உலகின் நாணயம் அமெரிக்க டாலர் என்ற தகுதியை $ இழக்கிறதா?

அமெரிக்க டாலர் 1914 இல் புழக்கத்திற்கு வந்தது. அது இன்று அமெரிக்காவில் மட்டுமல்ல வேறு பல நாடுகளிலும் உத்தியோகபூர்வ நாணயமாக புழக்கத்தில் இருக்கிறது.

defence funding, india, ministry

US Dollars Credit: Wikimedia (public domain)

இரண்டாம் உலகப் போரின் பின்னர் World’s Reserve Currency என்ற அங்கீகாரத்தை அமெரிக்க டாலர் 1944 இல் பெற்றது. இவ்வேளையில் Reserve currency பற்றி சற்று தெரிந்துகொள்வது அவசியம்.

உலகில் உள்ள பல நாடுகளிலுள்ள மத்திய வங்கிகளும் பாரிய நிதி நிறுவனங்களும் முதலீடு செய்வதற்கும் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கும் வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்கும் உள்நாட்டில் தமது சொந்த நாணயத்தை என்ன பெறுமதியில் வைத்திருப்பது என்பதை நிர்ணயம் செய்வதற்கும் பயன்படுத்தும் நாணயம் Reserve currency ஆகும். ஒவ்வொரு நாடும் பெருமளவில் கையிருப்பில் வைத்திருக்க விரும்பும் நாணயம். இதைத்தான் reserve currency என்று அழைக்கிறார்கள்.

முன்பு ஒருநாடு தனது நாணயத்தை எந்தப் பெறுமதியில் வைத்திருப்பது என்பது அந்த நாட்டில் கையிருப்பலுள்ள தங்கத்தின் அளவைப் பொறுத்ததாக இருந்தது. இதை gold standard என்பார்கள். ஆனால் இரண்டாம் உலகயுத்தத்தின் பின்னர் ஒருநாட்டின் நாணயத்தின் பெறுமதி அமெரிக்க டாலரின் பெறுமதிக்கு ஏற்ப கணிக்கப்பட்டது. இதை pegging the currency to the dollar என்பார்கள். அது இன்று உலகில் டாலராக உள்ளது.

US Stock
US Dollar Credit: Daily Targum QuoteInspector.com CC BY ND 4.0

உலகில் தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றிற்கு சர்வதேச சந்தையில் விலை நிர்ணயம் செய்வதற்கு reserve currency என்ற பெருமையைப் பெற்ற அமெரிக்க டாலரே பயன்படுத்தப்படுகிறது. இதனால் சர்வதேச வர்த்தகம் தடையின்றி நிகழ்கிறது. Reserve currency என்பதை வேறுவகையில் சொல்வதானால் அமெரிக்க டாலர் உலகப் பொது நாணயம் என்று சொல்லலாம். Global currency என்றும் சொல்லலாம். அந்நியச் செலாவணி சந்தைகளில் (foreign exchange markets) 90 சதவீதத்திற்கு அதிகமான கொடுக்கல் வாங்கல்கள் அமெரிக்க டாலரிலேயே நிகழ்கின்றன.

இந்த உலகப் பொதுநாணயம் இப்போது தனது செல்வக்கை இழந்துவருகிறது என்று சில நிபுணர்கள் சொல்லத்தொடங்கியிருக்கிறார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.

உலகில் உள்ள மத்திய வங்கிகளில் சுமார் 59 சதவீதமான வங்கிகள் reserve currencyஐ அமெரிக்க டாலரில் வைத்திருப்பதாக IMF International Monetary Fund சொல்கிறது. இருந்தபோதும் அமரிக்க டாலர், strongest world currency அல்ல. அமரிக்க டாலர் உலகில் மிக அதிக வலு மிக்க நாணயமல்ல. Strongest currency என்ற பட்டியலில் பார்க்கும்போது இது 10ஆவது இடத்தில் இருக்கிறது. உலகில் மிகவும் வலுவான நாணயமாக முதலிடத்தில் இருப்பது Kuwaiti Dinar. British pound 5ஆவது இடத்திலும் Euro 8 ஆவது இடத்திலும் இருக்கின்றன. Singapore dollar 14 ஆவது இடத்திலும் நமது ஆஸ்திரேலிய டாலர் 15 ஆவது இடத்திலும் இருக்கின்றன. மட்டுமல்ல, வர்த்தகரீதியாக முன்னேறியுள்ள பல நாடுகள் தங்களது நாணயத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.

