ஆஸ்திரேலியாவின் பூர்வீகக்குடி மக்கள் 60,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் வாழ்ந்து, அதை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது நிலத்துடனான தொடர்பை புரிந்து, மதிப்பது, நீங்கள் புதிதாக குடியேறியுள்ள இந்த நாட்டில் உங்களது புதிய வாழ்விடத்தில் நிலையான உணர்வை உருவாக்க உங்களுக்கு உதவும்.
நீங்கள் எங்கிருந்தாலும், உங்களது ஆங்கிலம் எந்த நிலையில் இருந்தாலும், பூர்வீகக்குடி கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்களைப் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் அர்த்தமுள்ள வழிகள் பற்றி இந்த விவரணத்தில் பார்ப்போம்.
புதிய நாட்டில் வாழ்வது உங்களுக்கு பெரிதும் குழப்பமானதாக இருக்கலாம். பல குடியேற்றவாசிகள் பூர்வீகக்குடி மக்களின் கலாச்சாரங்களை பற்றி அறிய விரும்பினாலும், அதற்கான “சரியான வழி” பற்றி தெரியாததால் தயங்குகிறார்கள். சிலர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுமோ என்று கவலைப்படுகிறார்கள்; மற்றவர்கள் எங்கிருந்து தொடங்குவது என்பது பற்றி தெரியாமல் இருக்கிறார்கள்.

“It's important for anyone living in Australia to understand that Indigenous people have cared for this Country for tens of thousands of years,” Shannan Dodson says. Photo: The Healing Foundation.
நமது நாட்டில் பல்வேறு பூர்வீகக்குடி கலாச்சாரங்கள் உள்ளன, பல மொழிகள் பேசப்படுகின்றன, பல்வேறு வழக்குகள், கலைமுறை மற்றும் மரபுகள் உள்ளன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார் அவர்.
இதற்கான ஆரம்ப படியை ஆன்லைனில், உங்களுக்கு கிடைக்கும் நேரத்தில், எளிய ஆங்கிலத்தில் செய்ய முடியும். பூர்வீகக்குடி மக்களின் பல்வகைமையைக் கற்றுக்கொண்டபின் அவர்களை நேரில் சந்தித்து உரையாடும்போது நீங்கள் நம்பிக்கையுடனும், தயார் நிலையிலும் இருப்பீர்கள்.
இந்த ஆரம்பப்படியை எடுத்த பிறகு, அடுத்ததாக நீங்கள் வசிக்கும் பூர்வீக நிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் நடக்கிற நிலம், வேலை செய்யும் நிலம், குடும்பத்தை வளர்க்கும் நிலம் – அதுவே Country.

Some Indigenous organisations focus on issues specific to their state and territory while others work on nationwide Indigenous affairs, for example aged care. Credit: davidf/Getty Images
பிராந்திய பகுதிகளில், இப்படித் தேடும்போது சமூக விழாக்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பயிற்சி பட்டறைகள் போன்றவற்றைப்பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பிராந்தியத்திலும் பூர்வீகக்குடி கலாச்சாரம்பற்றிய தகவல்களை வழங்கும் பூர்வீகக்குடி அமைப்புகள் உள்ளன என Shannan Dodson கூறுகிறார்,
அதேநேரத்தில் குழு நிகழ்வுகளில் கலந்துகொள்வது புதியவர்களுக்கு எளிதான மற்றும் மகிழ்ச்சியான வழியாகும். ஆஸ்திரேலியாவிலுள்ள பல சமூக நிகழ்வுகள் எல்லா பின்னணியினரையும் வரவேற்கின்றன.
இந்த நிகழ்வுகளில் பெரும்பாலும் இசை, கலை, நடனம், உணவு மற்றும் கதைசொல்லல் ஆகியவை அடங்கும் - வலுவான ஆங்கிலத் திறன்கள் தேவையில்லாத செயல்பாடுகள், மற்றும் பெரும்பாலும் குடும்பங்களுக்கு ஏற்றவை.

It’s easy to make mistakes if you come across a myth or stereotype around Aboriginal and Torres Strait Islander people and culture. Credit: WANDER WOMEN COLLECTIVE/Getty Images
பூர்வீகக்குடி மக்களுடன் இணைந்து செயற்படுவது இந்த நாட்டில் நீங்களும் ஒருவர் என்பதான உணர்வை வளர்க்க உதவும் என அவர் விளக்குகிறார்.
இதேவேளை பல புதியவர்களுக்கு பூர்வீகக்குடி மக்கள் கலாச்சாரங்களைக் கற்றுக்கொள்ளும் விடயத்தில் தாம் தவறு செய்துவிடுவோமோ என்ற பயம் இருக்கலாம் என Shannan Dodson கூறுகிறார்.
ஆனால் அந்த பயம் உங்களுக்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது எனவும் திறந்த மனத்துடன் கேள்விகள் கேட்கத் தயங்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்துகிறார்.
பூர்வீகக்குடிமக்களுடன் நேர்மையான உறவுகளை உருவாக்க நம்பிக்கை மற்றும் நேரம் தேவை. அவர்களது விடயங்களை செவிகொடுத்துக் கேட்பது மிக முக்கியமான அம்சமாகும். இதற்கு யாருக்கும் விசேட அறிவு தேவையில்லை என Shannan Dodson சொல்கிறார்.

Group shot from the February 2025 anniversary of the National Apology to the Stolen Generations. It includes survivors, descendants, THF staff, Minister for Indigenous Australians Malarndirri McCarthy and other community members. Photo: The Healing Foundation
இது பல புதிய குடியேற்றவாசிகளுக்கு, இந்த நாட்டில் தனக்கான இடத்தை உணர்வதற்கு சக்திவாய்ந்த வழியாக இருக்க முடியும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக SBS South Asian எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்து கொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள். SBS South Asian YouTube channel ஊடாக எமது podcasts மற்றும் videos-ஐப் பார்வையிடுங்கள்.
ஆஸ்திரேலியாவில், புதிய வாழ்க்கையைத் தொடங்குபவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள், பயனடையும் வகையில் மதிப்புமிக்க தகவல்கள் மற்றும் உதவிக் குறிப்புகளை Australia Explained - “ஆஸ்திரேலியாவை அறிவோம்” நிகழ்ச்சித் தொடர் எடுத்து வருகிறது.
உங்களிடம் ஏதேனும் கேள்விகள் அல்லது வேறு தலைப்புகள் குறித்த யோசனை இருந்தால், australiaexplained@sbs.com.au என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்.
Listen to SBS Tamil at 12 noon on SBS South Asian channel on Mondays, Wednesdays, Thursdays and Fridays & 8pm on Mondays, Wednesdays, Fridays and Sundays on SBS Radio 2. Find your area’s radio frequency by visiting our tune in page. For listening on DAB+ digital radio, search for ‘SBS Radio’. On SBS South Asian YouTube channel, follow SBS Tamil podcasts and videos. You can also enjoy programs in 10 South Asian languages, plus SBS Spice content in English. It is also available on SBS On Demand

















