Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

ஆஸ்திரேலியாவையும் இந்தியாவையும் கிரிக்கெட் மூலம் இணைத்த முன்னோடிகள்!

Colours of Cricket-GettyImages-637474174.jpg

Rusi Surti was the first Indian Test player to play in the Sheffield Shield Credit: Getty

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைதானங்களில் களமிறங்குவதைப் பார்க்க காத்திருக்கிறார்கள். இந்த ஆரவாரங்களுக்குப் பின்னால் முகம்தெரியாத பலரின் கடுமையான உழைப்பு காணப்படுகிறது. இப்படியானவர்களில் சிலரின் பங்களிப்பைப்பற்றி Colours of Cricket இன் இந்த 6வது பாகத்தில் கேளுங்கள்.


Published

Updated

By Deeju Sivadas, Vatsal Patel, Sahil Makkar, Abhas Parajuli

Presented by Kulasegaram Sanchayan, Preeti Jabbal

Source: SBS



Share this with family and friends


உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மைதானங்களில் களமிறங்குவதைப் பார்க்க காத்திருக்கிறார்கள். இந்த ஆரவாரங்களுக்குப் பின்னால் முகம்தெரியாத பலரின் கடுமையான உழைப்பு காணப்படுகிறது. இப்படியானவர்களில் சிலரின் பங்களிப்பைப்பற்றி Colours of Cricket இன் இந்த 6வது பாகத்தில் கேளுங்கள்.


பல கிரிக்கெட் ரசிகர்களுக்கு, குறிப்பாக துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு, Frank Tarrant என்ற பெயர் நினைவிற்கு வராமல் போகலாம்.

மெல்பனில் பிறந்த Frank Tarrant இந்திய கிரிக்கெட் அணியின் முதல் வெளிநாட்டு பயிற்சியாளராக இருந்ததுடன் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு இடையேயான நீண்டகால தொடர்பின் உந்து சக்தியாக இவரைக் கருதலாம்.

மறக்கப்பட்ட மற்றொரு ஹீரோ முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் Reginald Hugh Durning Sellers OAM . இவர் Rex Sellers என்று அழைக்கப்படுகிறார். பம்பாயில் (தற்போது மும்பை) பிறந்து குஜராத்தில் வளர்ந்தவர்.

கிரிக்கெட் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான Patrick Skene, ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் வீரர் Sellers என்று கூறுகிறார்.

Colours of Cricket இன் இந்த பாகத்தில், முன்னாள் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர் Rusi Framroze Surti-யையும் நினைவு கூருகிறோம்.

அவர் மட்டுமல்ல கிரிக்கெட்டின் சமகால முன்னோடிகளைப் பற்றிப் பேசும்போது, Dr Gorur Krishna ‘Harry’ Harinath OAM-ஐயும் மறந்துவிட முடியாது.

ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் நிர்வாகத்தில் முக்கிய பதவிகளை வகித்த தெற்காசியாவைச் சேர்ந்த முதல் நபர் Dr Harinath ஆவார்.

இப்படியானவர்களின் பங்களிப்பைப்பற்றி Colours of Cricket இன் இந்த 6வது பாகத்தில் கேளுங்கள்.

Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.

சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.

SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.

இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radi App-இல் Colours of Cricket

-ஐ பின்தொடருங்கள்.

Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan

Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Kaur Singh

Advisor: Patrick Skene

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 

tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now