Kuwait dinars bills stacks background.
Computer generated 3D photo rendering. Source: iStockphoto / ppart/Getty Images/iStockphoto

ரஷ்யா 2014 இல் Crimea வைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து இணைத்துக்கொண்டதற்கு எதிராக மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத்தடைகள் காரணமாக மேற்குலகுடனான ரஷ்ய வரத்தகம் பாதிக்கப்பட்டது. இதனால் சீற்றம் கொண்ட ரஷ்யா, அதன் நட்பு நாடான சீனாவுடன் இணைந்து டாலரைப் புறக்கணிக்கும் விதமாகச் செயல்பட ஆரம்பித்தது. ரஷ்ய சீன வர்த்தகம் இப்போது சீன நாணயமான Yuan - Ruble இலேயே நடக்கிறது.

Brazil அரசும் சீனாவுடனான தனது வர்த்தகத்தை Reais - Yuan இல் நடத்தப்போவதாக சென்றமாதம் அறிவித்துள்ளது. Brazil நாடு தெற்கு அமெரிக்க நாடுகளுள் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். சீனா, Argentina வுடனும் தனது வரத்தகத்தை Yuan இலேயே நடத்துகிறது. இதற்கிடையே ஆசியாவின் மிகப்பெரிய பொருளாதார வளங்களைக்கொண்ட இந்தியாவும் சீனாவும் அமெரிக்க டாலரில் தாம் தங்கியிருப்பதைத் தவிர்ப்பதற்காக தங்களது வரத்தகத்தை Rupee - Yuan இல் செய்ய ஆயத்தங்களைச்செய்து வருகின்றன.

இந்தியா - Tanzania, Kenya, Uganda உட்பட 18 நாடுகளுடன் இந்தியாவின் Rupee அடிப்படையிலான வர்த்தகத்தை சென்ற மாதம் ஆரம்பித்திருப்பதாக இந்தியாவின் Reserve Bank of India அறிவித்திருக்கிறது. இந்தியாவுடனான ரஷ்ய வர்த்தகமும் இப்போது Rupee – Ruble அடிப்படையிலேயே நடக்கிறது. BRICS என்ற அமைப்பிலுள்ள Brazil, Russia, India, China, South Africa போன்ற நாடுகள் டாலருக்கு மாற்றாக ஒரு நாணயத்தை சர்வதேச பரிவர்த்தனைக்குப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

Currency of different countries
Currency of different countries. Source: iStockphoto

உலகின் நாணயம் அமெரிக்க டாலர் என்ற தகுதியை அமெரிக்க டாலர் இழக்கும் அபாயத்தை சந்திக்க கடந்த இருபது ஆண்டுகளில் US dollar 12 சதவீதமான சந்தைப் பங்கை இழந்திருப்பதும் ஒரு காரணம். இதன் காரணமாக அமெரிக்க டாலர் Global Currency அல்லது World Reserve Currency என்ற நிலையிலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடையும் என்று பொருளியல் துறையைச்சேர்ந்த நிபுணர்கள் சிலர் சொல்கிறார்கள்.

