தெற்காசிய நாடுகளின் அணிகளின் ரசிகர்கள் உலகில் மிகவும் கலகலப்பானவர்கள் என்பது சமீபத்திய சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு மற்றும் streamகளில் இருந்து தெளிவாகிறது.
அவர்கள் பாரம்பரிய இசைக்கருவிகள் மற்றும் டிரம்ஸ் போன்றவற்றுடன், வண்ணமயமாக உடை அணிந்தபடி மைதானங்களுக்கு வருகிறார்கள்.
பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் அல்லது இலங்கையை உள்ளடக்கிய ஆஸ்திரேலியாவின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்திலும் இதனை நாம் அவதானிக்கலாம்
ஒரு அணியை எப்படி ஆதரிப்பது என்பதை இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலிய மக்களுக்குக் காட்டுகிறார்கள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் Lisa Sthalekar கூறுகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு போட்டியில் தெற்காசிய ரசிகர்கள் முதன்முதலில் கலந்துகொண்டது 1897 ஆம் ஆண்டு என தெரிவிக்கப்படுகிறது. இப்போட்டியில் இந்திய வம்சாவளியில்வந்த இங்கிலாந்து துடுப்பாட்டவீரர் குமார் ரஞ்சித்சின்ஜி விளையாடியிருந்தார்.
Colours of Cricket podcast-இன் இந்தப் பாகத்தில், Papare Band மற்றும் Bharat Army போன்ற ரசிகர் குழுக்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் அவை எப்படி இவ்வளவு அதிர்வையும் ஆற்றலையும் கேலரிகளில் செலுத்துகின்றன என்பதையும் கேட்போம்.
Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.
சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.
SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.
இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.
அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radi App-இல் Colours of Cricket-ஐ பின்தொடருங்கள்.
Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan
Lead Producer: Deeju Sivadas
Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli
Sound Design: Max Gosford
Program Manager: Manpreet Kaur Singh
Advisor: Patrick Skene
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது