2023ம் ஆண்டுக்கான உலகின் மிகச்சிறந்த விமான சேவைகள் எவை என்ற புதிய பட்டியலை விமானதரப்படுத்தல் நிறுவனமான Skytrax
வெளியிட்டுள்ளது.
பல நாடுகளைச் சேர்ந்த பயணிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்தப் பட்டியலை Skytrax வெளியிட்டுள்ளதுடன் விமானநிறுவனங்களுக்கான விருதுகளையும் வழங்கியுள்ளது.
இதன்படி Singapore Airlines விமானசேவை முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2022ம் ஆண்டு இப்பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த Qatar Airways இவ்வாண்டு இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர் சேவை, பயணப்பொதிகளைக் கையாளுதல் மற்றும் தாமதம் ஆகியவை தொடர்பில் பரவலாக விமர்சிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் Qantas விமானசேவை இவ்வருடம் 17வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இத்தரவரிசையில் 5-வது இடத்தில் காணப்பட்ட பின்னணியில், 2018-க்குப் பிறகு முதல் முறையாக முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறி 17வது இடத்திற்கு Qantas விமானசேவை தள்ளப்பட்டுள்ளது.
Skytrax-இன் சிறந்த விமான சேவைகளின் பட்டியலில் முதல் 20 இடங்களைப் பிடித்துள்ள நிறுவனங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- Singapore Airlines
- Qatar Airways
- ANA All Nippon Airways
- Emirates
- Japan Airlines
- Turkish Airlines
- Air France
- Cathay Pacific Airways
- EVA Air
- Korean Air
- Hainan Airlin
- Swiss International Air Lines
- Etihad Airways
- Iberia
- Fiji Airways
- Vistara
- Qantas Airways
- British Airways
- Air New Zealand
- Delta Air Lines
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in
பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில்
செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
