இந்தத் தடையை நடைமுறைப்படுத்தினால் அதன் காரணமாக ரஷ்யா பொருளாதார ரீதியாக, குறிப்பாக வர்த்தக ரீதியாக பெரும் சிக்கலை எதிர்நோக்கவேண்டிய நிலைமை ஏற்படும். ஆகவே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்தி பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளைத் தீர்க்கும் முடிவுக்கு அது வரும் சாத்தியம் அதிகம்’ என்று பல மட்டங்களிலும் சொல்லப்படுகிறது.
ஆனால் ‘இதற்கெல்லாம் ரஷ்யா அசைந்து கொடுக்காது; அதுமட்டுமல்ல, இந்த SWIFT இணைப்பு முறையை துண்டிப்பதால் ரஷ்யா எந்த அளவுக்கு வர்த்தக ரீதியாகப் பாதிக்கப்படக்கூடுமோ அதே அளவுக்கு அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் பாதிக்கப்படும். ஆகவே இது சிறந்த தீர்வல்ல’ என்று சொல்கின்றவரும் உண்டு.

SWIFT என்றால் என்ன என்று பார்ப்போம்.
SWIFT என்பது மிகப் பாதுகாப்பானதும் துரிதமானதுமான சர்வதேச வரத்தக நிதிப்பரிவர்த்தனை முறையாகும். SWIFT என்பதன் விரிவாக்கம் Society for Worldwide Interbank Financial Telecommunications என்பதாகும். பெல்ஜியத்தைத் தலைமையகமாக க்கொண்ட இந்த அமைப்பில் 200 நாடுகளைச்சேர்ந்த 11000 இற்கும் மேற்பட்ட வங்கிகளும் financial institutions என்ற நிதி நிறுவனங்களும் இணைந்திருக்கின்றன. சர்வதேச ரீதியான எல்லா வர்த்தக வங்கி நடவடிக்கைகளையும் இணைக்கும் ஒரு அமைப்பாக இது இருக்கிறது.
உள்நாட்டில் நமது நாளாந்த கொடுக்கல் வாங்கல்கள் நமது உள்நாட்டு வங்கி ஊடாக நிகழ்வது போல, நாடுகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல்கள், இந்த SWIFT அமைப்பு மூலமாக வேகமாகவும் அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் நிகழ்கிறது. அப்போதிருந்த telex மற்றும் teleprinter மூலமாக 1973 வரை ஆமைவேகத்தில் நிகழ்ந்த சர்வதேச வர்த்தக பரிவர்த்தனை SWIFT இன் அறிமுகத்தோடு அதிரடியாக மாற்றமடைந்தது.
ரஷ்யா பெருமளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பெட்ரோலியப் பொருட்களுக்கான பணம் இந்த அமைப்பு மூலமாக கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரஷ்யாவுக்குப்போய்ச் சேர்ந்துவிடும்.

இந்த SWIFT அமைப்பிலிருந்து ரஷ்யாவை விலக்கிவைக்கும்படி பிரதானமாக பிரிட்டன் மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் கோருகின்றன. இப்படிச்செய்தால் ரஷ்யா வெளிநாட்டுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யமுடியாது என்பது மட்டுமல்ல, வெளிநாட்டு முதலீடுகளையும் பெற முடியாது எனபது அவர்களது வாதமாகும்.
ஆனால் இந்த அமைப்பிலிருந்து ரஷ்யாவை விலக்கிவைத்தால் ரஷ்யா எந்த அளவுக்குப் பாதிக்கப்படுமோ அந்த அளவுக்கு ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படும் என்றும் ஆகவே அவசரப்படாமல் பொறுமை காக்கும்படியும் சில ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுக்கின்றன. ‘இது கடைசி ஆயுதமாக இருக்கவேண்டும் என்பதே நெதர்லாந்துப் பிரதமர் Mark Rutte இன் அபிப்பிராயமாகும்.
இந்த SWIFT முறை எப்படி செயல்படுகிறது என்று பார்ப்பது முக்கியம். பொருளுக்கான பெறுமதியை இன்னொரு பொருளைக்கொடுத்து ஈடு செய்வது என்ற barter system -பண்டமாற்று முறையைத்தாண்டி நாம் வெகு தூரம் வந்தவிட்டோம். அவ்வளவு ஏன், பணம் அல்லது நோட்டுக்கள் கூட இன்று சௌகரியமானதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு bank cards என்ற வங்கி அட்டைகளே போதும்; பணத்தைக்கையால் தொடத் தேவையில்லை என்ற நிலைமை உருவாகியிருக்கிறது. எல்லா கொடுக்கல் வாங்கல்களையும் வங்கி கவனித்துக்கொள்கிறது.

