SKIP TO MAIN CONTENT

குயின்ஸ்லாந்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாகனம் ஓட்டிய இருவருக்கு $15,500 அபராதம்!

தடையைமீறி பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாகனம் ஓட்டிய இருவருக்கு பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது

2023-06-08_20-30-23.jpg
Two fined $15,500 after driving in protected areas Credit: Queensland DES

1 min read

Published

Updated

By Renuka

Source: SBS


Skip to article content

Gold Coast-இன் வடமேற்கே இரண்டு பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள் வழியாக சட்டவிரோதமாக வாகனம் ஓட்டும் காணொளியை வெளியிட்ட இருவருக்கு மொத்தம் $15,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 27, 2021 அன்று, இரு ஆண்கள் Plunkett Conservation Park மற்றும் Wickham Timer Reserve வழியாக பச்சை நிற நான்கு சக்கர வாகனம் மற்றும் dune buggyஇல் சென்று அதை காணொளியாக பதிவுசெய்திருந்தனர்.

அந்த பகுதியில் வாகனங்கள் ஓட்டக்கூடாது என எச்சரிக்கும் பல அடையாளங்களை இவ்விரு ஆண்களும் கடந்து சென்றிருப்பார்கள் என குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் துறை (DES) கூறியுள்ளது.

குறித்த இருவரும் தமது வாகனங்களால் சிறிய மரங்களை நசுக்கியதாகவும், பாறைகளை தூக்கி எறிந்ததாகவும் அதுமட்டுமல்லாமல், கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தை சீர்குலைத்ததாகவும் DES குறிப்பிட்டுள்ளது.

டிசம்பர் 2021 இல் "4x4 session goes bad" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இக்காணொளி பற்றி குயின்ஸ்லாந்து Parks and Wildife Serviceஇடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து குறித்த ஆண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செப்டம்பர் 2022 இல் இருவர் மீதும் பாதுகாக்கப்பட்ட பகுதியின் இயற்கை அல்லது கலாச்சார வளத்தில் குறுக்கீடு செய்தமை, timber reserveஇல் உள்ள வனப் பொருட்களில் தலையிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

தம்மீதான குற்றச்சாட்டுகளை இருவரும் ஒப்புக்கொண்டதையடுத்து, இருவருக்கும் தலா $7000 அபராதம் விதிக்கப்பட்டதுடன் $1500 செலவுத்தொகையாக செலுத்துமாறு Beenleigh Magistrates நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.

உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in 

பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்

செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now