SKIP TO MAIN CONTENT

iPhone 15: தெரிந்ததும், தெரியாததும்

கடந்த புதன்கிழமை கலிபோர்னியாவில் நிகழ்ந்த இவ்வருட Apple விழாவில் பலரும் எதிர்பார்த்த iPhone 15 வரிசையில் நான்கு புதிய mobile phone களை Apple அறிமுகம் செய்தது.

Apple Unveils iPhone 15 And Other New Products
CUPERTINO, CALIFORNIA - SEPTEMBER 12: Attendees look at the new iPhone 15 during an Apple event at the Steve Jobs Theater at Apple Park on September 12, 2023 in Cupertino, California. Apple revealed its lineup of the latest iPhone 15 versions as well as other product upgrades during the event. (Photo by Justin Sullivan/Getty Images) Source: Getty / Justin Sullivan

5 min read

Published

Updated

By R.Sathiyanathan

Source: SBS


Skip to article content

Tech உலகில் வருடாந்த திருவிழா என்று வர்ணிக்கப்படும் Apple விழாவில் Basic model இல் 6.1 அங்குலத்திரையைக்கொண்ட iPhone 15 ஐயும் 6.7 அங்குலத்திரையைக் கொண்ட 15 plus ஐயும் அறிமுகம் செய்துள்ளது Apple. ஆனால் முதல்முறையாக, titanium case ஐக்கொண்ட iPhone 15 pro மற்றும் pro max ஆகிய இரண்டு மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது என்பதுதான் இதன் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. அத்தோடு Apple Watch வரிசையில் series 9 ஐயும் Apple அறிமுகம்செய்துள்ளது.

இதுவரை Apple சாதனங்களை charge செய்யப் பயன்படுத்தப்பட்ட lightening charger connector என்ற charging cable பொருத்தப்படும் இடத்தில் , இப்போது USB C port இடம் பெற்றிருப்பதை iPhone 15இல் இடம்பெற்றுள்ள பிரதான அம்சமாகக் குறிப்பிடலாம்.

உலகில் மற்ற எல்லா வகைப் போன்களுக்கும் பொருத்தப்பட்டுள்ள USB port, universally accepted standard என்ற வகையில் எல்லா மொபைல் போன்களிலும் பொருத்தப்படவேண்டும் என்பது EU- ஐரோப்பிய யூனியனின் நிபந்தனையாக இருப்பதால் Apple இந்த மாற்றத்தைச் செய்யவேண்டியது கட்டாயமாகிறது. இதை Apple செய்யாவிட்டால் EU நாடுகளில் iPhone ஐ விற்பனை செய்யமுடியாது. iPhone 15 உடன் பொருத்தக்கூடிய headphones, Bluetooth speaker என்பனவும் USB C cable மூலமாகவே charge செய்யவேண்டும். வேறு வகையில் சொல்வதென்றால் Samsung போனையும் iPhone ஐயும் ஒரே cable மூலமாக இப்போது charge செய்யமுடியும்.

Apple iPhone laying face down in a case featuring the flag or Europe with USB-C and lightning charger on top of it
Apple will have to change its products' charging ports to be USB-C compatible due to legal reforms passed by the European Union. Source: Getty / Jakub Porzycki/NurPhoto

புதிய iPhone 15 களில் இடம்பெற்றுள்ள வேறு பல முக்கிய அம்சங்களும் உள்ளன. Standard மாடல்களான iPhone 15 மற்றும் iPhone 15 plus இரண்டும் pastel colours என்ற pink, yellow, green, blue மற்றும் black ஆகிய வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. சென்றவருடம் வந்த iPhone pro வில் இடம்பெற்ற matte glass finish, thinner screen bezels, dynamic island என்பன இவ்வருட basic மாடலான iPhone 15, 15 plus என்பவற்றில் இடம்பெற்றிருக்கின்றன.

பிரதான camera வில் உள்ள இரண்டு lens களுக்கு மேலதிகமாக, 48 mp wide lens இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக high quality 2x zoom செளகர்யம் கிடைக்கிறது. More detail capture என்ற படத்துல்லியமும் இதன் மூலமாக க் கிடைக்கிறது. Pixels கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளதால் light capture விரிவடைவதால், image quality- படத்தின் தரம் அதிகரிக்கிறது. மற்றும் computational photography காரணமாக நேர்த்தியான image கிடைக்கிறது.

இந்த இரண்டு மாடல்களிலும் iPhone 14 pro, pro max இலிருந்த A16 bionic chips பொருத்தப்பட்டுள்ளது. இது a15 bionic chip ஐவிட ஆற்றல் மிக்கது. இது 4 core GPU, six core CPU ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Fastest chips என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. Powerful graphics processor இதனுள் இருக்கிறது. மற்ற brand phone களிலுள்ள snapdragon ஐவிட 40 சதவீதம் அதிக ஆற்றலைக்கொண்டது மட்டுமல்ல 20 சதவீதத்திற்கு குறைவான power- சக்தியைப் பயன்படுத்துகிறது.

