Watch FIFA World Cup 2026™

LIVE, FREE and EXCLUSIVE

இனவெறி மற்றும் கேலி: தெற்காசிய பின்னணிகொண்ட கிரிக்கெட் வீரர்களை எவ்வாறு பாதிக்கிறது?

Sanath Jayasuriya of Sri Lanka

Sanath Jayasuriya celebrates during the 2003 ICC Cricket World Cup semi final match between Sri Lanka and Australia in South Africa. Credit: Hamish Blair, Getty Images

ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களில், வீரர்கள் கேலி மற்றும் கிண்டலுக்கு உள்ளாகுவதை நாம் பார்த்திருக்கிறோம். Colours of Cricketஇன் இந்த இறுதிப் பாகத்தில், மைதானத்தில் இடம்பெறும் கேலி மற்றும் இனவெறியுடன் தொடர்புடைய அவதூறு நடவடிக்கைகள் தெற்காசியாவைச் சேர்ந்த வீரர்களை எவ்வாறு பாதித்தது மற்றும் இந்த சிக்கலை தீர்க்க என்ன நடவடிக்கைகள் உள்ளன என்பதை ஆராய்வோம்.


Published

Updated

By Deeju Sivadas, Vatsal Patel, Sahil Makkar, Abhas Parajuli

Presented by Kulasegaram Sanchayan, Preeti Jabbal

Source: SBS



Share this with family and friends


ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களில், வீரர்கள் கேலி மற்றும் கிண்டலுக்கு உள்ளாகுவதை நாம் பார்த்திருக்கிறோம். Colours of Cricketஇன் இந்த இறுதிப் பாகத்தில், மைதானத்தில் இடம்பெறும் கேலி மற்றும் இனவெறியுடன் தொடர்புடைய அவதூறு நடவடிக்கைகள் தெற்காசியாவைச் சேர்ந்த வீரர்களை எவ்வாறு பாதித்தது மற்றும் இந்த சிக்கலை தீர்க்க என்ன நடவடிக்கைகள் உள்ளன என்பதை ஆராய்வோம்.


ஆஸ்திரேலிய பந்துவீச்சு ஜாம்பவான் Glenn McGrath, 1990களில் இலங்கையின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யாவை "கருப்பு குரங்கு" என்று அழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. 2003 இல் Darren Lehmann இனவெறி அவதூறுகளைப் பயன்படுத்தியதற்காக ஐந்து போட்டிகளில் இடைநீக்கம் செய்யப்பட்டார். இப்படியாக இனவெறிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் இடையே நீண்ட தொடர்பு உள்ளது.

முக்கியமாக 2005 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஆஸ்திரேலிய கிரிக்கெட், இனவாத சர்ச்சைக்குள் அகப்பட்டது.

முதல் டெஸ்ட் போட்டியின் போது, ரசிகர் கூட்டத்தை சேர்ந்த சிலர், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் "காஃபிர்" என்று கத்தினர். இந்த வார்த்தை கறுப்பின ஆப்பிரிக்கர்களுக்கு ஒரு இனவெறி அவதூறாகும்.

Walkley விருது பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் பத்திரிகையாளர் Malcolm Conn, இந்த நாட்டின் உருவாக்கத்தில் இனவெறி அதன் வேர்களைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்

ஆனால் கிரிக்கெட் வரலாற்றாசிரியர் Patrick Skene கூறுகையில், விடயங்கள் முன்னேற்றம் அடைந்தாலும், எங்கள் கிரிக்கெட் ஆடுகளங்களில் இன இழிவுகள் பரவுவது நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்தது என்றும், இனவெறி சம்பவங்கள் ஆஸ்திரேலியாவிற்கு மட்டும் பொதுவானது இல்லை என்றும் கூறுகிறார்.

ஆனால் இந்த நிலை மெதுவாக மாறிவருகிறது. பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா, 2011 சிட்னி ஆஷஸ் டெஸ்டில் அறிமுகமானபோது ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய முதல் முஸ்லீம் வீரர் ஆனார்.

ஆஸ்திரேலியாவில் விளையாடும் community கிரிக்கெட் வீரர் Bhavin Nagar புலம்பெயர்ந்தவர்களுக்காக சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

நீங்கள் மோசமாக நடத்தப்பட்டால் அதைப்பற்றிப் பேசுவது முக்கியம் என்று அவர் கூறுகிறார்.

Colors of Cricket என்பது ஒரு புதிய SBS Podcast தொடர் ஆகும்.

சர்வதேச நட்சத்திரங்கள் மற்றும் வர்ணனையாளர்கள், விளையாட்டு வரலாற்றாசிரியர்கள், ரசிகர்கள் மற்றும் சமூக வீரர்களின் பங்களிப்புடன் இந்த Podcast தொடர் இடம்பெற்றுள்ளது.

SBS பங்களா, SBS குஜராத்தி, SBS இந்தி, SBS மலையாளம், SBS நேபாளி, SBS பஞ்சாபி, SBS சிங்களம், SBS தமிழ் மற்றும் SBS உருது ஆகியன இதற்கு பங்களித்துள்ளன.

இந்தத் தொடரை ப்ரீத்தி ஜப்பல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள்.

Colors of Cricket பாகங்களை செவிமடுப்பதற்கு SBS Radi App-இல் Colours of Cricket-ஐ பின்தொடருங்கள்.

Hosts: Preeti Jabbal and Kulasegaram Sanchayan

Lead Producer: Deeju Sivadas

Producers: Sahil Makkar, Vatsal Patel, Abhas Parajuli

Sound Design: Max Gosford

Program Manager: Manpreet Kaur Singh

Advisor: Patrick Skene

SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது 

tune in  பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.


Latest podcast episodes

Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Watch now