தமிழகத்தை பூர்வீகமாகக்கொண்ட பிரிதீஷ் A R என்ற 12 வயதுச் சிறுவனே இந்தச் சாதனையை புரிந்துள்ளார்.
Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவுசெய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை பிரிதீஷ் முறியடித்திருக்கிறார்.
சிறுவயது முதல் தாள வாத்தியங்களில் அதிக ஈடுபாடுள்ள பிரிதீஷ், கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.

Source: Supplied
அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சுமார் ஏழு மாதங்களாக மேற்கொண்ட கடின பயிற்சியின் பலனாக இந்த உலக சாதனையைப் படைத்துள்ளதாகவும், மிருதங்கம், கீ போர்ட் உட்பட ஏனைய வாத்தியங்களை வாசிக்கும் ஆற்றலும் தனக்கு உண்டு என்றும் பிரிதீஷ் SBS தமிழிடம் தெரிவித்தார்.
தினமும் காலை 6 மணிக்கு துயிலெழும் பிரிதீஷ் இரண்டு மணிநேரங்கள் drums பயிற்சியில் ஈடுபடுவதாகவும், பள்ளி முடிவடைந்த பின்னரும் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.
பிரிதீஷ் சிறிளவு நேரம் கிடைத்தால்கூட drums பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார் என தாயார் ஆர்த்தி தெரிவித்தார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே தமது மகனுக்கு மீதிருந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்டு அதிலேயே மேன்மேலும் சாதிக்கும் வகையில் பிரிதீஷை வழிநடத்தியதாக அவர் கூறினார்.
ஒரு தந்தையாக தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் தனது மகனுக்கு வழங்கியதாகவும் தனது மனைவியே பிரிதீஷ் விடயத்தில் அதிக முனைப்புடன் செயற்பட்டு அவரை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றதாகவும் பிரதீஷின் தந்தை ராஜேஷ் குமார் தெரிவித்தார்.

Source: Supplied
பிரதீஷ் எதிர்காலத்தில் ஒரு சிறந்த இசை மேதையாக வர விரும்புவதாகவும் அதற்கு தனது குடும்பம் உறுதுணையாக இருக்கும் எனவும் திரு ராஜேஷ் குமார் மேலும் தெரிவித்தார்.
இதை ஆமோதித்த பிரிதீஷ் தனது எதிர்கால இலட்சியம் இசைத்துறையில் சாதனை படைப்பதே என்றார்.
பிரிதீஷ் மற்றும் அவரது பெற்றோருடனான நேர்காணல்:
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
கொரோனா குறித்த தகவல்கள்
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். கொரோனா வைரஸ் உதவி மையத்தை 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக் கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற் சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.