இவ்வேளையில் பொருளியல் துறையைச்சேர்ந்த நிபுணர்கள் கூறும் கணிப்பை ஒரு மிகைப்படுத்தல் என்றும் சில நிபுணர்கள் சொல்கிறார்கள். De- Dollarisation அல்லது அமெரிக்க டாலரை விட்டு விலகுவது என்பதுபற்றி பரபரப்பாகப் பேசப்பட்டாலும் அது நிகழுவதற்கான சாத்தியங்கள் உடனடி இல்லை என்பதே இவர்களது கருத்து. காலப்போக்கில் சில நாடுகளுக்குடையேயான வர்த்தகம் அந்த நாடுகளின் சொந்த நாணயங்களில் நடப்பதைத் தடுக்கமுடியாது என்றபோதும் இது அமெரிக்க டாலரைப் பெரிதாக பாதிக்காது என்று சொல்லப்படுகிறது. கடந்த 6 மாதங்களில் அமெரிக்க டாலரின் பெறுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளபோதும், அமரிக்கா வர்த்தகம் செய்யும் நாடுகளின் நாணயங்களோடு ஒப்பிடுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்க டாலரின் பெறுமதி உச்சத்திலேயே இருக்கிறது. அமெரிக்கா, உலகில் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு என்பதோடு அதன் வர்த்தக நடவடிக்கைகளோடு முழு அளவில் தொடர்புள்ள அமெரிக்க டாலர் அதன் வலுவை இழப்பதற்கான சாத்தியங்களே இல்லை என்று பலர் வாதிடுகிறார்கள். மட்டுமல்ல, சர்வதேச வர்த்தகத்தில் பரிவர்த்தனையாகும் பிரதான நாணயமாக தொடர்ந்து அமெரிக்க டாலர் இருந்துவருகிறது. கடந்த 2022 இல் சுமார் 2 சதவீதமான வர்த்தகம் மட்டுமே சீன நாணயமான Yuan இல் நடந்திருக்கிறது.

அமெரிக்க டாலருக்கு எதிரான சவால் தொடர மிகப் பெரிய காரணம் பெரிய பொருளாதாரத்தைக்கொண்ட நாடுகளின் அபரிதமான வளர்ச்சி. குறிப்பாக, சீனா, இந்தியா போன்ற சில பெரிய பொருளாதாரத்தைக்கொண்ட நாடுகள் தங்கள் நாணயங்களூடாக பிற நாடுகளுடன் மாறிமாறி வர்த்தகம் நடக்கும் நிலையை உருவாக்கக் கூடும். இருந்தபோதும் Worlds Reserve Currency என்ற அங்கீரத்தை அமெரிக்க டாலர் ஒருபோதும் இழக்காது என்பதே இவர்களது வாதமாகும் . இந்த அங்கீகாரம் உறுதியாக இருக்கும் வரை அதன் பெறுமதிக்கு பங்கம் ஏற்படாது என்பதும் இவர்களின் வாதமாகும்.

Stock market indicators and cash dollars
Stock market indicators and cash dollars Source: Moment RF / Javier Ghersi/Getty Images

கடந்த ஒருவருடத்தில் டாலரில் 8-10 சதவீத வீழ்ச்சி மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. வர்த்தக வட்டாரங்களில் பெரிதும் விரும்பப்படும் நாணயமாக அமெரிக்க டாலர் இருப்பதால் இதன் கவர்ச்சி குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சிலரால் பாரக்கப்படுகிறது. அமெரிக்காவின் வலிமையான பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை என்பன காரணமாக Recession என்ற மிக மோசமான மந்தநிலை ஏற்பட்டாலோ அல்லது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டாலோ நாடு நிலைகுலைந்து போகாது என்பதை கடந்த கால வரலாறு காட்டுகிறது. ஆகவே முதலீடு செய்வதற்கும் வர்த்தகம் செய்வதற்கும் மிக சாதகமான சூழல் அங்கு நிலவுவதால் அமெரிக்க டாலருக்கான demand -தேவை அதிகரிக்குமேதவிர, டாலரின் தேவை உலகில் குறைய வாய்ப்பில்லை என்று பல நிபுணர்களும் சொல்கிறார்கள்.

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


5 min read

Published

Updated

By R.Sathiyanathan

Source: SBS


Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now