SKIP TO MAIN CONTENT

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

மன்னரின் பிறந்தநாள் விடுமுறைக் காலத்தையொட்டி ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.

Double demerits
Source: Getty / Getty Images

1 min read

Published

By Renuka

Source: SBS


Skip to article content

ஜூன் 12 ஆம் தேதி மன்னரின் பிறந்தநாள் பொது விடுமுறையையொட்டிய நீண்ட வார இறுதியில், ACT மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோர் double-demerit points தண்டனை பெறுவர்.

இன்று 9ம் திகதி இரவு 12.01 முதல் 12ம் திகதி இரவு 11.59 வரை இந்த double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதிவேகமாக செல்லுதல், Seatbelt-ஆசனப்பட்டி அணியாமை, கைபேசி பாவனை, ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த தண்டனை விதிக்கப்படுகின்றது.

சாலைவிதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் double-demerit points-உடன் சேர்த்து பெருந்தொகை பணத்தினையும் அபராதமாக செலுத்த நேரிடும்.

உதாரணமாக நியூ சவுத் வேல்ஸ் மற்றும் ACT-இல் வாகனம் ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துபவர்களுக்கு $352 அபராதமும் 10 demerit புள்ளிகளும் தண்டனையாக விதிக்கப்படும்.

இதேவேளை குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நீண்ட வார இறுதி விடுமுறைக்கென்று சிறப்பாக double-demerit points தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, டஸ்மேனியா மற்றும் Northern Territory-இல் double-demerit points தண்டனை நடைமுறையில் இல்லை.

இருப்பினும் சாலை விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கவென, விடுமுறைக் காலத்தில் அதிகளவான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now