SKIP TO MAIN CONTENT

ANZAC - நினைவுக் கவிதை

SBS Web Banner The Ode (LTR).jpg
An Australian Light Horseman collecting poppies in Palestine during the First World War. Credit: Australian War Memorial P0361.046

ஆஸ்திரேலிய நியூசீலாந்து இராணுவ வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும், எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாளான , அன்சாக் தினத்தன்று Ode of Remembrance என்ற நினைவுக்கவிதை வாசிக்கப்படுவது வழக்கம். Ode of Remembrance-ஐ Australian War Memorialஉடன் இணைந்து, 45 மொழிகளில் SBS வழங்குகிறது.

Published

Updated

Source: SBS

Skip to podcast episode content

ஆஸ்திரேலிய நியூசீலாந்து இராணுவ வீரர்களை வாழ்த்தி வணங்கிக் கொண்டாடும், அவர்கள் வாழ்க்கையை நினைவு கூரும், அவர்கள் வீரச் செயல்களையும், எதிர்கொண்ட சவால்களையும் சந்தித்த தோல்விகளையும் பகிரும் நாளான , அன்சாக் தினத்தன்று Ode of Remembrance என்ற நினைவுக்கவிதை வாசிக்கப்படுவது வழக்கம். Ode of Remembrance-ஐ Australian War Memorialஉடன் இணைந்து, 45 மொழிகளில் SBS வழங்குகிறது.

ஆஸ்திரேலிய தினத்தைப் போன்றே ஆஸ்திரேலியர்களுக்கு முக்கியமான மற்றொரு தினம் ANZAC தினம். முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், வியட்நாம் போர்களில் பங்கேற்ற மற்றும் உயிர்நீத்தப் படைவீரர்களின் நினைவாக, போர்வீரர் நினைவுதினத்தை விடவும் மேலான உணர்வுப் பெருக்குடனும் தேசிய ஒருமைப்பாட்டுடனும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

அன்சாக் தினத்தன்று வாசிக்கப்படும் Ode of Remembrance என்ற நினைவுக்கவிதை இது.

மீதமுள்ள எம்மைப் போல் அவர்கள் முதுமையடைய மாட்டார்கள்;

வயது அவர்களை சோர்வடையச் செய்யாது, காலம் கடந்தாலும் அவர்கள் நினைவுகள் அழியாது.

அந்தி வேளையிலும் அதி காலையிலும்

நாம் அவர்களை நினைவில் கொள்வோம்.

Roll of Honour Australian War Memorial
Roll of Honour Australian War Memorial Credit: Fiona Silsby for AWM 2016.8.157.4

ஆஸ்திரேலியாவின் அன்சாக் தின மரபுகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு  Australian War Memorial ஐப் பார்வையிடவும்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் 

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.

Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now