USA CALIFORNIA APPLE PRODUCT LAUNCH
epa10856871 Apple CEO Tim Cook (C) holds up the company’s new Apple iPhone 15 at an Apple product launch event on the campus of Apple Park in Cupertino, California, USA, 12 September 2023. EPA/JOHN G. MABANGLO Source: EPA / JOHN G. MABANGLO/EPA

Pro மற்றும் pro max மாடல்களிலும் சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக, Bionic chips ஐப் பொறுத்த அளவில் அதி நவீன மற்றும் ஆற்றலில் ஒப்பற்ற a17 bionic chip, pro மற்றும் pro max மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளன. A17 bionic chip apple நிறுவனத்தால் தனது உள்ளக ஆய்வகத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். இதற்கு ஒப்பான ஆற்றல்மிகு chip இதுவரை போன்களில் வந்ததில்லை. Six core central processing unit ஐயும் six core graphics processing unit ஐயும் இது தன்னகத்தே கொண்டது. இது உலகில் முதலாவது 3 nm chip set ஆகும். 35 trillion operations per second என்ற அதிவேக ஆற்றல் கொண்டது.

Pro 48 megapixel sensor new preset focal length என்ற தொழில்நுட்பம் மூலமாக மேலும் ஆற்றல் பெறுகிறது. Pro max இல் 5 times zoom மற்றும் 120 mm focal length, f2.8 aperture என்பன இணைக்கப்பட்டிருக்கின்றன. Lens மீது படும் ஒளி 4 மடங்கு அதிகரிப்பதால் zoom காட்சிகள் துல்லியமாவதுடன் improved image stabilisation கிடைக்கிறது. Spacial video என்ற 3D video format இல் இது செயல்படவல்லது.

Pro 14 இலிருந்த பல வசதிகள் pro 15 இலும் இருக்கின்றன. அதற்கு மேலதிகமாக, always on display என்ற எப்போது பார்த்தாலும் screen active ஆக இருக்கக்கூடிய அம்சமும் fast refresh rate என்ற அம்சமும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. முதல் முறையாக titaniumத்தாலான case ஐக் கொண்டு pro model கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனால் அதன் எடை வெகுவாகக் குறைகிறது.

Pro pro max என்பன, black titanium, white titanium, blue titanium, natural titanium ஆகிய நான்கு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் மாதம் 15 முதல் online முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்மாதம் 22 ஆம் தேதி இவை வாடிக்கையாளர்களின் கைகளுக்கு வந்து சேரும். Apple stores களிலும் இம்மாதம் 22 ஆம் தேதி முதல் கிடைக்கும்.

20230913001840819999-minihighres.jpg
A display of the new Apple iPhone 15 at an Apple product launch event on the campus of Apple Park in Cupertino, California, USA, 12 September 2023. Credit: EPA/JOHN G. MABANGLO

ஆஸ்திரேலியாவில் என்ன விலை என்று பார்ப்போம். சென்ற வருடம் வந்த iPhone 14 களின் விலைகளுக்கும் புதிய iPhone 15 இற்குமிடையே பெரிய வித்தியாசம் அமெரிக்காவில் இல்லை. ஆனல் ஆஸ்திரேலிய டாலரின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற் பட்டுள்ளதால் இங்கு விலை அதிகமாகவே இருக்கிறது.

128 GB storage கொண்ட iPhone 15 இன் விலை 1499 A$/ iPhone plus 1649A$.

128GB storage கொண்ட iPhone pro 1849A$, pro max 256gb 2199A$. 1 TB வரை storage உள்ள pro மற்றும் pro max உள்ளன. இவற்றின் உச்ச பட்ச விலை 2899 A$.

Apple தனது அதி நவீன iPhone 15 ஐ அறிமுகம் செய்யும் இவ்வேளையில் இதற்கு முன் வந்த iPhone 12 இன் electro magnetic radiation மின்காந்த அலை வீச்சு அல்லது கதிர்வீச்சு தொடர்பாக France இல் iPhone 12 ஐச் சந்தையிலிருந்து அகற்றுமாறு கேட்கப்பட்டுள்ளது.

FRANCE IPHONE 12 SALES
epa10860281 A customer shows her Iphone 12 in front of the Apple Store on the Champs Elysees Avenue in Paris, France, 14 September 2023. Sales of the iPhone 12 phone model have been halted in France until American technology giant Apple brings an update to the iPhone 12 model following measurements exceeding the authorized emission power threshold. EPA/CHRISTOPHE PETIT TESSON Source: EPA / CHRISTOPHE PETIT TESSON/EPA

France இலுள்ள National Frequency Agency, மொபைல் போன்கள் வெளியிடும் கதிர் வீச்சு பாவனையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஆய்வுகளை மேற்கொண்டதில், iPhone 12 அளவுக்கு அதிகமான கதிரலைகளை வெளியேற்றுவதாகத் தெரிவித்திருக்கிறது. EU வின் பாதுகாப்பான அங்கீகரிக்கப்பட்ட அளவு 4 watts per kilo gram ஆகும் . ஆனால் iPhone 12, 5.74 watts per kg கதிர்வீச்சை வெளியிடுவதாக 141 வித்தியாசமான brand போன்களைப் பரிசீலனை செய்ததில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக agency கூறுகிறது. Apple இதை மறுத்துள்ளது. அதேவேளையில் WHO, இதற்கு முன்னர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மொபைல் போன்கள் வெளியேற்றும் மிகச் சொற்பமான கதிரலைகள், மனிதர்க்கு தீங்கு விளைவிக்காது என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் பிரான்ஸ் நாட்டின் தடை Apple க்கு பலத்த எதிர்மறை விழாமபரத்தை தேடித் தந்துள்ளது என்பது உண்மை.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now