேனும் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளைச் சரிபார்ப்பது சிறந்ததாகும்.

இவற்றைச் சரிபார்ப்பது, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை அப்புறப்படுத்த வேண்டிய அபாயத்தைக் குறைக்கும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Share
Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand