இந்த விவரணத்தில் Treaty- ஒப்பந்தம் என்றால் என்ன, அது பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களுக்கு ஏன் முக்கியமானது, மற்றும் ஆஸ்திரேலியாவில் இதுதொடர்பில்இப்போது என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.
ஒரு ஒப்பந்தம் என்பது பல்வேறு குழுக்கள் அல்லது தரப்புக்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உருவாக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ உடன்படிக்கையாகும். எடுத்துக்காட்டாக பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் மற்றும் ஆஸ்திரேலிய அரசுக்கிடையில் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தம்.
பிரிட்டன் நாட்டவர் முதன்முதலில் பூர்வீகக்குடிமக்களின் நிலத்தில் குடியேறியபோது, அதை ‘terra nullius’ என்று அறிவித்தனர்- அதாவது யாருக்கும் சொந்தமான நிலம் அல்ல. எனவே, பூர்வீகக்குடிமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. பல பூர்வீகக்குடி பின்னணிகொண்ட ஆஸ்திரேலியர்கள் இதை "முடிக்கப்படாத விவகாரம்" என்று அழைக்கிறார்கள்.
ஒப்பந்தங்கள் இறையாண்மையை அங்கீகரிப்பதன் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. இருப்பினும், ஒப்பந்தங்கள் பலவகையாக இருக்கலாம் மற்றும் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கியிருக்கலாம்.
• நிலம் மற்றும் வளங்களை பகிர்ந்து கொள்ளுதல்
• ஒன்றாக நிர்வாகம் செய்வது
• சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான ஒப்பந்தங்கள்

Protesters march from Parliament House to Flinders Street Station during the Treaty Before Voice Invasion Day Protest on January 26, 2023, in Melbourne, Australia. (Photo by Alexi J. Rosenfeld/Getty Images) Credit: Alexi J. Rosenfeld/Getty Images
பூர்வீகக் குடிமக்களின் கண்ணோட்டத்தில், ஒப்பந்தம் என்பது கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அங்கீகரிப்பது, உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு சமூகங்களைப் பாதிக்கும் முடிவுகளில் அவர்களது குரலும் கேட்கப்படுவதற்கான உரிமையை உறுதி செய்வதாகும்.
ஆஸ்திரேலியாவில் பல நூறு தனித்துவமான பூர்வீகக்குடி மக்கள் உள்ளதாலும் ஒவ்வொரு சமூகத்துக்கும் முக்கிய அம்சங்கள் வேறுபட்டிருக்கலாம் என்பதாலும் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் சிக்கலானவையாக இருக்கலாம். எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் பல்வேறு கண்ணோட்டங்களும் உள்ளன.
எனவே ஒரு ஒப்பந்தம் ஏன் முக்கியமானது?
பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களைப் பொறுத்தவரை ஒரு ஒப்பந்தமானது நீதி மற்றும் மரியாதையை நோக்கிய ஒரு படி என்று நம்புகிறார்கள் என்கிறார் Gunditjmara நபரும் treaty leaderமான Reuben Berg.
ஒப்பந்தத்தின் ஆதரவாளர்கள் இது பல வழிகளில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
இதன்மூலம் பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்களை ஆஸ்திரேலியாவின் முதல் மக்களாக முறையாக அங்கீகரிக்கவும், நாட்டின் வரலாறு மற்றும் காலனித்துவம் பற்றி உண்மையைச் சொல்வதற்கான வாய்ப்பை உருவாக்கவும் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
நிலம், நீர், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, வேலைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கியமான பகுதிகளில் அரசுக்களுக்கும் சமூகங்களுக்கும் இடையே நியாயமான கூட்டுறவுகளை உருவாக்கவும் ஒரு ஒப்பந்தம் உதவும்.
அதேநேரம் ஒரு ஒப்பந்தமானது மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் புனித இடங்களைப் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு அந்த மரபுகளை உயிருடன் வைத்திருக்க உதவுவதற்குமான ஒரு வழியாகவும் பல பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ரெயிட் தீவு மக்கள் கருதுகின்றனர் என விளக்குகிறார் Wirdi மனிதரும் வழக்கறிஞருமான Tony McAvoy.

(from left to right) Former Queensland Truth-Telling and Healing Inquiry chairperson Joshua Creamer, NSW Treaty Commissioner Naomi Moran and co-chair of the First Peoples' Assembly of Victoria Ngarra Murray. Credit: NITV / The Point
உள்ளூர் சமூகங்கள் இந்த செயல்பாட்டில் முன்னின்று செயற்பட வேண்டும் என்று அவர் நம்புகிறார்.
அப்படியென்றால் பூர்வீகக் குடிமக்களுடனான ஒரு ஒப்பந்தம் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?
விக்டோரியாவில், ஒப்பந்த செயல்முறை சிறப்பாக நடைபெற்று வருகிறது, இந்த ஆண்டில் மாநிலம் தழுவிய ஒரு ஒப்பந்தம் எதிர்பார்க்கப்படுகிறது.
விக்டோரியாவின் First Peoples’ Assembly என்று அழைக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவின் ஊடாக, விக்டோரியாவில் உள்ள பூர்வீகக்குடிப்பின்னணிகொண்ட மக்களுக்கு தங்கள் சமூகத்தையும் வாழ்க்கையையும் நேரடியாகப் பாதிக்கும் கொள்கைகள் குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் செல்வாக்கு செலுத்தவும் அதிகாரம் வழங்கப்படும்.
மற்ற இடங்களில், குறிப்பாக குயின்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் Nothern Territoryயில் இத்தகைய ஒப்பந்தம் குறித்த முன்னேற்றம் வெவ்வேறு கட்டங்களில் உள்ளது.
சில அரசுக்கள் சமூக ஆலோசனைகளை நடத்துகின்றன, மற்றவை இன்னும் தங்கள் அடுத்த நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றன.

Independent Senator Lidia Thorpe during Question Time in the Senate chamber at Parliament House in Canberra. Source: AAP / MICK TSIKAS/AAPIMAGE
ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் சொந்த வரலாறு மற்றும் தேவைகள் இருப்பதால், உண்மையான, நீண்டகால மாற்றத்தை ஏற்படுத்த ஆஸ்திரேலியாவுக்கு தேசிய மற்றும் மாநில அடிப்படையிலான ஒப்பந்தங்கள் தேவை என்று பூர்வீகக்குடிமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கும் பல ஆர்வலர்கள் நம்புகிறார்கள்.
சட்டரீதியான பொருளைத் தாண்டியும், ‘treaty’ என்பது உறவுகளைப் பற்றி பேசுகிறது என்ற கருத்திலும் பார்க்கப்படுகிறது.
அதாவது பூர்வீகக்குடி பின்னணி கொண்டவர்களும் பூர்வீகக்குடி பின்னணி அல்லாத ஆஸ்திரேலியர்களும் — எப்படி ஒன்றிணைந்து வாழ வேண்டும், ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டும் என்ற முடிவை தீர்மானிக்கும் வழிமுறையாக அது பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு சமூகத்திற்கும் இடமுள்ள — நீதியுடனும் ஒற்றுமையுடனும் கூடிய ஒரு ஆஸ்திரேலியாவை உருவாக்கும் பாதையில் முன்னேறும் முக்கியமான படியாகவும் இந்த ஒப்பந்தத்தை பலர் பார்க்கின்றனர்.
Stream free On Demand
The Case For A Treaty
episode • Living Black • News And Current Affairs • 34m
episode • Living Black • News And Current Affairs • 34m
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand











