விண்ணில் உலாவரும் எண்ணற்ற asteroid களுள் ஒன்றான Bennu உருவாகி 4.5 billion அதாவது சுமார் 450 கோடிவருடங்கள் ஆகியிருக்கவேண்டும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் அகலம் 510 மீட்டர்களாகும். பூமிக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கும் இடைப்பட்ட விண்வெளியில் இது சஞ்சரிக்கிறது. பூமிக்கும் இந்த விண்பாறைக்குமிடையேயான தூரம் ஏறக்குறைய 84 லட்சம் km ஆகும். 1999இல் இந்த விண்பாறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆறு வருடங்களுக்கு ஒருமுறை இது பூமிக்கு அண்மையில் வருகிறது.
மிகத்தொன்மையான இந்த asteroid இன் மேற்பரப்பிலிருந்து rockey materials என்ற கற்துகள்களை எடுப்பதற்கு Nightingale என்று பெயரிடப்பட்டுள்ள பகுதியொன்று தெரிவுசெய்யப்பட்டது. இந்த sample ஐ எடுப்பதற்கு சிறிய spacecraft என்ற விண்கலமொன்றை 7 வருடங்களுக்கு முன்னர் NASA அனுப்பியது. சற்றுப்பெரிய மோட்டார் வாகனத்தின் அளவை ஒத்த இந்த spacecraft இற்கு OSIRIS-REx என்று பெயரிடப்பட்டது. இந்த OSIRIS REx, 250 கிராம் எடையுள்ள rocks and dusts என்ற sample ஐ 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் - இவ்வருடம் அக்டோபர் மாதம் 24 தேதி பூமிக்கு கொண்டுவந்து சேர்த்துள்ளது.
விண்வெளியில் எத்தனையோ விண்பாறைகள் அல்லது asteroids இருக்கும்போது ஏன் Bennu என்ற இந்த asteroid samples களைச் சேகரிக்கத்தேர்வு செய்யப்பட்டது என்பது முக்கியத்துவம் பெருகிறது.

Bennu எனும் விண்கல் சூரியகுடும்பத்தின் ஆரம்பத்தை விளக்கும் கோள்களுள் எஞ்சியிருக்கும் ஒரு கோளாகும். பூமியிலுள்ள பாறைகள் பருவகாலமாற்றம், காலநிலை, erosion என்ற தேய்வு என்பன காரணமாக சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் இப்போது இல்லை. இதனால் பூமி என்ற கோள் எவ்வாறு உருவானது என்பதற்கான ஆதாரங்கள் யாவும் அழிந்துவிட்டன. ஆனால் Bennu என்ற விண்பாறை 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் இருக்கிறது. ஆகவே இந்த விண்பாறையில் இருந்து எடுக்கப்படும் surface sample கோள்கள் எப்படி உருவாகின என்பதற்கான ஆதாரங்களை எமக்கு வழங்கும் என்றும் எமது வரலாறு என்ன என்பதை நாம் அறிந்துகொள்ள வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
எல்லா உயிரினங்களுக்கும் மூலாதாரமாக இருக்கும் organic compounds -கரிம சேர்மங்கள் Bennu வில் நிறைய இருக்கின்றன. பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் விண்பாறைகள் நமது பூமி போன்ற கோள்களோடு மோதியபோது இந்த விண்பாறைகளிலிருந்து இந்த organic compounds பூமிக்கு வந்து சேர்ந்திருக்கவேண்டும்; அதன்பின்னர்தான் பூமியில் உயிரினங்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன. ஆகவே Bennu வில் எடுக்கப்பட்ட samples களைக்கொண்டு பல பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நிலவிய சூழ்நிலையை அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் முயற்சிக்கிறார்கள். அத்தோடு origins of life என்ற ‘உயிர்கள் எப்படி தோன்றின’ என்ற கேள்விக்கான விடையைக்காணவும் முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
இந்த sample கள் பூமிக்கு எப்படி வந்துசேர்ந்தது குறித்து ஆராய்வோம். ஜப்பான் நாடு முன்பு விண்பாறைகளிலிருந்து sample களை பெற்றிருந்தாலும் கூட அவற்றின் எடை வெறும் 4 கிராம் மட்டுமே. ஆகவே 250 கிராம் எடையுள்ள sample ஐ விண்பாறையிலிருந்து பெறுவது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. Sample ஐ ச் சேகரித்த தாய்க்கலமான Osiris, பூமியிலிருந்து ஒருலட்சத்து எட்டாயிரம் கி மீட்டர் தொலைவுக்கு வந்ததும் sample ஐ சுமந்துவந்த capsule தாய்கலத்திலிருந்து பிரிந்து பூமிக்கு வந்து அமெரிக்காவில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட Salt Lake City யிலுள்ள அமெரிக்க ராணுவத்தின் Utah test and training centre ஐ வந்து சேர்ந்தது. பூமிக்கு இறங்கும் இந்த நிகழ்வு NASA வில் live stream என்ற நேரலையில் ஒளிபரப்பானது.

இந்த sample களுக்குள் நிறைய ஆச்சரியங்கள் பொதிந்திருக்கக் கூடும் என்றும் meteorites என்ற Bennu போன்ற விண்பாறைகளை ஆய்வு செய்யும்போது, building blocks of life என்ற உயிர்கள் தோன்றியதும் கட்டமைக்கப்பட்டதும் பற்றி அறிய முற்படுவோம் என்றும் இதன் இணை ஆய்வாளர்களுள் ஒருவரான Danny Glavin கூறியிருக்கிறார். Protein களைக் கட்டமைக்கும் amino acids , sugars, energy source of life, சக்திவளக்கூறு, nucleobases என்பவை genetic code ஐ நிர்ணயிக்க அடிப்படையானவை என்பதால் இவை இந்த samples களில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்
இந்த ஆய்வில் ஆஸ்திரேலியாவின் பங்கு என்ன என்று பார்ப்போம். பூகோளரீதியாக உள்ள நாடுகளிலுள்ள 38 பல்கலைக்கழகங்கள் இந்த மாதிரிகளை ஆயும் பணியில் ஈடுபடுகின்றன. ஆஸ்திரேலியாவில் Curtin பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த Dr. Timms தனது சகாக்கள் ஐவரோடு இந்த ஆய்வில் இணைகிறார்.
‘எமக்கு கிடைக்கவிருக்கும் மிகச்சொற்ப அளவான sample ஐ எம்மிடமுள்ள அதி நவீன பகுப்பாய்வு கருவிகள் மூலம் பரிசோதித்து, sample இன் அமைப்பு, வேதியல் கூறுகள் என்பவற்றை அவை எத்தனை நுண்ணளவைக்கொண்டதாக இருந்தாலும் அவற்றைத் துல்லியமாக கணிப்பதே எங்கள் பணி’ என்று அவர் கூறியிருக்கிறார். ‘உலகளவில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளுடன் இணைந்து மிக பிரதானமான கேள்விகளுக்கு விடை காணவேண்டும்’ என்றும் அவர் கூறினார்.
‘நாங்கள் பிரதானமாக மூன்று கேள்விகளுக்கு விடை தேடுகிறோம்’ என்றார் அவர்.
1. What types of organic compounds are preserved in Bennu. The ancient building block of life Bennu என்ற விண்பாறையில் எந்தவிதமான கரிம சேர்மங்கள் இருக்கின்றன; உயிர் உருவாவதற்கு தேவையான கட்டுமானம் என்ன?
2. Bennu எப்படி உருவானது எப்படி இது இன்னும் இருக்கிறது?
3. இந்த விண்பாறைகளில் நீர் அல்லது வேறு வளங்கள் உள்ளனவா?
இந்த முன்று கேள்விகள் முக்கியமத்துவம் மிக்கவை என்று பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் விண்வெளியில் நடக்கவிருக்கும் ஆராய்ச்சிகளுக்கு இது உதவும் என்றும் நம்பப்படுகிறது.

NASA வின் நிர்வாக அதிகாரி Bill Nelson கருத்து தெரிவிக்கும்போது, ‘கோள்களின் அமைப்பு தொடர்பாக விஞ்ஞானிகளுக்கு இந்த ஆய்வுகள் பெருமளவில் உதவும் என்றும் asteroids பூமியின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப்பற்றியும் அறிந்துகொள்ள உதவுமென்றும் இதன்மூலமாக சூரியகுடும்பத்தின் தோற்றம் இதன் அமைப்பு என்பனபற்றியும் விரிவாக புரிந்துகொள்ள முடியும்’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
மேலும்,‘Bennu விலிருந்து sample கிடைத்த 20 நிமிடங்களில், Osiris அடுத்த பயணத்திற்கு தயாராகத்தொடங்கிவிட்டது. இந்தப் புதிய mission இற்கு Osiris apex என்று பெயரிடப்பட்டிருக்கிறது. Apophis Explorer என்பதன் சுருக்கம்தான் Apex. Apophis என்ற asteroid 2029 இல் பூமிக்கு அண்மையில் வரும்போது அதிலிருந்து surface samples எடுப்பதுதான் இதன் நோக்கம்’ என்று NASA வின் planetary science division ஐச் சேர்ந்த Lori Glaze கருத்து வெளியிட்டார்.
Bennu project இன் வெற்றி காரணமாக எதிர்கால ஆராய்ச்சிகளுக்கு புதிய உந்து சக்தி கிடைத்துள்ளது. இது நிச்சயமான விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பரபரப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள தரணம்; இது எல்லோருக்கும் பயன்படும் என்று ஆஸ்திரேலிய விஞ்ஞானியான Dr Timms நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
