எச்சரிக்கை: மன உளைச்சலை ஏற்படுத்தும் உள்ளடக்கம்
Concetta Caristo ஒரு பெருமைமிக்க wog.
ஆனால் அவருடைய தந்தையைப் பொறுத்தவரை, அந்த வார்த்தை அவர் மீது கசப்பான முறையில் பேசப்பட்டது.
Concetta Perna தேசிய இத்தாலிய ஆஸ்திரேலிய பெண்கள் சங்கத்தின் தலைவராகவும், புலம்பெயர்ந்த பெண்கள் குறித்து ஆய்வு செய்யும் கல்வியாளராகவும் உள்ளார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு தனித்துவமான கலாச்சார அடையாளம் இருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால் ஆஸ்திரேலியாவிற்கு முதலில் புலம்பெயர்ந்து வந்தவர்களின் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர் என்று தான் நம்புவதாக கூறுகிறார்.
நகைச்சுவை நடிகர் Anthony Locascioவின் தாய் கிரேக்கர், தந்தை இத்தாலியர். பாகுபாட்டின் அனுபவங்களில் தலைமுறை வேறுபாடுகள் இருப்பதாக அவர் கூறுகிறார்.
தனது தாத்தா கால்பந்து விளையாடும்போது bullying கொடுமைபடுத்தலை அனுபவித்ததாகவும் அதேபோல் தனது பெற்றோரும் அனுபவித்ததாகவும் தானும் வேறு வகையில் bullying கொடுமைபடுத்தலை அனுபவித்ததாகவும் கூறுகிறார் நகைச்சுவை நடிகர் Anthony Locascio.
'Wog' என்று அழைக்கப்படுவது அவதூறாகக் கருதப்பட்டாலும், பலர் அந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டு, பெருமையுடன் தன்னை wog என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்று மெல்பன் பல்கலைக்கழகத்தில் உலகளாவிய புலம்பெயர்ந்தோர் பற்றிய ஹெலனிக் மூத்த விரிவுரையாளர் Andonis Piperoglou கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவை தேசிய அளவில் கால்பந்து Socceroo அணியில் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் கிரேக்க வம்சாவளியைச் சேர்ந்த நபர் Peter Katholos. அவரது குடும்பத்தினர் 1970 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் பயணம் செய்து வந்தனர்.
ஒரு குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையினரையும் அவமானம் எவ்வாறு பாதிக்கும் என்பதை தான் அனுபவித்ததாக கூறும் நகைச்சுவை நடிகர் Anthony Locascio தனக்கு தன் தாத்தா ஒரு முன்மாதிரியாக இருந்தார் என்றும் ஆனால் நகைச்சுவை நடிகராக தொடர வேண்டும் என்ற தனது கனவைப் பகிர்ந்து கொண்டபோது, அவர் அதை ஊக்கப்படுத்தவில்லை என்கிறார்.
SBS Examines-இற்காக ஆங்கிலத்தில் Fernando Vives மற்றும் Rachael Knowles இணைந்து எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tunein பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலி யில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.