இணைய வழியாக மோசடிகளைச் செய்பவர்கள், மொபைல் தொலைபேசி மற்றும் messaging, WhatsApp போன்ற அம்சங்களைப் பயன்படுத்தியும் மற்றும் email என்ற மின்னஞ்சல் போன்றவற்றைப் பயன்படுத்தியும் முன்னர் பரவலாக பலருக்கும் தெரியாமலிருந்த புதுப் புது வழிகளைப் பயன்படுத்தி, பிரதானமாக நிதி மோசடிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
தனது மொபைல் தொலைபேசி தொலைந்துவிட்டது அல்லது பழுதாகிவிட்டது, ஆகவே நண்பர் ஒருவரது தொலைபேசியிலிருந்து பேசுவதாக வெளிநாட்டிலுள்ள மகனோ அல்லது மகளோ அல்லது மிக நெருக்கமான ஒருவரோ, தாயாருக்கு அல்லது தந்தைக்கு, நெருங்கிய உறவினருக்கு message செய்வது இப்போது ஒரு புதிய உத்தியாகக் கையாளப்படுகிறது. இதை நம்பிய NSW/Victoria எல்லையில் வசிக்கும் ஒரு தாய் வெளிநாட்டில் வாழும் மகளுக்கு மூன்று தடவைகள் மொத்தம் 11600 டாலர்களை அனுப்பியிருக்கிறார். உண்மையில் இந்த தொகை மோசடிகாரர்களுக்கே போய்ச்சேர்ந்திருக்கிறது. இதைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது credit card தொலைந்துவிட்டது என்று பெற்றோருக்கு message -தகவல் அனுப்பி, தான் Woolworths அல்லது Coles இல் இருப்பதாகவும் வாங்கிய பொருளுக்கு பணம்செலுத்தமுடியவில்லை என்றும் குறிப்பிட்ட கணக்கிற்கு 100/150 டாலர்களை transfer செய்யும்படி கேட்பதும் மற்றொரு புது மோசடியாகும்.
Road toll நிறுவனங்கள் அனுப்புவதுபோல அபராத தொகையை வசூலிக்க தகவல் அனுப்புவது. 10000 பேருக்கு இந்த message ஐ அனுப்பினால் சுமார் 10 சதவீதமானவர்கள் பதட்டமடைந்து பணம் செலுத்துவதாக விக்டோரிய பல்கலைக்கழகத்தில் IT விரிவுரையாளர் டாக்டர் Khandakar Ahmed கூறுகிறார்.
Artificial Intelligence என்ற செயற்கை நுண்ணறிவைப் பயன் படுத்தி பலரது குரல்கள் பதிவுசெய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட நபரைப்போலப் பேசி மோசடி செய்வது புதிய டிரென்ட். குடும்ப உறுப்பினர்களின் குரலைப்பிரதிப்பலிக்கக் கூடியவிதமாக artificial intelligence ஐப் பயன்படுத்தி மோசடி செய்வதும் பெருகிவருகிறது. குடும்ப உறுப்பினர் ஒருவர் பெரிய இக்கட்டில் சிக்கிக் கொண்டது போல பாவனை செய்து பெருந்தொகைப் பணம் மோசடி செய்யப்பட்டுவருகிறது. ஒருவர் பேசக்கூடிய ஓரிரு வசனங்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர் பேசுவதைப்போலவே நீண்ட உரையாடலை நிகழ்த்த artificial intelligence பயன்படுத்தப்படுகிறது. Consumer Action Law Centre இன் தலைமை நிர்வாகி Stephanie Tonkin கருத்து தெரிவிக்கும் போது, artificial intelligence ஐப் பயன்படுத்தி ஒருவரது குரலை மிமிக்ரி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள சராசரி மனிதர்களின் நிதி சூறையாடப்படுவதாகத் தெரிவித்திருக்கிறார்.