ஒரு விவசாயியை எடுத்துக்கொள்வோம். அவர் தனது காய்கறியை Woolworths இற்கு அனுப்புகிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்கான விலை 1000 டாலர்கள் என்றால் Woolworths அந்த 1000 டாலர்களை தனது வங்கிக் கணக்கிலிருந்து விவசாயியின் கணக்குக்கு மாற்றுவதற்கு கணனிமூலமாக ஒரு transfer ஐச்செய்யும். மறுநிமிடம் இந்த 1000 டாலர்கள் விவசாயியின் கணக்கில் போய்ச்சேர்நதுவிடும். இது நிகழ்வதற்கு வங்கிக்கு இரண்டு விவரங்கள் வேண்டும். ஒன்று Woolworths கணக்குக்கான BSB number மற்றும் account number. இரண்டாவது விவசாயியின் BSB number மற்றும் account number. இந்த BSB மற்றும் account number களை வைத்துக்கொண்டு பணப்பரிவர்தனையை உள்ளூர் வங்கி செய்வது போல, நாடுகளுக்கடையே நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளின்போது இந்த SWIFT அமைப்பு பணப் பரிவர்த்தனையைக் கண்ணிமைக்கும் நேரத்தில் செய்துவிடும். மட்டுமல்ல, எந்த நாணயத்தில் பரிவர்தனை நிகழவேண்டுமோ அதேவிதமாகப் பரிவர்த்தனை செய்யும். ரஷ்யாவின் பெட்ரோல் ஜெர்மனிக்கு விற்கப்பட்டால் ரஷ்யா விரும்பியபடி அமெரிக்க டாலரிலோ அல்லது ரஷ்ய ரூபிள்களிலோ பணம் போய்ச்சேரும். நாடுகளுக்கிடையேயான இந்த வர்த்தக நடவடிக்கைகளை முறைமைப்படுத்தி பணத்தை போய்சேரவேண்டிய நாட்டுக்கு அல்லது அந்த நாட்டிலுள்ள நிறுவனத்திற்கு அல்லது தனி நபருக்கு உடனடியாக அனுப்பும் பணியை இந்த SWIFT செய்கிறது.
ரஷ்யாவை SWIFT முறையிலிருந்து துண்டிப்பதால் ரஷ்யா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான பணம் ரஷ்யாவுக்கு துரிதமாகப் போய்ச்சேராது. இதனால் ரஷ்யா பாதிக்கப்படும் என்பது உண்மைதான். ஆனால், இதனால் ஐரோப்பிய நாடுகள் எந்தவிதத்தில் பாதிக்கப்படும் என்று பாரப்போம்.

ரஷ்யா ஏற்றுமதிசெய்யும் எண்ணெய்யின் பெரும்பகுதியை ஜெர்மனி, இத்தாலி, நார்வே போன்ற ஐரோப்பிய நாடுகளே வாங்குகின்றன. ரஷ்யா, தான் ஏற்றுமதி செய்யும் எண்ணெய்க்கு பணம் கிடைக்காத நிலையில் ஏற்றுமதியை நிறுத்தினால் இந்த நாடுகளில் எண்ணெய்க்கு பெருந்தட்டுப்பாடு ஏற்படும். பொருளாதாரம் முடக்கப்படும். சர்வதேச எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே ஐரோப்பிய நாடுகள் SWIFT இலிருந்து ரஷ்யாவைத் துண்டிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்துவருகின்றன. அதேவேளையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதிசெய்யும் பொருட்களுக்கான பணத்தைப்பெறுவதும் முடியாமல் போகும்.
ஐரோப்பிய ஒன்றியம் 2020 இல் இயந்திரங்கள், போக்குவரத்து உபகரணங்கள் manufactured goods என்ற தயார்நிலைப் பொருடகள் என்று ஏராளமான பொருட்களை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்தது. நாணய பரிவர்த்தனை முடங்கினால் இது ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத்தைப்பாதிக்கும். அத்தோடு சர்வதேச வர்த்தகம் அமெரிக்க டாலர்களிலேயே பெரும்பாலும் நடப்பதால் அமெரிக்க டாலரின் பெறுமதி, அமெரிக்க பொருளாதாரம் என்பனவும் பாதிக்கப்படும்.
SWIFT முறையிலிருந்து ரஷ்யா விலக்கப்பட்டால் ரஷ்யாவுக்கு வேறு வழிகள் இல்லையா என்று நாம் யோசிக்கலாம். ரஷ்யாவுக்கு வேறு வழிகள் உண்டு என்பதே உண்மை. ஆனால் அது எந்த அளவு வெற்றிகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. ரஷ்யாவின் மத்திய வங்கி Transfer of financial messages என்றொரு முறையை வைத்திருக்கிறது. ஆனால் சரவதேசரீதியாக 400 வங்கிகள் மட்டுமே இந்த இணைப்பில் இருக்கின்றன. சீனா ஒரு financial transfer முறையை வைத்திருக்கிறது. இவை எதுவுமே Swift அளவுக்கு பாதுகாப்பாகவும் வேகமாகவும் பரிவர்த்தனைகளைச் செய்யக்கூடியவை அல்ல. விசேடமாக ஸைபர் தாக்குதல் மற்றும் hacking போன்ற குற்றங்கள் மலிந்துவிட்ட இந்த காலகட்டத்தில் SWIFT அளவு பாதுகாப்பை வேறு முறைகளால் தரமுடியாது என்பதே உண்மை.

இதைபற்றி SWIFT என்ன சொல்கிறது என்பதே இங்கு முக்கியம். SWIFT என்பது சர்வதேச சமூகத்தின் தேவைக்காக நிறுவப்பட்ட அரசியல் கலப்பற்ற நிறுவனம். ஒரு நாட்டுக்கெதிரான நடவடிக்கை என்று வரும்போது அது அவசரமாக விதிகளை மீறி செய்யக்கூடிய ஒன்றல்ல என்பதே அதன் நிலைப்பாடாகும் . ஆனால் 2012 இல் ஐரோப்பிய ஒன்றியம் விதித்த பொருளாதாரத் தடை காரணமாக இரானிய வங்கிகள் இந்த இணைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டன. பின்னர் பொருளாதார தடைகள் 2016 நீக்கப்பட்டபின்னர் மீண்டும் இணைக்கப்பட்டன.
இந்தப்பின்னணியில் பார்க்கும் போது SWIFT யிலிருந்து ரஷ்யாவைத் துண்டிப்பது உடனடியாக நிகழும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
