கிரிக்கெட்டை பெண்கள் எப்படி மாற்றியமைத்துள்ளார்கள்?

Australian cricketer Lisa Sthalekar during the ICC Womens World Cup Twenty20 semi final match between Australia and India

Australian cricketer Lisa Sthalekar celebrates after dismissing Indian Mithali Raj during the ICC Womens World Cup Twenty20 semi final match between Australia and India in 2010. Source: AFP / Emmanuel Dunand, Getty Images

கிரிக்கெட்டில் overarm பந்துவீச்சை ஒரு பெண் கண்டுபிடித்தார் என்பதுடன் முதலாவது உலகக்கோப்பை போட்டி பெண்களால்தான் விளையாடப்பட்டது. முரண்பாடாக இருப்பினும், கிரிக்கெட் எப்போதும் ‘ஜென்டில்மேன் விளையாட்டு’ என்று அழைக்கப்பட்டது. Colours of Cricket இன் இந்த 7வது பாகத்தில், ஆஸ்திரேலியாவில் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டுக்கான புதிய சகாப்தத்திற்கு தெற்காசிய பெண்கள் எவ்வாறு பங்களிக்கிறார்கள் என்பதை ஆராய்வோம்.


இளம் பெண்கள் கிரிக்கெட் விளையாடத் தொடங்குவதற்கும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்வதற்கும் பல சவால்கள் இருப்பதாக கூறுகிறார், சிட்னியைச் சேர்ந்த வளர்ந்துவரும் கிரிக்கெட் வீராங்கனை ஐரா பட்டேல்.

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பெண் கிரிக்கெட் வீராங்கனைகளைப் போலவே, ஐராவும் கலப்பு அணிகளில் விளையாடத் தொடங்கினார்.

சிறுமிகளுக்கான சவால்கள் சிறு வயதிலிருந்தே தொடங்குகின்றன என்கிறார் ஐரா பட்டேல்.

இருப்பினும், தெற்காசிய சமூகங்களைச் சேர்ந்த பல பெண்கள் கிரிக்கெட் மீதான தங்கள் ஆர்வத்தைத் தொடர அதிக முயற்சி எடுக்கிறார்கள்.

இரண்டு வீராங்கனைகள், குறிப்பாக 2013 இல் Lisa Sthalekar மற்றும் 2022 இல் Alana King ஆகியோர் ஆஸ்திரேலியாவை உலக சாம்பியனாக்க உதவியுள்ளனர்.

2013 இல் ஆஸ்திரேலியா தனது ஆறாவது மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றபோது, இந்தியாவைச் சேர்ந்த Lisa Sthalekar, finishing catchஐ எடுத்தார்.

சென்னையில் இருந்து மெல்பனுக்கு குடிபெயர்ந்த பெற்றோருக்கு ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் Alana King. 2022 இல் Alana Kingஇன் leg-spin பந்து வீச்சுகள், உச்சப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தன.

Lisa Sthalekar மற்றும் Alana King இருவரும் சிறுவர் அணிகளில் விளையாடத் தொடங்கினர்.

அனைத்து மட்டங்களிலும் கிரிக்கெட் இன்னும் ஆண்களின் விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது என்கிறார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும், கிரிக்கெட் ஆஸ்திரேலிய வாரியத்தின் முதல் பெண்மணியுமான Mel Jones.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் பெண்கள் கிரிக்கெட் அதிக ஆதரவையும் கவனத்தையும் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா இப்போது பெண்களுக்கான சிறந்த லீக் போட்டியை(WBBL) நடத்துகிறது என்பதை நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

இந்தப் போட்டியின் வெற்றிக்கு இந்திய வீரர்கள் எவ்வளவு லாபம் ஈட்டுகிறார்கள்களோ, அதே அளவு பங்களிப்பையும் அளிக்கிறார்கள்.

Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.

சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.

SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.

இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

அடுத்துவரும் பாகங்களைத் தவறவிடாமல் செவிமடுப்பதற்கு SBS Radi App-இல் Colours of Cricket-ஐ பின்தொடருங்கள்.

Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan

Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Kaur Singh

Advisor: Patrick Skene

——————————————————————————————

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 

tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Share

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now