புதிது புதிதான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி scammers என்ற மோசடிக்கார்ர்கள் புதிய புதிய வழிகளில் நிதி மோசடி செய்து வருவதாக இவர் கூறுகிறார். நிதி நிர்வாகம் நிதி முகாமைத்துவம், மற்றும் வங்கிகள் போன்ற நிதி நிறுவன நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளர்களின் நிதியைப் பாதுகாப்பதற்கு மேலும் பல காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
கனடாவில் வசிக்கும் ஒரு பெண்மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவரது பேரன் தான் ஜெயிலில் இருப்பதாகவும் வெளியேவர பிணைத்தொகை கட்டவேண்டும் என்றும் கூறியதன் பேரில் அவர் 3300 கனேடிய டாலர்களை அனுப்பிவைத்தார். இறுதியில் தொடர்புகொண்டவர் அவரது பேரனே அல்ல என்பது தெரியவந்தது. பெண்மணி பணத்தை scammers இடம் மோசடிக்கார்ர்களிடம் இழந்தார். Washington Post பத்திரிகையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் இந்த scams என்ற மோசடிகள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன. கடந்த வருடம் மட்டும் ஆஸ்திரேலியர்கள் 4 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களை scams என்ற மோசடிகளில் இழந்துள்ளதாக ACCC Australian Competition and Consumer Council தெரிவித்திருக்கிறது. தினமும் சராசரி 745 பேர் ஆஸ்திரேலியாவில் scam என்ற மோசடிகளால் ஏமாறுவதாக ScamWatch என்ற அமைப்பு தெரிவித்திருக்கிறது

இங்கு ஆஸ்திரேலியாவிலும் இந்த scams என்ற மோசடிகள் அதிகரிப்பதால் இது தொடர்பாக அரசு ஆராய்ந்து வருகிறது. லேபர் அரசு இந்த scams என்ற மோசடிகளைக் களைய நடவடிக்கை எடுக்கப்போவதாக சென்றவருடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது. Tougher industry codes என்ற நிதி நிறுவன நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில் கடுமையான வரையறைகளை விதிக்கப்போவதாக அரசு கூறியுள்ளது. அத்தோடு National Anti Scam Centre என்ற ஒரு அமைப்பை நிறுவ இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
அதேநேரத்தில் scammers என்ற மோசடிகார்ர்களின் மோசடிகள் காரணமாக வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால், வங்கிகள், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு அப்பணத்தை மீள அளிக்கவேண்டும் என்று Consumer Action Law Centre அமைப்பு சிபாரிசு செய்திருக்கிறது. இப்படிச்செய்வதால் scammers களின் மோசடிகளைத் தவிர்க்க செய்யவேண்டிய நடவடிக்கைகளை வங்கிகள் தீவிரமாக ஆராயும் என்றும் சொல்லப்படுகிறது. மோசடிகளைத் தவிர் க்கும் செயல்பாடுகளை ஆராயக்கூடிய புதியதொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தும் வளமும் வசதியும் வங்கிகளுக்கு உண்டு என்று Tonkin கருதுகிறார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நிதிச் சேவைகள் தொடர்பான அமைச்சர் Stephen Jones, வங்கிகள் பாதிக்கப்பட்டவருக்கு நிதியை மீள அளிக்கவேண்டும் என்ற கருத்தை தான் ஆதரிக்கவில்லையென்றும் இதன் காரணமாக மோசடிகாரர்களின் நடவடிக்கைகள் இன்னும் அதிகரிக்கும் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

வாடிக்கையாளர்களை மோசடிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வங்கி போன்ற நிதி நிறுவனங்கள் மிக உச்ச பட்ச பாதுகாப்புகளை வழங்கவேண்டும் என்றும் இந்த உச்ச பட்ச பாதுகாப்பு வழங்காதபட்சத்தில் வாடிக்கையாளர்களின் இழப்புகளை வங்கிகள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Australian Banking Association ஐச்சேர்ந்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது, வாடிக்கையாளர்கள் எந்தளவு நிதியை எப்படியான மோசடிகளில் இழந்திருக்கிறார்கள் என்பதை அனைத்து நிதி நிறுவனங்களும் கூட்டாக இணைந்து கணித்து வருவதாகவும் impersonation என்ற ஆள்மாறாட்டம் மூலமாக செய்யப்படும் மோசடிகள், எவ்வளவு வித்தியாசமான வழிகள் புதிது புதிதாக கையாளப்படுகின்றன என்பதைக் காட்டுவதாகவும் கூறியிருக்கிறார்.
புதிய உத்திகளைப் பயன்படுத்தி மிக சிக்கலான வழிகளைப்பயன்படுத்தி தற்போது மோசடிகள் இடம்பெறுவதால் வங்கிகள், நிதிநிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், online shopping நிறுவனங்கள் search engines என்ற தேடல் யந்திர தளங்கள் எல்லோரும் இணைந்து இந்த மோசடிகளைக்களைவதற்கு முன்வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார் .
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
